26வது ஹாஜாஜீ மகா கந்தூரி விசேட பதிவு
ஹாஜாஜீ கலை இலக்கிய வட்டத்தின் நினைவாக...
| ஈழத்து கஸ்ஸான் |
இப் பிரச்சினையை "அந்த ஏழு நாட்கள் பிரச்சினை" என்று நாம் அழைப்போம். இப்பிரச்சினையின்போது இஸ்லாத்தினை தூய சூபித்துவ வழியில் பின்பற்றும் மக்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டன. அவர்கள் மிகவும் துன்புறுத்தப்பட்டனர். காத்தான்குடியில் பல வலிமார்களின் ஷியாரங்கள் மறைக்கப்பட்டன. அதனை புரிந்த துர்ப்பாக்கியசாலிகளில் பலர் இன்று உயிருடன் இல்லை. மற்றும் சிலர் சிதைந்து விட்டனர். இறைவன் தனது நேசர்களை பாதுகாத்தான்.
இப்பிரச்சினைக்கு சில நாட்களுக்கு முன்னர் நடந்த அஜ்மீர் அரசர், அத்தாயே றசூல், ஏழைகளின் தோழர் ஹழ்ரத் ஹாஜா முயினுத்தீன் சிஷ்தி அவர்களின் மகா கந்தூரியில் ஹாஜாஹி கலை இலக்கிய வட்டம் பிரதி வருடமும் நடாத்தி வந்ததைபோல் அவ்வருடமும் ஒரு கவியரங்கை நடாத்தியது.
அதனை தலைமை தாங்கி நடாத்தினார்கள் சங்கைகுரிய மௌலவீ ஈழத்து கஸ்ஸான் இப்றாஹிம் நத்வீ அவர்கள். அக்கவியரங்களில் வரலாற்றுப் புகழ் பெற்ற ஒரு கவிதையை தனது சொந்தக் குரலில் அவர்கள் பாடினார்கள்.
இதில் ஹாஜாஜி கலை இலக்கிய வட்டத்தின் ஆயுட்காலத் தலைவர் என்று சங்கைகுரிய ஷெய்கு நாயகம் அவர்களினால் போற்றப்பட்ட வலீமார் புகழ் கவிஞர் ஜப்பார் ஜீ.எஸ்.ஓ உட்பட கொள்கைக் கவிஞர் றபாய்தீன், கவிஞர் றஹீம் மற்றும் கவிஞர் றிழ்வான் போன்றோர் கவிதைகளைப் பாடினர்.
சுமார் 30 நிமிடங்கள் கவி பாடிய ஈழத்து கஸ்ஸான் அவர்கள் ஏகத்துவ வரலாறு அது கடந்து வந்த பாதை, ஈமானுக்காக நாம் அனுபவித்த துன்பங்கள் அனைத்தையும் தனது கவிக்குள் முடக்கினார்கள். சங்கைக்குரிய ஷெய்கு நாயகம் அவர்களின் வரலாற்றையும் பாடினார்கள்.
கேட்போர் அனைவரையும் உணர்ச்சியூட்டக்கூடிய இக்கவிதையை வழங்கிய ஹாஜாஜீ கலை இலக்கிய வட்டம் இன்று இயங்கவில்லை.
இது ஒரு கவலை மிகு செய்தியாக அமைந்துள்ளதுடன் அது மீண்டும் உயிர் பெற வேண்டும் என்ற ஆதங்கங்கம் அத்வைதிகளான எங்களின் ஆதங்கமாக உள்ளது.
அகமியம் இணையத்தளம் வரலாற்றுச் சிறப்புமிக்க இக் கவிதையை தனது வாசகர்களாகிய உங்களுடன் பகிந்து கொள்ளும் இவ்வேளையில் ஹாஜாஜீ கலை இலக்கிய வட்டம் மீண்டும் உயிர் பெற வேண்டும் என்ற ஆதங்கத்தையும் அதன் உறுப்பினர்களுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றது.

நன்றி
அகமியத்துக்காக.
தப்லே ஆலம்-கல்முனை.

Posted in: