Friday, February 14

Contact us
ahamiyamweb@gmail.com

இன்ஷா அல்லாஹ் இன்று ஜும்ஆ!


தற்போது ஜும்ஆவுக்காக தயாராகிக் கொண்டிருக்கும் பத்ரிய்யஹ்வின் இரவுத் தோற்றம். 

காத்தான்குடியில் சுன்னத் வல் ஜமாஅத்தினரின் இரும்புத் தளமாக இயங்கி வரும் பத்ரிய்யஹ் ஜும்ஆப் பள்ளிவாயலில் நாளை இன்ஷா அல்லாஹ் 14.02.2014 அன்று மீளவும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இது தொடர்பாக அறிவித்துள்ள பத்ரிய்யஹ் ஜும்ஆப் பள்ளிவாயல் நிருவாகம் தனது நிறுவன செயற்பாடுகள் தொடர்பான ஒரு துண்டுப் பிரசுரத்தையும் வெளியிட்டுள்ளது
.

இத்துண்டு பிரசுரமானது தீவிரவாதிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. 

அத்துண்டு பிரசுரத்தை முழுமையாக நாம் பதிவிடுகின்றோம்.

Thursday, February 13

பத்ரிய்யஹ்வில் நாளை ஜும்ஆ மீளஆரம்பம்.

காத்தான்குடியில் சுன்னத் வல் ஜமாஅத்தினரின் தளமாக இயங்கிவரும் காத்தான்குடி 5 பத்ரிய்யஹ் ஜும்ஆப் பள்ளிவாயலில் மீண்டும் நாளை 14.02.2014 வெள்ளிக்கிழமை மீளவும் வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகை ஆரம்பிக்கப்படும் என உறுத்திப்படுத்தபடாத தகவல்கள் தெரிவிக்கிக்கின்றன.


காத்தான்குடி 5 பத்ரி்ய்யஹ் ஜும்ஆப் பள்ளிவாயலானது சிறியதொரு குர்ஆன் மத்தரஸாவாகவும் பள்ளிவாயலாகவும் அப்பள்ளிவாயலில் தற்போது அடக்கம் செய்யப்பட்டு நல்லாட்சி புரிந்து வரும் சங்கைக்குரிய பெரிய ஆலிம் அப்துல் ஜவாத் ஆலிம் வலியுல்லாஹ் அவர்களினால் ஸ்தாபிக்கப்பட்டது.

அன்னாரின் காலத்தின் பின்னர் அன்னாரின் அரும் தவப் புதல்வர் காதிமுல் வலீ சங்கைகுரிய ஷெய்குநாயகம் ஏ.அப்துர் ரஊப் மிஸ்பாஹி, பஹ்ஜீ அவர்களின் தலைமையில் இன்றுவரை நிருவகிக்கப்பட்டு வருகின்றது.

Wednesday, February 5

ஷெய்கு நாயகம் அவர்களின் பிறந்த தினம்

அதிசங்கைக்கும் கண்ணியத்துக்குமுரிய ஷெய்கு நாயகம் காலாநிதி ஏ.அப்துல் ரஊப் மிஸ்பாஹி பஹ்ஜி அவர்களின்

70வது பிறந்த தினம் (05.02.2014) இன்றாகும்


அகமியம் தனது இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை ஷெய்கு நாயகம் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றது.

நீங்களும் உங்கள் பிறந்த தின வாழ்த்துக்களை அகமியத்தில் பதிவு செய்ய உடன் எமக்கு அனுப்பி வையுங்கள்

ahamiyamweb@gmail.com

Friday, January 31

பாக்கியம் கேட்கின்றேன்!

அதிசங்கைக்குரிய அஸ்ஸெய்கு முகம்மது புஹாரி நல்ல கோயாத்தங்கள் மௌலானா வாப்பா அவர்களின் 56 பிறந்த தினத்தையொட்டி 31.01.2014 அன்று எழுதிய கவிதை


பாக்கியம் கேட்கின்றேன்!

வாழ்த்துக்கள் சொல்ல
வார்த்தைகள் இல்லையே!
வாழ்த்துகின்ற நாவுக்கும்
வக்கேதும் இல்லையே!
-----

புண்ணிய நபீ பேரர்
பூமியின் சுவர்கமே!
தங்களை - காண்பது பாக்கியம்
கண்டது- 
பாக்கியம்!  பாக்கியம்!

மௌலானா வாப்பா அவர்களின் பிறந்த தினம்

அதிசங்கைக்குரிய ஷெய்கு நாயகம், குத்துஸ் ஸமான் அஸ்ஸெய்யிது அப்துர் ரஷீது தங்கள் மௌலானா வாப்பா அவர்களின் மருமகனாரும் காதிரிய்யஹ் வர் ரிபாய்யாஹ் தரீக்காக்களின் ஷெய்குநாயகமுமான

சங்கைகுரிய மௌலானா அஸ்ஸெய்யிது முகம்மது புஹாரி நல்ல கோயாத் தங்கள்  காதிரீ வர் றியாயீ அந்தரூதி அவர்களின் 56வது பிறந்த தினம் ( 01.02.2014) பெப்ரவரி முதலாம் திகதியாகும். 


தங்கள் வாப்பா அவர்களுக்கு அகமியம் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் அன்னார் சரீர சுகத்துடன் நீண்டநாள் வாழ்வதற்கும் அன்னாரின் முரீதீன்கள் மற்றும் முஹிப்பீன்கள் அவர்களை கொண்டு தேக ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கும் அகமியம் பிராத்திக்கின்றது.

அன்னாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிக்க
வாப்பா அவர்களின் Mobile  இலக்கம் 
+94 (0) 77 603 1166

Friday, December 6

விண்வெளிப் பயணம் மார்க்கத்தில் ஏற்றுக் கொள்ளக் கூடியதா?


