காத்தான்குடியில் சுன்னத் வல் ஜமாஅத்தினரின் தளமாக இயங்கிவரும் காத்தான்குடி 5 பத்ரிய்யஹ் ஜும்ஆப் பள்ளிவாயலில் மீண்டும் நாளை 14.02.2014 வெள்ளிக்கிழமை மீளவும் வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகை ஆரம்பிக்கப்படும் என உறுத்திப்படுத்தபடாத தகவல்கள் தெரிவிக்கிக்கின்றன.
காத்தான்குடி 5 பத்ரி்ய்யஹ் ஜும்ஆப் பள்ளிவாயலானது சிறியதொரு குர்ஆன் மத்தரஸாவாகவும் பள்ளிவாயலாகவும் அப்பள்ளிவாயலில் தற்போது அடக்கம் செய்யப்பட்டு நல்லாட்சி புரிந்து வரும் சங்கைக்குரிய பெரிய ஆலிம் அப்துல் ஜவாத் ஆலிம் வலியுல்லாஹ் அவர்களினால் ஸ்தாபிக்கப்பட்டது.
அன்னாரின் காலத்தின் பின்னர் அன்னாரின் அரும் தவப் புதல்வர் காதிமுல் வலீ சங்கைகுரிய ஷெய்குநாயகம் ஏ.அப்துர் ரஊப் மிஸ்பாஹி, பஹ்ஜீ அவர்களின் தலைமையில் இன்றுவரை நிருவகிக்கப்பட்டு வருகின்றது.
இப் பள்ளிவாயல் மற்றும் அதனுடன் இணைந்துள்ள அரபிக்கலாசாலை உட்பட ஏனைய நிறுவனங்களின் ஆயுற்காலத் தலைவராக சங்கைகுரிய ஷெய்குநாயகம் அவர்களே திகழ்கின்றார்கள்.
இப்பள்ளிவாயில் முதலாவது ஜும்ஆத் தொழுகையானது 1988 ம் 1980ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2004ம் ஆண்டு வரை தொடராக பிரதி வாரமும் வௌ்ளிக்கிழமை நடாத்தப்பட்டுவந்தது
2004ம் ஆண்டு காத்தான்குடியில் சுன்னத் வல் ஜமாஅத் மக்களுக்கு எதிராக பாசிசவாதிகளால் நடாத்தப்பட்ட கலவரத்தின் நிறுத்தப்பட்ட ஜும்ஆத் தொழுகையானது காத்தான்குடி 5 பத்ரிய்யஹ் ஜும்ஆப் ப்ளளிவாயலானது மீண்டும் புதிதாக புனரமைக்கபட்டு நிறைவு பெறும் தருவாயில் மீண்டும் ஆரம்பிக்கப்பட இருக்கின்றது.
நாளை ஜும்ஆ ஆரம்பிக்கப்டும் என்ற செய்தியினை எம்மால் உறுதிப்படுத்த முடியாவிட்டாலும், நாளை இடம் பெறும் ஜும்ஆப் பிரசங்கத்தினை சங்கைக்குரிய மௌலவீ கவித்திலம் எச்.எம்.எம்.இப்றாஹிம் நத்வீ அவர்கள் நிகழ்த்துவார்கள் ஜூம்ஆத் தொழுகையின் பின்னர் சங்கைக்குரிய ஷெய்குநாயகம் அவர்கள் விசேட உரை இடம்பெறும் என்ற செய்தியினை ஷம்ஸ் குறும் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
காத்தான்குடி மற்றும் அதனை அன்டைய ஊர்களில் வாழும் சுன்னத் வல் ஜமாஅத் மக்களுக்கு இச் செய்தியானது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகவும் நாளை இடம் பெறும் ஜும்ஆத் தொழுகையில் கலந்து கொள்வதற்காக மக்கள் புதிய ஆடைகள் எடுத்து ஜும்ஆவில் கலந்து கொள்ள தயாராகிவருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் எமக்கு தெரிவிக்கின்றன.
அபூ சக்கி - 13.02.2014