Saturday, January 19

றபியுல் அவ்வல் விசேட பயான்.


அகிலத்திற்கு அருட் கொடைய இவ்வுலகில் உதித்த மகான் எம் பெருமானார் (ஸல்) அவர்களின் புகழ் கூறும் புனித றபியுல் அவ்வல் மாதம் இது.

இலங்கையில் காத்தான்குடி தீன் வீதியில் அமைந்துள்ள மஸ்ஜித் மன்பவுல் ஹைராத்தில்
பெருமானாரின் நினைவாக ஏற்றப்பட்டுள்ள புனிதக் கொடி.
இம்மாதத்தில் எம்பெருமானார் (ஸல்) அவர்கள் இவ்வகிலத்திற்கு றஹ்மத்தாக அனுப்பட்டார்கள் என்பதனை மிகவும் வலிமையாகவும் மிகவும் ஆழமாகவும் விளக்கும் புனித பயான் இது.

பெருமானாரின் பிறப்பை கொண்டாடலாமா? மௌலீத் ஓதுதல் கூடுமா? பெருமானாருக்காக விழா எடுக்கலாமா? என்பது சம்பந்தமாக மிகவும காத்திரமான விளக்கங்களை அதி சங்கைக்குரிய ஷெய்கு நாயகம் பெருமதிப்புக்கும் மரியாதைக்குமுரிய அல்ஹாஜ் மௌலவீ ஏ.அப்துர் ரஊப் மிஸ்பாஹி அவர்கள் சில ஆண்டுகளுக்கு  முன்னால் காத்தான்குடி தீன் வீதியில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் மன்பவுல் ஹைராத்தில் பெருமானாரின் மௌலீத் இறுதி தினத்தில் ஆற்றிய விசேட பயானை இங்கு பதிவிடுகின்றோம்.

அண்ணல் பெருமானார் ஒரு றஹ்மத்

முதலாம் பகுதி

இரண்டாம் பகுதி



பயானை டவுன்லோட் செய்ய Bayan Part1 &  Bayan Part 2
To Download - Click on Bayan and Right click on new window and select "Save as"

Wednesday, January 16

பயணமும் அதன் முடிவும்.

விசேட பயான்
அதிசங்கைக்குரிய ஷெய்கு நாயகம் காதிமுல் கவ்மி அஷ்ஷெய்க் மௌலவீ அல்ஹாஜ் அப்துர் ரஊப் மிஸ்பாஹி, பஹ்ஜி அவர்கள் பல வருடங்களுக்கு முன்னர் ஆற்றிய சிறப்புரை இது.


பயான்

டவுன்லோட் செய்ய Payanam Engea Mudikirathu
(இதன் மேல் கிளிக் செய்து Mouseல் Right Click  செய்து  Save as என்பதை Select செய்யவும்)

மனிதனுடைய பயணம் என்ன? அது எங்கே முடிகின்றது என்பது குறித்து மிகவும் ஆழமான விளக்கத்தினை தந்துள்ளார்கள் ஷெய்குநாயகம் அவர்கள் அவ்வுரையினை இங்கு பதிவிடுகின்றோம்.

Sunday, August 5

பத்ரு ஸஹாபாக்கள் நினைவு தினம்

இன்று பத்ரு ஸஹாபாக்கள் நினைவு தினம்
--------------------------------------------------------------
சென்ற வருடம் நாம் பிரசுரித்த பயான் இவ் வருடம் மீள் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.
-------------------------------------------------------------
இஸ்லாத்தின் எழுச்சிக்கு வித்திட்ட புனித பத்ரு யுத்தம் நடை பெற்ற தினமான ரமழான் 17 ம் தினத்தை முன்னிட்டு சங்கைக்குரிய மௌலவீ மர்ஹூம் பாறூக் (பலாஹி) காதிரி அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்னர் பத்ரு ஸஹாபாக்கள் நினைவு தினத்தன்று இலங்கை காத்தான்குடி பத்ரிய்யஹ் ஜூம்மாப் பள்ளிவாயலில் ஆற்றிய உரையை இவ்வருட பத்ரு ஸஹாபாக்கள் நினைவு விசேட உரையாக தருகின்றோம். அல்ஹம்துலில்லாஹ்
Marhoom. Molavi Farook (Falahi) Khathiri with Ash Shiekh Moulavee Abdur Rauff (Misbahee, Bahji)

Thursday, July 26

கொள்கை விளக்கம்.

