ஸலாத்துப் பா

5ம் திகதி சனிக்கிழமை பெப்ரவரி மாதம் 2011 ஆண்டு அதிசங்கைக்குரிய ஞானபிதா “காதமுல் வலீ, “காமில் முக்கமில்” அஷ்ஷெய்ஹ் அல்ஹாஜ் அப்துர் ரஊப் (மிஸ்பாஹி, பஹ்ஜி) அவர்களின் 67 வது பிறந்த தினத்தை முன்னிட்டு யாத்து வெளியிடப்பட்டது. 

கவியாக்கமும் வெளியீடும் 
காத்தான்குடி பைசான் மதீனா 
05.02.011 
-------------------------------------------------------------------------------
கவிஞரின் வேண்டுகோள்
இந்த ஸலாத்துப் பா ஆனது கண்ணியத்துக்குரிய ஷெய்கனா அவர்களின் மீது கொண்ட அன்பின் காரணமாகப் பாடப்பட்டதாகும். இதனை பார்ப்பவர்களும், படிப்பவர்களும் மிகவும் கண்ணியமாகவும், ஷெய்கனா அவர்களினது அன்பை பெறும் நோக்கிலும் மட்டுமே பாடுவதற்கு அனுமதிக்கப் பட்டுள்ளீர்கள். இதில் மாற்றங்கள் செய்வதோ, மரியாதைக்குறைவாகப் பாவிப்பதோ கண்டிப்பாக தவிர்க்கப்பட்டுள்ளது. 
------------------------------------------------------------------------------------

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் 

(1) 
காத்த மன்னில் பூத்தவரே 
கருணை வலீயின் வாரிசே 
கண்ணிய காலேகமே 
கிப்லதுல் முஹக்கிகீன் தந்த தவசீலரே! 
யாஷெய்ஹனா ஸனதனா வ கௌதனா 
அஸ்ஸலாமு அலைக்கும் 

(2) 
வேந்தர் உங்கள் அவதரிப்பால் 
வேற்றுமை அறிந்தோமே 
வேதமும் அறிந்தோமே 
வேந்தர்களின் வேந்தே 
வேதாந்தன்! 
எங்கள் ஸலாம். 

(3) 
காணிக்கைப் பணமில்லை 
கனிந்து பாடத் தேரியவில்லை 
போற்றி தங்களைப் புகழ்ந்திடவே 
பொடிப்பயல் நான் புலவனில்லை 
பொறுமையுடன் இக்கவியை 
பொறுத்துக் கொள்வீர் 
புண்ணியரே! 

(4) 
நாற்றிசையும் அறிந்திடவே 
நாற்சொல்லை விளக்கிவைத்தீர் 
நாவால் புரட்சி செய்தீர் 
நாடெல்லாம் துலக்கிவைத்தீர் 
நாயனைக் கண்டவரே 
நாவிகனே 
எங்கள் ஸலாம் 

(5) 
பூவுலகைப் புரிந்து கொண்டீர் 
பொறுமையினைப் போர்த்திக் கொண்டீர் 
புயலடிக்கும் வேளையெல்லாம் 
நபீகளாரின் குணத்தைக் கொண்டீர் 
நல்லொழுக்க சீலரே! 
நபீகளாரின் நேசரே! 
நவின்றோமே! எங்கள் ஸலாம் 

(6) 
சூட்சுமத்தைப் புரியாமல் – கயவர் 
சூழ்ச்சி செய்த வேளையிலே 
சுனாமியாய் எழுந்தவரே 
சுகமனைத்தும் துறந்தவரே 
சூறாக்கள் அறிந்தவரே 
சூபிகளின் சூரியரே! 
எங்கள் ஸலாம். 

(7) 
வலீகளின் வாரிசே 
வலீகளில் திரு முரசே 
வறிய ,இந்த ஏழைக்கு 
வாரி வழங்குபவரே! ஈகையாளரே! 
வஞ்சனைகள் வாராது 
வள்ளலே காத்தருள்வீர்! 

(8) 
திரு நபியின் திருமுகத்தை 
தினமும் காண்பவரே 
தீன் கமழும் குத்பிய்யத்தில் 
நெடுநாள் திழைத்தவரே 
திங்களே! 
ஆலம்பனா 
எங்கள் ஸலாம் 

(9) 
வேற்றுமையின் சத்துருவே 
ஒற்றுமையின் சற்குருவே 
இலயித்தல் இஸ்லாத்தின் 
இலக்குச் சொன்னவரே! 
இறைவனின் அருளே 
இறைநபி இயலே 
எங்கள் ஸலாம் 

(10) 
அவன், இவன் என்பேனோ 
அகிலமும் என்பேனோ 
ஆயிரம் மறைகளிலும் 
அஹதே என்பேனோ 
ஆய்தல் தெரியவில்லை 
அடியேனுக்கு அறிவுமில்லை 
அருளிடுவீர் அண்ணலே! 

(11) 
குருவில்லா குறையானேன் 
குறையிலும் குறைவானேன் 
குற்றங்கள் குறைகளேற்று 
குருவாக கரம் ஏற்ப்பீர் 
குணக்குன்றே குணம் தாரீர் 
குணவதனே! 
எங்கள் ஸலாம் 

(12) 
மௌத்தை மௌத்தாக்கி 
மனம் மரிக்கச் சொன்னவரே 
குணம் கெட்ட கோணங்கி நான் 
மனம் கெட்ட மடயனாம் 
மரியாதை மறந்த்திற்காய் 
மன்னிப்பீர்! 
மாவலீயே, எங்கள் ஸலாம் 

(13) 
வார்தையினால் வழக்குவைத்தேன் 
வரைமுறை, வரிமுறை நானறியேன் 
வறியனை யணைத்து வழங்காவிடின் 
வழிமுறையளித்து காக்காவிடின் 
வதைந்து வதைந்து வாடிடுவேன் 
வள்ள்ளே! 
வாகை நபீயிடம் முறையிடுவேன் 

(14) 
திக்கோ திசையோ புரியவில்லை 
தினமும் துதிக்க திராணியில்லை 
திங்களே! திரவியம் தாராவிடின் 
தின்மை தீண்டும் ஆளாவேன் 
தீய நரகிற்கிரையாவேன் 
தீட்சையளித்து திருத்துங்களேன் 
திவ்வியரே! எங்கள் ஸலாம். 

