தற்போது ஜும்ஆவுக்காக தயாராகிக் கொண்டிருக்கும் பத்ரிய்யஹ்வின் இரவுத் தோற்றம்.
காத்தான்குடியில் சுன்னத் வல் ஜமாஅத்தினரின் இரும்புத் தளமாக இயங்கி வரும் பத்ரிய்யஹ் ஜும்ஆப் பள்ளிவாயலில் நாளை இன்ஷா அல்லாஹ் 14.02.2014 அன்று மீளவும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இது தொடர்பாக அறிவித்துள்ள பத்ரிய்யஹ் ஜும்ஆப் பள்ளிவாயல் நிருவாகம் தனது நிறுவன செயற்பாடுகள் தொடர்பான ஒரு துண்டுப் பிரசுரத்தையும் வெளியிட்டுள்ளது
.
இத்துண்டு பிரசுரமானது தீவிரவாதிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது.
------------------------------------------------------------------
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றம்.
2009 ஆம் ஆண்டின் 46ம் இலக்க, அல்ஹாஜ், அப்துல் ஜாவாத் ஆலிம் வலியுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பு (கூட்டிணைத்தல்) சட்டம்
அ. கூட்டுத்தாபனத்திற்கு உரித்தாகப்பட்ட பள்ளிவாயல்கள், குர்ஆன் மத்ரஸாக்கள் மற்றும் தர்ஹாக்கள் என்வற்றைப் பராமரித்தலும், புனரமைப்புச் செய்தலும் தேவைப்படுமிடத்து புதிய மத்ரஸாக்களை நிறுவுதலும்.
ஆ.ஜாமிஅத்துர் றப்பானிய்யா அறபுக் கலாபீடத்தை முகாமை செய்து பராமரித்தல்
இ. இஸ்லாமிய மத்த்தில் நல்ல அறிவையளிக்கும் பொருட்டு மௌலவீமார்களுக்கு பயிற்சி அளித்தல்
ஈ.மௌலவீமார்களுக்கான கருத்தரங்குகளையும், செயலமர்வுகளையும், ஆன்மீகப் பயிற்சிகளையும் ஒழுங்கு செய்தலும் மற்றும் நடாத்துதலும்,
உ.இஸ்லாமிய கோட்பாடாகிய சூபித்துவத்தை போதிப்பதனாலும் மற்றும் சாத்வீகத்தின் பால் வழிகாட்டுவதினாலும் இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றுகின்ற ஆட்களிடைய ஆன்மீக வளர்ச்சியை மேன்படுத்தல்
ஊ. இஸ்லாத்திற்கு பெருந்தொண்டாற்றிய இஸ்லாமிய மதப் பெரியார்களின் நினைவு தினங்களை கொண்டாடுதலும், அத்தகைய பெரியார்களின் வாழ்கை முறைகளை இஸ்லாத்தை பின்பற்றுகின்ற ஆட்கள் கற்பதற்கு ஏற்பாடு செய்தல்
எ. அஜ்மீர் ஹாஜா முயீனுத்தீன் (ஜிஸ்தீ) அவர்களினதும் மற்றும் வேறு இஸ்லாமியப் பெரியார்களினதும் நினைவு வைபவங்களில் கலந்து கொள்ளும் மக்களுக்கு அன்னதானம் வழங்குதல்
ஏ.முஸ்லீம்களான சிறுவர்கள், இளைஞர்கள், வயோதிபர்கள் ஆகியோரின் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் நிகழ்ச்சி திட்டங்கள் நடாத்துதல்.
மேற்கண்ட எமது நம்பிக்கைப் பொறுப்பின் கீழ் காத்தான்குடியிலுள்ள பின்வரும் தாபனங்கள் இயங்கி வருகின்றன. அவற்றுள் பத்ரிய்யஹ் ஜும்ஆப் பள்ளிவாயலும் ஒன்றாகும்.
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்ற அனுமதியுடன் குறித்த விதிகளுக்கமைவாக இயங்கி வருவதுடன் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் குறிப்பாக முஸ்லிம்களுக்கும் சேவையும் செய்து கொண்டிருக்கின்ற எமது தாபனங்களையும், அவற்றின் செயற்பாடுகளையும் கண்மூடித்தனமாக எதிர்த்து நாட்டின் அமைதிக்கும், இன ஒற்றுமைக்கும் மற்றும் முஸ்லீம்களின் கட்டுக்கோப்புக்கும் பங்கம் ஏற்படுத்தி வருகின்ற தீவிரவாதிகள் சற்று சிந்தித்து நிதானமாகவும், நேர்மையாகவும் செயல்பட வேண்டும்.
ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குதல், (கந்தூரி கொடுத்தல்) இஸ்லாமிய மார்க்கப் பெரியார்கள், அவ்லியாக்களின் நினைவு தினங்களைக் கொண்டாடுதல், அவர்களின் கீர்த்தியைப் பாடுதல் போன்ற நன்மையான காரியங்களைச் செய்பவர்களுக்கு எதிராக பெயர் முகவரியில்லாத துண்டுப்பிரசுரம் வெளியிடுதல், திரைமறைவில் பதுங்கி நின்று கூச்சலிடுதல் முதலான நாச்ச்செயல்களை தீவிரவாதிகள் முற்றாக நிறுத்த வேண்டும்.
நாட்டின் அமைதியையும், மக்களின் ஒற்றுமையையும் கருத்திற்கொண்டும் அதியுத்தம ஜனாதிபதியின் அரசை மதித்தும் பொறுமைக்கு மேல் பொறுமை செய்துவருகின்ற ஸூன்னிக்களையும், ஸூபிகளையும் தொடர்ந்து துன்புறுத்துவதையும் தீவிரவாதிகள் நிறுத்த வேண்டும்.
இவை அவர்களுக்கான எமது இறுதி உபதேசமாகும். இதன் பிறகும் தீவிரவாதிகள் தமது தொழிழைத் தொடர்ந்தால் அவர்களை இனம்கண்டு நீதிமன்றில் நிறுத்தி அரசிடம் நீதி கேட்க நேரிடும்.
1.பத்ரிய்யஹ் ஜும்ஆப் பள்ளிவாயல்
2.அகில இலங்கை இஸ்லாமிய மெஞ்ஞானப் பேரவை
3.புனித குத்துப்பியஹ் மஜ்லிஸ்
4.கரீப் நவாஸ் பௌண்டேஷன்
5.அல் ஜாமிஅதுர் றப்பானிய்யா அறபுக் கலாபீடம்
6.மன்பஉல் ஹைராத் மஸ்ஜித்
7.மன்பஉல் ஹைராத் குர்ஆன் பாடசாலை
8.இப்றாஹிமிய்யா குர்ஆன் மத்ரஸா
9.றஹ்மானிய்யா குர்ஆன் மத்ரஸா
10.அஸ்ஸெய்யித் முஹ்ஸின் மௌலானா தர்ஹா ஷரீப்
11.அஸ்ஸெய்யித் முஹ்ஸின் மௌலானா குர்ஆன் பாடசாலை
இவ்வண்ணம்
தலைவர்,
அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலியுல்லாஹ் நம்பிக்கை நிதியம்
காத்தான்குடி
14.02.2013
----------------------------------------------------