ஏகத்துவப் புரட்சியின் 14 ஆண்டுகளின் பின் 1992ம் ஆண்டு  சங்கைகுரிய மௌலவீ மர்ஹூம் பாறுக் காதிரி அவர்கள் கொள்கையின் முக்கியத்துவம் மற்றும் வஹ்ஹாபிகளின் குழறுபடிகள் குறித்து ஆற்றிய வரலாற்றுச் சிறப்பு மிக்க உரை.


Click on link and Right Click your mouse and Select "Save as"
டவுன்லோட் செய்து கொள்ள

Friday, July 6

கொள்கைகாய் உயிர் வாழ்வோம்!

26வது ஹாஜாஜீ மகா கந்தூரி விசேட பதிவு
ஹாஜாஜீ கலை இலக்கிய வட்டத்தின் நினைவாக...

ஈழத்து கஸ்ஸான்
இரண்டாயிரத்தி நான்காம் ஆண்டு காத்தான்குடியிலிருந்து சூபித்துவத்தையும் அதன் தலைமையகமாக ஒளிரும் காத்தான்குடி பத்ரிய்யஹ் ஜும்ஆப் பள்ளிவாயலையும் அழித்தொழிப்பதற்காக அணிதிரண்டு கொண்டிருந்தனர்  எதிரிகள். அப்பிரச்சினையே அந்த ஆண்டில் இலங்கையை உலுக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக அமைந்திருந்தது. இறுதியில் எதிரிகள் இறைவனால் தோற்கடிக்கப்பட்டனர்.

இப் பிரச்சினையை "அந்த ஏழு நாட்கள் பிரச்சினை" என்று நாம் அழைப்போம். இப்பிரச்சினையின்போது இஸ்லாத்தினை தூய சூபித்துவ வழியில் பின்பற்றும் மக்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டன. அவர்கள் மிகவும் துன்புறுத்தப்பட்டனர். காத்தான்குடியில் பல வலிமார்களின் ஷியாரங்கள் மறைக்கப்பட்டன. அதனை புரிந்த துர்ப்பாக்கியசாலிகளில் பலர் இன்று உயிருடன் இல்லை. மற்றும் சிலர் சிதைந்து விட்டனர். இறைவன் தனது நேசர்களை பாதுகாத்தான்.



Click the link to Download "Kolkaikai Uyir Valvoom"
and Right click the mouse select Save as 

இப்பிரச்சினைக்கு சில நாட்களுக்கு முன்னர் நடந்த அஜ்மீர் அரசர், அத்தாயே றசூல், ஏழைகளின் தோழர் ஹழ்ரத் ஹாஜா முயினுத்தீன் சிஷ்தி அவர்களின் மகா கந்தூரியில் ஹாஜாஹி கலை இலக்கிய வட்டம் பிரதி வருடமும் நடாத்தி வந்ததைபோல் அவ்வருடமும் ஒரு கவியரங்கை நடாத்தியது. 

Wednesday, March 21

முஹ்யித்தீன் இப்னு அரபி ரலியல்லாஹு அன்ஹு

இப்னு அறபி நாயகம்
இன்று 21.03.2012 ஷேகுல் அக்பர் "முஹ்யித்தீன் இப்னு அறபி" (றழி) அவர்களின் நினைவு தினம்

ஸுபித்துவ இறைஞானத்தின் தந்தையெனப் போற்றப்படும் இவர்கள் ஸ்பெயினின் மூர்ஸியா எனும் சிற்றூரில் வள்ளல் ஹாத்திம் தாயீன் வமிசவழியில் ஹிஜ்ரி 560 ரமலான் பிறை 17 வியாழக் கிழமை (கி.பி.1165 ஜூலை 29) அன்று பிறந்தார்கள். இவர்களின் இயற் பெயர் அபூபக்கர் முஹம்மத் இப்னு அலீ முஹ்யித்தீன் என்பதாகும். 