(15) 
உப்பு உதித்த நீரினிலே 
உப்பு தானே அழிவதுபோல் 
உலகின் உண்மை உருவதனை 
உணர்த்தி உயர்ந்த உண்மை வலீ 
உங்களை உணரா ஊழ்மனிதர் 
உரைகல்லுக்கும் உதவார் சத்தியமே! 
ஊழியரே! எங்கள் ஸலாம். 

(16) 
இறைஞானம், மறைஞானம் பேருரைப்போர் 
ஞானக்கூத்தன் ஞானே என்போர் 
ஞானச்சித்தன் நா திறப்பால் 
ஞானோதயமானாரே! 
ஞானிகளின் ஞானியான 
ஞானமகான், ஞானபிதா! 
எங்கள் ஸலாம் 

(17) 
சித்தம் சிறிதே சிதறியோரும் 
சித்தப்பிரமை கொண்டோரும் 
சின்ன, பெரிய சீரழிவுகளால் 
சிக்கி முக்கி நிற்போரும் 
சித்தர் தங்கள்முன் சிரம் பணிந்தால் 
சிகிச்சையளித்து காப்பவரே 
சிந்தை தெளிந்தவரே! எங்கள் ஸலாம். 

(18) 
அபுல் இர்பான் திரவியமே 
அப்துல் காதிர் வலீ அகமியமே 
அப்துர் ரஷீத் வலீ அறிவகமே 
அஜ்மீர் அரசரின் ஆதிக்கமே 
அன்பே, அறிவே, அருள்வடிவே 
ஆலிமுல் ஆலமே 
எங்கள் ஸலாம் 

(19) 
ஏற்றுக் கொள்வீர் என் கவியை 
ஏகனை அறியா எடுபிடியை 
ஏனோ என்னை சோதிக்கிறீர்! 
ஏதோ எரிமணி தரப்போகிறீர் 
ஏதும் அறியேன்! எங்குகின்றேன்! 
ஏக்கற்று ஏகாந்தம் தேடுகின்றேன் 
ஏற்றுக் கொள்வீர்! 

(20) 
கத்திக் கத்தி களைத்துவிட்டேன் 
கணக்க அழுது சலித்துவிட்டேன் 
கண்மனியே கருணை செய்வீர் 
ஹக்கன் சமூகம் சேர்த்துவைப்பீர் 
கடைசி காட்சி கனவிலுமாக 
கருணை கூர்ந்து காத்திடுவீர் 
காதிமுல் கவ்மி! எங்கள் ஸலாம் 

(21) 
மதீனத்து அரசே எங்கள் ஸலாம் 
அரசர் தம் அஸ்ஹாப் எங்கள் ஸலாம் 
அஹ்லுல் பைத்தே எங்கள் ஸலாம் 
பக்தாதின் மதியே எங்கள் ஸலாம் 
கிப்ரீதுல் அஹ்மர் எங்கள் ஸலாம் 
குத்துபுல் ஹிந்தே எங்கள் ஸலாம் 
கஞ்சேசவா எங்கள் ஸலாம் 
கோயாத்தங்கள் கோத்திரமே எங்கள் ஸலாம் 
கண்ணூரின் கண்மனியே எங்கள் ஸலாம் 
ஆலிமுல் கபீர் எங்கள் ஸலாம் 
அஸ்ஸலாமு அலைக்கும். 

--------------------------------------வேண்டல்-------------------------------------- 

(22) 
மனதில் தீரா பிணி கொண்டேன் 
மன்னர் தங்களை மணங்கொள்ள 
மனமும், மதியும், மற்றனைத்தும் 
மாவலீயின் பாதத்திற்கே 
மரத்தல், மயக்கம், மரணமென்று 
மண்ணோடு மண்ணாகுமுன்னே 
என்னை நானே ஒப்படைத்தேன் 

(23) 
கடைசி உறக்கமெனை தழுவியதும் 
கழுவி, கபனிட்டு கடமை கழித்து 
கண்ணியர் கப்ரின் வாயலிலே 
காணவருபவர், கால் பதிக்கும் முற்றத்திலே 
கடைசியடக்கம் செய்திடுவீர் 
மோட்சம், மோட்சம், மோட்சம் பெற்றேன் 
காருண்ய நபீ கவ்மினிலே 

-முற்றும்- 

இந்த ஸலாத்துப்பா ஆனது கவிஞர் பைஸான் மதீனா அவர்களினால் அதி சங்கைக்குரிய ஷெய்கனா மௌலவி அல்ஹாஜ் அப்துர் ரஊப் (மிஸ்பாஹி, பக்ஜி) அவர்களின் மீது கொண்ட அன்பின் காரணமாக பாடப்பட்டு அன்னாரின் 67 வது பிறந்த தினமான 05.02.2011 அன்று றப்பானியா மகளீர் கழகம் நாடாத்திய பிறந்தநாள் வீசேட நிகழ்வின்போது வெளியிடப்பட்டது.

 
Design by Ahamiyam themes | Hosted by Fizmad - Ahamiyam,UK | Ahamiyam followship,UK