Thursday, March 25

கெளதுல் அஃலம் அப்துல் காதிர் ஜீலானி (றழி) அவர்களின் ஞாபகார்த்த தினம்.

வலீகட்கரசர் கெளதுல் அஃலம் அப்துல் காதிர் ஜீலானி நாயகத்தின் ஞாபகார்த்த தினத்தை முன்னிட்டு இந்த விசேட கட்டுரையும் பிரசுரிக்கப்படுகின்றது.


வலிகட்கரசர் குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் ஆண்டகை (றழி) அவர்களின் முத்தான உபதேசங்கள்.

உபதேசம் ஒன்று
மெய் விஸ்வாசம் கொண்டவனுக்கு வாழ்கையில் சகல நிலைமைகளிலும் மூன்று விசயங்கள் இன்றியமையாதவை, அவை அல்லாஹிவின் கட்டளைகளுக்கு கீழ் படிந்து நடப்பதும், விலக்கப்பட்டவற்றை விலக்கலும், இறைவன் திருச்சித்தத்தை மனமுவந்து ஏற்பதுமாகும். குறைந்த பட்சம் மெய் விசுவாசி இம்மூன்று அனுஷ்டானங்களிலுமாவது ஒழுங்காய் இருந்து வரவேண்டும் ஆகையால், அவன் இவற்றுக்காகவே மனத்தைத் தயாராக்கி, இவையற்றியே தன்னூல் பேசி, தன் அங்கங்களை இவற்றிலேயே ஈடுபடுத்தியவனாய் இருப்பதே பொருத்தமாகும்.

உபதேசம் இரண்டு 
உண்மை விசுவாசத்துடன் (நபிபெருமான் (ஸல்) அவர்களின் பாதச்சுவட்டை பின்பற்றி நடவுங்கள்! மார்க்கத்தில் புதுமை பித்அத்) ஆனவைகளை உண்டாக்க வேண்டாம். (இறைவனுக்கும் அவன் தூதரக்கும்) கீழ்படியுங்கள் வழி தவறிவிடவேண்டாம் ஏகத்துவத்தைப் பாதுகாத்து இறைவன் எத்தீமையையும் உண்டாக்கி விட்டான் என்று கூறாதபடி உங்களைப் பேணிக் கொள்ளுங்கள் 

அவன் சத்தியத்தை நிலை நாட்டி, ஐயத்திற்கு இடம் தறாதிருங்கள்! பொருமையுடன் நிதானம் தவறாதிருங்கள் உறுதியுள்ளவர்களாய், ஓடிப்போகாதிருங்கள், உங்கள் தேவைகளுக்கு அவனிடமே முறையிடுங்கள்


அம்முறையீடு கேட்கப்படுவதற்கு பொறுமையுடன் காத்திருங்கள்! அவனுக்கு அடிபணிவதில் ஐக்கியப்படுங்கள், ஒற்றுமைக்குலைவுக்கு இடந்தரவேண்டாம் பரஸ்பரம் அன்பு காட்டுங்கள் ஒருவரை ஒருவர் துவேசிக்க வேண்டாம்.


 தீய பழக்கங்களிலிருந்து விலகுங்கள் அவற்றால் மாசடைந்து விடாதீர்கள் உங்கள் ரக்ஷகனுக்கு அடிபணிவதன் மூலம் உங்களை அழகுபடுத்துங்கள் அவனிடம் கவனம்காட்டத்தவற வேண்டாம் 


நீங்கள் (செய்த தவறுகள் குறித்து) பச்சாதாப்படத் தாமதம் வேண்டாம் அல்லும் பகலும் உங்களை சிருஷ்டித்தவனை நினைவு கூறாது சாக்குப்போக்குச் சொல்லவேண்டாம்.


 இவ்விதம் சதா அவன் தியானத்திலேயே இருந்தால் உங்களிடம் கருணை காட்டப்படலாம். உங்களுக்கு நல்லதிஷ்டம் உண்டாகலாம் நரகாக்கினியிலிருந்து விமோசனமும் சுவர்க்க வாழ்வு பெற்றுச் சாந்தியின் உறைவிடத்திலே ஹூரிகளின் குழாத்திடையில் இறைவனின் ஆசியோடு தரிபட்டிருக்கலாம் அதே நிலையில் என்றும் இருக்கலாம். 