இவர்களின் பெற்றோருக்கு 50 வயதாகியும் குழந்தை இல்லாத குறையை ஈராக்கின் பக்தாத் நகர் சென்று முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் எடுத்துரைத்தபோது, அவர்களின் ஆசீர்வாதத்துடன் இவர்கள் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மறைந்து 5 மாதங்களுக்குப் பின் பிறந்தார்கள்.  ஸ்பெயினில் இவர்கள் பெயர் அப்னு சுராக்கா. அரபகத்தில் இப்னு அரபி என்றே அழைக்கப்பட்டார்கள்.

தம் தந்தையிடமும், செவில்லியில் வாழ்ந்த அபூபக்கர் இப்னு கலாப் அவர்களிடமும், இப்னு முஅல்லிஃப், அபுல்ஹஸன் ஷரீஹ், அபுல்காசிம் ஷர்ரத் என்பவர்களிடமும் மார்க்க கல்வி பயின்றனர்.  மேலும் யூத, கிறத்துவ, ஜெராஸ்டிய மதம் பற்றிய நூல்கள், கிரேக்க தத்துவ ஞானம், கணிதம் பற்றிய நூல்களையும் பயின்றார்கள்.

மகான் ஷேகுல் அக்பர் பற்றி சங்கைக்குரிய ஷெய்கு நாயகம் அவர்கள் ஆற்றிய உரை
Play
One Click Download
( To download the Bayan "Right Click" the opening webpage and select "Save as")

Friday, March 16

பூமான் நபீயின் மகத்துவம்.

ரஸூலுல் அக்ரம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகத்துவம் குறித்து எங்களின் கண்ணியத்துக்குரிய ஷெய்குநாயகம் அப்துல் காதிர் ஸூபி ஹலரத் (றஹ்) அவர்கள் ஆற்றிய உரையின் தொகுப்பு


Saturday, March 3

குவலயம் போற்றும் குத்பு நாயகம்


மஹ்பூப சுபஹானீ, மஹ்ஸுகே றஹ்மானீ, முகைதீன் அப்துல் காதிர் ஜீலானி கத்தஸல்லாஹு ஸுர்ரஹுல் அஸீஸ் அவர்கள் அவதரித்த சங்கைமிகு மாதமாகிய இம்மாத்தில் அன்னாரின் புனித மிகு குத்துபிய்யஹ் கந்தூரி உலகெங்கும் நடந்தேரி வருகின்றது. 

இந்த அடிப்படையில் காத்தான்குடி பத்ரிய்யஹ் ஜும்ஆப் பள்ளிவாயலிலும் 27வது வருட மாகா கந்தூரி எதிர்வரும் 04.03.2012 ஞாயிற்றுக் கிழமை இடம்பெறவுள்ளது. இதனை முன்னிட்டு அதிசங்கைகுரிய ஷெய்குநாயகம் மௌலவீ அல்ஹாஜ் அப்துர் றஊப் மிஸ்பாஹி அவர்கள் குத்துப்பிய்யஹ்வின் சிறப்பு குறித்து ஆற்றிய சிறப்புரையினை இங்கு பதிவிடுகின்றோம்.