அல் ஆரிபு பில்லாஹ், அல் முஹிப்புர்ரஸூல், அஷ்ஷெய்குல் காமில், அஷ் ஷாஹ் ஷெய்கு ஸூபி ஹலரத் கத்தஸல்லாஹூ ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் தனது முரீது ஒருவர் கேட்ட ஐயமொன்றிற்கு பதிலளித்து எழுதிய ஞானத் தபால்

அரபிக் கடிதத்தின் தமிழாக்கம்..

உன் புறத்திலிருந்து கடிதம் வந்தது. உனது நினைப்பை எனக்கு சமீபமாக்கி வைத்தது. 

விஞ்ஞானிகள் சந்திரனில் இறங்கி அங்கிருந்து கல்லும், மண்ணும் கொண்டு வந்திருப்பதில் மக்கள் மத்தியில் பெரும் அபிப்பிராய பேதங்கள் எழுந்திருப்பதாகவும் அது மார்க்கத்திற்கு நேர் பட்டதா? அல்லது வேறுபட்டதா என்றும் குர்ஆன் ஆயத்துக்களுக்கும், ஹதீஸ்களுக்கும் தன் யோசனைப்படி வியாக்கியானம் செய்வதாகவும் தெளிவான விளக்கத்தைப் பெற ஆதரவு வைப்பதாகவும் எழுதியிருந்தாய்.

இதில் அபிப்பிராய பேதப்பட இடமேயில்லை. இதை மறுப்பது மார்க்க காரியங்களில் நின்றுள்ளதல்ல. இச் சம்பவத்தை அப்படியே உண்மைப்படுத்துவது அல்லது பொய்யாக்கிவைப்பது நம்மீது கடமையுமல்ல.

Thursday, November 28

தொழுகையின் அந்தரங்கம்.

"ஓ. மனிதனே! உனக்கு உடலில்லை, உயிரில்லை நாமமில்லை, ரூபமில்லை. நீ ஆகாயமுமல்ல, ஆத்மாவுமல்ல! நீ யார் என்று பார்? உன் தத்துவங்களை ஞாபகம் செய்! நாம் விக்கிரஹத்தை நிக்ஹிரகம் செய்தால் (துவைதத்தை கைவிட்டு அத்துவைதத்தை கைகொண்டால் எல்லாம் நம்மையே வணங்கும்."

குருமகான் அவ்லாதுர் ரசூல், ஆரிஃபு பில்லாஹ், மஷாயிஹ், மவ்லான, மௌலவீ ஏ.முகம்மது தாஹிர் ஹஸனீ காதிரி (கத்தஸல்லாஹூ ஸிர்ரஹுல் அஜீஸ்) அவர்களின் போதனைகளை தொகுத்து எழுதி 1994ம் ஆண்டு இந்தியாவின் மதுக்கூரில் தெளிவகம் வெளியிடப்பட்ட சம்பூரண சுயம் பிரகாசம் (Complete Self-Illumination) நூலிலிருந்து.

ஆண்டவன் ஒவ்வொரு வஸ்திலும் ஒரு இன்பத்தைப் படைத்திருக்கிறான். இன்பமில்லாதது ஒன்றுமே இல்லை. ஒரு ஜீவனுக்குப் பிடிக்காதது மற்றொரு ஜீவனுக்கு ப்ரியமானதாயிருக்கும். இப்படியே இந்திரியங்களாலடையும் சுகத்தையும் உத்தேசித்துக் கொள்க. 

சரீர சுகத்தைப் பார்க்கிலும் இந்திரிய (புலன்கள்) சுகமே அதிக மேலானது. சரீரம் மட்டும் தனியே யாதொரு சுகத்தையும் அடையாது. இதற்கு இந்திரியமும் அவசியம் சம்பந்தப் பட்டேயிருக்க வேண்டும். ஆக எல்லா வஸ்திலும் இன்பமுண்டாயிருக்கிறது.

எல்லா வஸ்துவுமே இன்ப வடிவு, சர்வமுமே சுக வடிவு. இப்படியாக எல்லா வஸ்துக்களையும் இன்ப ரூபமாய் அமைத்தவன் மனிதனை எதற்காகப் படைத்தானோ அதிலும் விஷேஷமான இன்பமிருக்க வேண்டும். எதற்காகப் படைத்தது ஆண்டவனை வணங்குவதற்கு! அப்படியாயின் ஆண்டவனை வணங்குவதில் அல்லது தொழுவதில் இருக்கும் இன்பம் எல்லாவற்றையும் விட அதிக மேலானதாயிருக்கும் மனிதன் காரணம், அசல் மற்றவை நிமித்த காரணம்.ஆகவே மனிதனுடைய இன்பம் வேறெந்த வஸ்த்துவுக்குமில்லை. மனிதனே மேலான இன்பத்தை அறிவான்.

Saturday, October 26

ஈதுல் அல்ஹா விசேட புகைப்படம்.


ஈதுல் அல்ஹா தியாகத் திருநாளை முன்னிட்டு நாம் வெளியிடும் விசேட புகைப்படம் இது. இதனை விரும்புவர்கள் டவுன்லோட் செய்து புகைப்படமாக எடுத்துக் கொள்ளும் வகையில் முழுமையாக பிரசுரிக்கப்பட்டுள்ளது.

அன்பர்கள் நண்பர்கள் வாசகர்கள் அனைவருக்கும் அகமியத்தின் தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

தியாகத் திருநாள் வீசேட உரை


 
Design by Ahamiyam themes | Hosted by Fizmad - Ahamiyam,UK | Ahamiyam followship,UK