நல்ல குதிரைகள் மீது சவாரி செய்யலாம். கண்ணழகிகளின் நேசத்தில் மகிழலாம். பலவித வாசணைகளும் பெண்களின் இன்னிசையும் மற்றும் பல பாக்கியங்களும் அங்கே கிட்டும் உயரிய வாணுலகில் நபிமார்கள்,சத்திய நேயர்கள், வீரத்தியாகிகள், நேர் வழியாளர்களின் கூட்டத்திற்கு உயர்த்தப்பட்டவர்கள் ஆகுங்கள் 

உபதேசம் மூன்று 
அல்லாஹ்வின் அடியான் ஒரு சோதனைக்கு ஆளாகும்போது முதலில் தன் முயற்சிகளால் அதிலிருந்து தப்பிக்க முயல்கிறான் அவன் தோல்வியுற்றால் மானிடரிடையே உள்ள அரசர், அதிகாரிகள், போன்றவர்களின் உதவியை நாடுகிறான்.


 நோய்,நொடியாக இருப்பின் வைத்தியனுடைய உதவியை நாடுகிறான் இதன் மூலம் சோதனையிலிருந்து விடுபட இயலாது போய்விடின் அதன் பின் அவன் சர்வலோக இரட்சகனான அல்லாவின் பக்கம் திரும்புகிறான் தொழுகையாலும், பிரார்தனையாலும் பணிவோடு அவனிடம் விண்ணப்பம் செய்கிறான். 


தன்னாலேயே நிவர்த்திகாண முடியும்வரை அவன் பிறர் உதவியையோ தன் சிருஷ்டியாளன் உதவியையோ நாடமாட்டான். 

அல்லாஹ்விடமிருந்து அவனுக்கு உதவி கிடைக்காவிட்டால் அவன் சந்நிதானத்தில் விழ்ந்து, இரந்தும், மண்றாடியும், பணிவோடு வேண்டியும், பயபக்தியோடும், நம்பிக்கையோடும் தன் தேவையைச் சமர்ப்பித்தும் முறையிட்டவாறே கிடப்பான். 


சர்வ வல்லமையாளனான அல்லாஹ் அவனை அதிகம் சோதிப்பான் உலகிலுள்ள சகல வழி வகைகளும் அவனுக்கு இல்லாதுபோய்விட்டன என்றாகும்வரை அவனுடைய பிரார்தனையை ஏற்க்கமாட்டான். அதன் பின் அல்லஹ்வின் கட்டளையும் செயலும் அவனிடம் வெளியாகும் 


அல்லாஹ்வின் இந்த அடியான் சகல உலகப்பாதைகளையும், உலகின் நடவடிக்கைகளையும், முயற்சிகளையும் விட்டு அப்பாலாகிவிடுவான் தன் ஆத்மாவை மட்டும் தன்னகத்தே கொண்டவனாய் இருப்பான் 

இவ்வித நிலையில் அவன் சர்வ வல்லமையாளனான இறைவனின் வேலையையன்றி வேறு எதையும் காணான். அவசியமாக நிச்சயபூர்வமான அளவுக்கு ஏகத்துவத்தில் அவன் நம்பிக்கை கொண்டவனாகிறான் எதையும் செய்பவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. 

எதையும் அசைப்பவனும், நிறுத்துபவனும் அவனன்றிவேறு யாருமில்லை எந்த நன்மை தீமையும் எந்த இலாப நஸ்டமும், எந்த இன்ப துன்பமும், எந்த எடுத்தலும் கொடுத்தலும், எந்த திறப்பும் அடைப்பும் எந்த ஜீவ மரணமும், எந்த கௌரவ அகௌரவமும், எந்தச் செல்வமும் வறுமையும் அவனாலன்றி வருவதில்லை என்பதை இன்னிலையில் அவன் உணர்வான். 

இதன் பின் தன்னை பாலுட்டி வளர்க்கும் தாதியின் கையிலுள்ள குழந்தையைப்போல, தன்னை குளிப்பாட்டுபவர்கள் கையில் கிடக்கும் மையித்தைப்போல, பூமியில் வைக்கப்பட்டு தன்னை மட்டையாள் அடிக்கப்போகிறவர் முன்கிடக்கும் பந்தைப்போல அவன் அல்லாஹ்வின் திருச்சமூகத்தில் சரணடைந்து சுழன்றுகொண்டு, உருண்டு கொண்டும் இருப்பான்.


தன்னிடமோ தன்னருகில் உள்ளோர்களிடமோ அசைவதற்குக் கூடப் பலம் இல்லாதிருப்பதைக் காண்பான். இவ்விதமாக அவன் தன் எஜமானனின் வேலையுள் மூழ்கித் தன்னகத்தில் இருந்தே மறைந்தவனாகி விடுவான். 

எனவே அவன் தன் எஜமானனையும் அவன் திறனையும் அன்றி வேறு எதையும் காணான். அவனையன்றி வேறு யார் பேசுவதையும் கேளான். புரிந்து கொள்ளான், அவன் எதையாவது கண்டால் அது அல்லாவுடைய வேலையேயாகும் அவன் எதையாவது கேட்டறிந்தால் அது அல்லாஹ்வின் வார்தையேயாகும், அவன் எதையாவது புரிந்து கொண்டால் அது அல்லாஹ்வுடைய ஞானத்தினுடையவனாகிறான். 


அவனை அண்டியிருப்பதனாலேயே அதிஷ்டவனாய் இருக்கிறான். அவனை அண்டியிருப்பதன் மூலமே அவன் மதிப்பும் மரியாதையும் பெறுகிறான். திருத்தியும் ஆறுதலும் அடைகிறான். அல்லாஹ்வின் வாக்குறுதியால் தன் மனம் நிறைந்து அவன் வார்த்தையின் பக்கல் இழுக்கப்படுகிறான். 


அவனுக்கு புறம்பானவர்களை அவன் வெறுத்து ஒதுங்கிக் கொள்கின்றான் அவன் நினைவு கூர்தலை விரும்பி அதில் நம்பிக்கை கொள்கிறான். அந்த மஹா வலுப்பகமானவனிடம் ஸ்தாபிதம் பெற்றவனாகி விருகிறான். அவனிடமிருந்து ஒளி பெற்று உடுத்துக்கொள்கிறான். 


அவன் ஞானத்தின், அவன் சக்தியின், இரகசியத்தின் அபூர்வமான விசயங்களை விளங்கிக்கொள்கிறான். அந்த மகா சக்தியினிடமிருந்து கேட்டு நினைவால் அவனைப் புகழ்ந்து, துதித்து தொழுகையில் ஈடுபடுகிறான். 

தரிக்காகளின் முரீதுகளை விழித்து குத்துபுநாயகம் சொன்னவை. 
1. என் முரீதே! உனக்கு சுபசோபனம் உண்டாவதாக, நான் உனக்களித்த உத்தரவுகளை நிறைவேற்றுவாயாக, நீ துக்கத்தில் ஆழ்கையில் உனக்கு ஊக்கமும் ஆக்கமும் தந்து கரைசேர்க்க நான் இருக்கிறேன். 

2. என் முரீதே! நான் உன்னை இம்மையிலும் மறுமையிலும் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு உறுதியுடன் என்னைப் பற்றி பிடித்துக் கொள்வாயாக 

3. நானோ என் முரீதுகள் அஞ்சுகின்றவற்றிலிருந்து அவர்களைப் பாதுகாப்பவன், சகல தீங்குகளையும் சோதனைகளையும் விட்டு அவர்களைக் காப்பாற்றுபவன். 

4. என் முரிதே! நான் உனக்குச் சொன்ன வரையறைகளை பேணிக்காப்பாற்றி வா! வழி தவறாதே! மறுமை நாளில் உன் நன்மை தீமை நிறுக்கப்படும் தராசின் அருகே நானிருப்பேன். 

5. என் முரீது, நஸ்டத்திற்கு ஆளாகி வருத்தப்படும் நிலையில் என்னை அழைத்தால் நான் அவனுக்கு உதவுவேன். 

6. என் முரீதே! அஞ்சற்க அல்லாஹ் நமக்குப் போதுமானவன் அவன் எனக்கு உயரிய கருமங்களையெல்லாம் தந்துள்ளான். 

7. என் மரீதே மன மகிழ்வுடன் என்பாதையில் நட நாடிய கருமங்களை முடித்துவிடு என் திருநாமம் பிறருடையதை விட உயர்வானது 

குத்துபு நாயகத்தின் நல்வாக்குகளை பாடலாக சதகதுல்லாஹ் அப்பா நாயகம் அவர்கள் இயற்றியவை

என் இந்தக் கைகள் என் தரிக்காவை எடுத்து நடத்தும் முரீது எக்காலமும் காப்பாற்றக்கூடியவையாகும். நேர்வழியை நாடுபவர்கள் என் கையால் ஈடேற்றம் அடைவர் நிச்சயமாக நான் சன்மார்க்கத்திற்கு புத்துயர் அளிப்பவன் என்று அழைக்கப்படுவேன். எனவும் ‘என் பாட்டனார் றசூல் (ஸல்) அவர்களை நான் கண்டேன் 


"அவர்கள் என்னை விளித்து நல்ல சொற்கள் அனைத்திற்கும் நீர் என் கலீபாவாய் இருப்பீர் நீர் எமது உம்மத்துக்கு உதவியாய் இருந்து வாரும், அறிஞர்களின் ஞானம் உம்மை ஏற்று, (உம் சொல்லுக்கு வழிபட்டு) நடக்கும் முஹ்யித்தினே நீர் என்னுடன் தீனுல் இஸ்லாத்தை இறுதி நாள் வரை தரிபாடாக்கிவைப்பவராய் இருப்பீர்" என்று கூறினார்கள் எனவும் சொல்லியுள்ளார்கள்.

 
Design by Ahamiyam themes | Hosted by Fizmad - Ahamiyam,UK | Ahamiyam followship,UK