கவிதை 

குவலயம் போற்றும் குத்பு நாயகம்
--------------------------------------------------
கவிஞர் எம்.ஏ.சீ. றபாய்தீன்
---------------------------------------------------

வலிமார் திலகமே!
வள்ளல் நபிகளின் வாரிசே!
நுபுவத்தெனும் நபித்துவத்தின் முத்து- 
நம் நாயகமென்றால்
விலாயதெனும் வலித்தனத்தின் வித்து நீங்களல்லவா!!
இதனால்தான் இறைவன்
தீனுல் இஸ்லாத்தை
உயிர்ப்பிக்க உங்களை
தீன்தாரியாக முஹ்யித்தீனாக
இந்த அகிலத்திற்கு
அனுப்பி வைத்தான்!

Thursday, January 26

றபீஉனில் அவ்வல் மாத சிறப்பு பயான்.


இஸ்லாத்தின் வசந்த காலமான றபீஉனில் அவ்வல் மாதத்தில் எங்களின் உயிரினும் மேலான உத்தம நபீயின் அவதாரத்தினால் அகிலமே அருட் பிளம்பானது. அன்னாரின் சிறப்புக்களையும் புகழையும் இந்நாளில் விசேடமாக எடுத்தோதுவது எங்களின் மீது கடமையாக உள்ளது. 


"அல்லாஹ்வுடைய சிறப்பைக் கொண்டும் மேலும் அவனது றஹ்மத்தைக் கொண்டும் அவர்கள் சந்தோசமடையட்டும். (அவர்கள் அப்படி சந்தோசமடைவது)  அவர்கள் சேமித்து வைத்திருப்பவைகளை விட மிகவும் சிறந்தது."
-அல்குர்ஆன்-

1981ம் ஆண்டு ஜனவரி திங்கள் 21ம் நாள் அதிசங்கைக்குரிய ஷெய்கு நாயகம் ஞானபிதா அல்ஹாஜ் மௌலவீ அப்துர் றஊப் (மிஸ்பாஹி) அதாலல்லாஹு பகாஅஹூ. அவர்கள் ஆற்றிய நபீகள் நாயகம் (ஸல்) அவர்களின் புகழ் தொடர்பான ஆன்மீக விளக்கவுரை.

குறிப்பு:
இங்கே : சிறப்பு என்பது புனித திரு குர்ஆன் என்றும், றஹ்மத் என்பது கொண்டு நாடப்படுவது நபீகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்றும் தப்ஸீர் கலை மேதை இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் அத்துர்றுல் மன்தூர் என்ற குர்ஆன் விளக்கவுரையில் கூறுகின்றார்கள்.

Thursday, December 1

கர்பலா ஒரு வரலாற்றுப் பார்வை.

  • இமாம் ஹுசைன் (றழி) அவர்களின் புனித மௌலீத் ஷரீப்
  • பழனி பாபா அவர்களின் குரலில் கர்பலா
  • செந்நீர் வடிக்கும் கல்
இமாம் ஹுசைன் (றழி) அவர்களின் புனித மௌலீத் ஷரீபை ஒரே கிளிக் இல் டவுன்லோட் செய்ய "இமாம் ஹுசைன் (றழி) அவர்களின் மௌலீத்" என்பதை கிளிக் செய்யவும்

கர்பலா ஒரு வரலாற்றுப் பார்வை
இஸ்லாத்தில் வருட ஆரம்பமான முஹர்ரம் மாதம் அதிலும் குறிப்பாக ஆஷுரா நாள், பல்வேறு நபிமார்களின் சம்பவத்தில் தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ளது. இந்த முஸ்லிம் சமுதாயம், உயிரினும் மேலான நபிகள் நாயகம் ஸல்... அவர்களை பின்பற்றும் இந்த சமூதாயத்திற்கு இந்த மாதம் எதை தந்தது. 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் ஆஷுரா நாளில் இரண்டு நோன்புகளை தந்தது. வேறு என்ன தந்தது? வேறு என்ன? இந்த சமூதாயத்திற்கு தலை குனிவை தான் தந்தது! காரணம் என்ன?

இந்த சமூதாயத்தில் யாரை கண்ணியப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டதோ, யாரை நேசிப்பது ஈமான் என்று கூறப்பட்டதோ, யாருக்காக தொழுகையில் சலவாத் ஓதப்படுகின்றதோ, யார் சுவனத்து இளைஞர்களின் தலைவர் என்று நபிகளாரால் சொல்லப்பட்டதோ, 

Monday, November 14

சொற்களால் பேசும் கவிஞர்கள்!

அகமியத்துக்காக பைசான் மதீனா
கிடைபதற்கரிய நான்கு இஸ்லாமிய கீதங்கள். 
கலைமாமணி நாகூர் சலீம்
உலகில் பிறந்த அனைவரும் ஒவ்​வொறு விசேட திறமையுடனேயே படைக்கப்பட்டுள்ளனர். அதனை கண்டறிந்து எல்லோரும் பயன் படுத்திக் கொள்வதில்லை. அவ்வாறு பயன் படுத்திக் கொள்பவர்கள் அதன் மூலம் தான் வாழும் சமூகத்திற்கு தன்னால் முடிந்ததை செய்பவர்கள். நன்றிக்குறிவர்கள். அவர்களுக்கு நாங்கள் நன்றி சொல்ல வேண்டும். 

ஈழத்து ஹஸ்ஸான்
மௌலவீ இப்றாஹிம் நத்வீ
இந்த வகையில் ஆத்மீகக் கவிஞர்கள்  பலர்  தமிழ் பேசும் உலகில்வாழ்ந்துள்ளனர். அவர்களின் திறமைகளுக்கு ஈடானவர்கள் அவர்கள் மட்டும்தான்.

இப்படிப்பட்ட தலைசிறந்த கவிஞர்களின் இஸ்லாமிய இறைஞானத்தை உலகிற்கு தனது எளிய சொற்களால் கோர்த்து பாடலாக மெருகேற்றி பாமரர்களை சிந்திக்கச் செய்தவர்களை எந்த வார்த்தைகளால் புகழ முடியும்?

வாழ்க்கை என்ற வண்டியை இழுப்பதற்கே நேரம் குறைவாக உள்ள காலத்தில் நல்ல விடயங்களை கேட்கப் பார்க்க மனிதர்களுக்கு நேரம் இல்லை. போகும் வழியில் காதில் வாங்கிக்கொள்ளப் படுபவையே அவர்களின் சிந்தனைக் கருவாகி விடுகின்றது. அதுவும் இசையுடன் இனிமையாக இருந்தால் சொல்லவும் வேண்டுமா! 

பாடல்களை கேட்க உள்ளே செல்லுங்கள்

Saturday, November 12

காதிரிய்யஹ் திருச்சபையில் ஷைகுனா ஆற்றிய உரை..

05.11.2011 சனிக்கிழமை பின்நேரம் ஞாயிற்றுக் கிழமை இரவு சுமார் 9.00 மணியளவில் இடம் பெற்ற புனித காதிரிய்யஹ் ராத்திப் மஜ்லிஸில் சமூகளித்து சிறப்புரை ஆற்றிய அதிசங்கைக்குரிய ஞானபிதா ஷைகு நாயகம் மௌலவீ. அல்ஹாஜ் அப்துர் றஊப் (மிஸ்பாஹி, பஹ்ஜீ) அவர்களின் சிறப்புரையை இங்கு தருகின்றோம்.


நன்றி
"அஸ்ஹாபுஷ் ஷம்ஸ்"

Saturday, November 5

ஹஜ்ஜுப் பெருநாளின் தத்துவங்கள்!


ஹஜ்ஜுப் பெருநாளின் தத்துவங்கள் பற்றி அதிசங்கைக்குரிய ஞானபிதா ஷெய்குனா அப்துர் ரஊப் மிஸ்பாஹி, பஹ்ஜீ அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆற்றிய சிறப்புரை.




                                  Download the Bayan

Thursday, October 27

ஆலங்களின் அகமியம்

பாராகி யெய்பொருளு மாகியப் பார்தனிற் 
பஞ்ச வர்ணங்களாகி 
பற்பல விதங்கொண்ட விந்துநாதத்துட் 
பதிந்துமுளை பருவமாகி 
வேரோடி யோக பூமிக்குள் வளர்ந்தருள் 
விளைந்தொழுதுகு தருவுமாகி 
விண்ணாகி, மண்ணாகி, யெண்ணாகி. வெகுவாகி 
விரிவாகி மறைவுமாகி 
தூராதி தூரத்தி னுந்தூர மாகியதி 
சூழ்ச்சிச் சமீப மாகித் 
தோற்றுமொளி புரியவடி யேனுமுமை நம்பினேன் 
துரிதமுட னாளுதற்கே 



வாராரு மருண்மாரி யுள்ள நீர் பின்றொடர
வள்ளலிற சூல்வருகவே வளருமரு ணிறைகுணங் 
குடிவாழு மென்னிருகண்
மணியே முஹ்யித்தீனே.
--------குணங்குடி மஸ்தான் சாகிப் அவர்கள்------------

ஆலங்களின் அகமியம் எனும் தலைப்பில் அதிசங்கைக்குரிய ஞானபிதா ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் அப்துர் றஊப் மிஸ்பாஹி,பஹ்ஜீ அவர்கள் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஆற்றிய உரை..

Thursday, August 18

கல்பின் கறை நீக்கும் நோன்பு

அதி சங்கைக்குரிய ஞானபிதா ஷெய்குத் தர்பிய்யஹ் அப்துர் ரஊப் மிஸ்பாஹி, பஹ்ஜி அவர்கள் சில வருடங்களுக்கு முன்னர் புனித ரமழானை சிறப்பிக்கும் முகமாக ஆற்றிய உரையினை இங்கு தருகின்றோம்.


Wednesday, August 3

திருக்கலிமா தருகின்ற உண்மையான பொருள் என்ன?

திருக்கலிமா தருகின்ற உண்மையான பொருள் என்ன? என்ற தலைப்பில் அதிசங்கைக்குரிய ஞானபிதா, ஈழத்தின் சொற்கொண்டல் அஷ்ஷெய்க் மௌலவீ அல்ஹாஜ் அப்துர் ரஊப் மிஸ்பாஹி பஹ்ஜி அவர்கள் ஆற்றிய பலநூறு உரைகளிலிருந்து ஒன்றை ஆத்மீக இதயங்களின் வேண்டுகோளுக்கு இணங்க தருகின்றோம்.

""லாயிலாஹ இல்லல்லாஹ்" தருகின்ற ஏகத்துவ ஞானத்தை அறியாதவர் முகம்மதுர்றசூலுல்லாஹ் என்ற தத்துவத்தை அறிய மாட்டார். இரண்டையும் அறியாதவர் "விசுவாசியாகவும் முடியாது.

முகம்மதுர்றஸூல்லாஹ் என்பது இரத்தினக்கல்லாயும் அவ்விரத்தினக்கல் விளைந்த பூமி அல்லாஹ்வின் தாத் வுஜூதாயுமிருக்கிறது என்பதை அறியாதவரையும் மேலும், அந்த பூமிக்கும் அதில் விளைந்த இரத்தினக்கல்லுக்குமுள்ள குர்பிய்யத் நெருக்கம் தொடர்பு எவ்வாறு என்பதை விளங்காதவரையும் முகம்மத் (ஸல்) என்ற இரத்தினக்கல்லின் தகுதியை உணரவே முடியாது.

-1982 ம் ஆண்டு ஜனவரிமாத ஞானச்சுரக்கத்தின் பேரின்ப அமுத இதழிலிருந்து-



கவனத்திற்கு:
"இதனை டவுன்லோட் செய்துகொள்ள" என்ற எழுத்தின் மேல் கிளிக் செய்யவும் அதன்பின் வரும் ஸ்கிரினில் டவுன்லோட் என்பதை கிளிக் செய்யவும்

Monday, August 1

கருணை உஸ்தாதே!

இனிய றமழானை சிறப்பிக்கும் முகமாக கடந்த 19.07.2011 அன்று ஹாஜாஜீ கோடியேற்றத்துடன் வெளியிடப்பட்ட "ஷம்ஸ் அலைகள்" இஸ்லாமிய இசைப் பேழையிலிருந்து ஒரு இனிய பாடலை வாசகர்களுக்காக பிரசுரிக்கின்றோம்.

இப்பாடலை இயற்றியவர் : 
ஈழத்து ஹஸ்ஸான், கவித்திலகம் மௌலவி எச்.எம்.எம்.இப்றாஹீம் (நத்வீ)
பாடலைப் பாடியவர் :
பாடகர் - கே.எம். அமானுல்லாஹ் (றூஹுல்லாஹ்)
சங்கைக்குரிய அப்துல் ஜவாத் பெரிய ஆலிம் வாப்பா நாயகம் (வலி) அவர்களின் திருத் தோற்றம்

Saturday, July 23

ஹாஜாஜீ கந்தூரி நினைவுகளில்..

மர்ஹூம் பாறுக் காதிரி அவர்கள்
அன்று 04 வது வருட மகா கந்தூரி மிக விமர்சையாக எமது அவ்லிய்யாக்களின் தளமான காத்தான்குடி பத்ரிய்யஹ் ஜூம்மாப் பள்ளிவாயலில் கரீப் நவாஸ் பொன்டேஷன் ஏற்பாட்டில் நடந்தேரிக்கொண்டிருந்தது.

இறுதி தினமான அன்று மௌலவீ பாஸில் றப்பானி பட்டமளிப்பு விழா நடைபெற்று மூன்று மௌலவீமார்கள் மௌலவீ பாஸில் பட்டம் பெற்றுக் கொண்டனர்

1990 ம் ஆண்டு நாலாம் வருட அஜ்மீர் ஹாஜா முயீனுத்தீன் ஷிஷ்தி அவர்களின் மகா கந்தூரியில் சங்கைக்குரிய மௌலவீ மர்ஹூம் பாறுக் காதிரி அவர்கள் பட்டமளிப்பு விழாவின் பின்னர் பரகத்துக்காக அஜ்மீர் அரசர் அவர்களைப் பற்றி ஒரு சிறிய உரையை ஆற்றி அத்துடன் அஸ்மாஉ ஹாஜா (அஜ்மீர் ஹாஜா நாயகமவர்களின் திருநாமங்கள்) ஓதி அம்மஜ்லிசை பெரிய துஆ பிராத்தனையுடன் இனிதே நிறைவு செய்தார்கள்.

சங்கைக்குரிய மர்ஹூம் பாறுக் காதிரி அவர்கள் ஆற்றிய சிறப்புரை இணைக்கப்பட்டுள்ளது

Tuesday, November 16

தௌஹீத் வாதிகளின் உள்ளம் சுத்தமாக இருக்க வேண்டும்

கடந்த 03.09.2010 அன்று இலங்கையில் தௌஹீத் வாதிகளின் சுவர்கபுரியான காத்தான்குடி பத்ரிய்யஹ் ஜும்மாப் பள்ளிவாயிலில் முப்பெரும் நாதாக்களின் கந்தூரி தினத்தன்று “கல்பின் கறைகள்” என்ற தலைப்பில் அதிசங்கைக்குரிய ஞானபிதா “காத்தமுல் வலி” அப்துல் ரஊப் மிஸ்பாஹி அவர்கள் ஆற்றிய சிறப்புறை எமது “ஈதுல் அல்ஹா” விசேட பிரசுரமாக பிரசுரிக்கப்படுகின்றது. 

Saturday, October 16

கல்வின் கரைகள்

 
Design by Ahamiyam themes | Hosted by Fizmad - Ahamiyam,UK | Ahamiyam followship,UK