Sunday, April 25

தாஜூல் அறூஸ் - கேள் மகனே கேள்.. (பாகம்-1)

ஷாதுலிய்யஹ் தரீகஹ்வின் ஞானகுருக்களில் ஒருவரும் “ஹிகம்” என்ற ஞானநூலை எழுதியவருமான அஹ்மத் இப்னு அதாயில்லாஹ் அஸ்ஸிக்கந்தரீ (றஹ்) அவர்கள் தங்களின் ஞானமாணவனுக்கு “தாஜூல் அறூஸ்” என்ற தலைப்பில் எழுதிய அறபு மடலின் சாரம் 
Ash.Shiekh. Moulavee. Abdul Rauff
Misbahee, Bahjee 

நமது வாழ்நாளில் கிடைக்கப்பெறுவதற்கு மிகவும் அருமையான பொக்கிஷமாகும் இவ்வுரை இதனை மிகவும் பேணுதலாகப் படித்து ஈருலகிலும் பயன் பெறுவோமாக! இதனை தமிழில் வடித்தவர்கள் சங்கைக்குரிய “காத்தமுல் வலி”, “காமில் முக்கம்மில்” அஷ்ஷேக் அப்துல் ரஊப் மிஸ்பாஹி அவர்களாவர். இது 2002 ஆண்டு இலங்கையில் வெளியான அல்மிஷ்காத் வாராந்த சஞ்சிகையில் தொடராக வெளிவந்ததாகும்

அன்பு மகனே!
எந்நேரமும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக்கேள் ஏனெனில் பின்வரும் திருவசனத்தில் பாவமன்னிப்புக் கேட்குமாறு அல்லாஹ் கூறியுள்ளான். விசுவாசிகளே நீங்கள் வெற்றி பெறுவதாயின் பாவமன்னிப்புக் கேளுங்கள் 

இன்னொரு வசனத்திலும் இதுபற்றிக் கூறியுள்ளான் ‘பாவமன்னிப்புக் கேட்பவர்களையும் சுத்தமுடன் இருப்பவர்களையும் நிச்சயமாக அல்லாஹ் விரும்புகின்றான்’ எனதுள்ளதில் கறை ஏற்படுகின்றது நான் ஒரு நாளைக்கு எழுபதுதரம் பாவமன்னிப்புக் கேட்டுவருகின்றேன் என்று நபீ (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். 

தாஜூல் அறூஸ் - கேள் மகனே கேள்.. (பாகம்-2)

"ஷாதுலிய்யஹ் தரீகஹ்வின் ஞானகுருக்களில் ஒருவரும் “ஹிகம்” என்ற ஞானநூலை எழுதியவருமான அஹ்மத் இப்னு அதாயில்லாஹ் அஸ்ஸிக்கந்தரீ (றஹ்) அவர்கள் தங்களின் ஞானமாணவனுக்கு “தாஜூல் அறூஸ்” என்ற தலைப்பில் எழுதிய அறபு மடலின் சாரம்"
Ash.Shiekh Moulavee Abdur Rauff
Misbahee, Bahjee

நமது வாழ்நாளில் கிடைக்கப்பெறுவதற்கு மிகவும் அருமையான பொக்கிஷமாகும் இவ்வுரை இதனை மிகவும் பேணுதலாகப் படித்து ஈருலகிலும் பயன் பெறுவோமாக! இதனை தமிழில் வடித்தவர்கள் சங்கைக்குரிய “காத்தமுல் வலி”, “காமில் முக்கம்மில்” அஷ்ஷேக் அப்துல் ரஊப் மிஸ்பாஹி அவர்களாவர். இது 2002 ஆண்டு இலங்கையில் வெளியான அல்மிஷ்காத் வாராந்த சஞ்சிகையில் தொடராக வெளிவந்ததாகும் 

ஆசையினால் மனம் அலை மோதுகிறது. நற்கிரியைகள் மீது ஒருவகை வெறுப்பு ஏற்பட்டுவிட்டது. வணக்கம் செய்தாற்கூட அதில் உனக்கு இன்பம் கிடைப்பதில்லை. இறைவனின் ஒளி உனது உள்ளத்தில் இறங்குவதில்லை. மனஇச்சை என்ற அரசன் உனது உள்ளத்தில் ஆட்சி செய்ய அமர்ந்து விட்டான். 

தாஜூல் அறூஸ் - கேள் மகனே கேள்.. (பாகம்-3)

"ஷாதுலிய்யஹ் தரீகஹ்வின் ஞானகுருக்களில் ஒருவரும் “ஹிகம்” என்ற ஞானநூலை எழுதியவருமான அஹ்மத் இப்னு அதாயில்லாஹ் அஸ்ஸிக்கந்தரீ (றஹ்) அவர்கள் தங்களின் ஞானமாணவனுக்கு “தாஜூல் அறூஸ்” என்ற தலைப்பில் எழுதிய அறபு மடலின் சாரம்"
Ash Shiekh. Moulavee Abdur Rauff
Misbahee, Bahjee

நமது வாழ்நாளில் கிடைக்கப்பெறுவதற்கு மிகவும் அருமையான பொக்கிஷமாகும் இவ்வுரை இதனை மிகவும் பேணுதலாகப் படித்து ஈருலகிலும் பயன் பெறுவோமாக! இதனை தமிழில் வடித்தவர்கள் சங்கைக்குரிய “காத்தமுல் வலி”, “காமில் முக்கம்மில்” அஷ்ஷேக் அப்துல் ரஊப் மிஸ்பாஹி அவர்களாவர். இது 2002 ஆண்டு இலங்கையில் வெளியான அல்மிஷ்காத் வாராந்த சஞ்சிகையில் தொடராக வெளிவந்ததாகும்

அன்பு மகனே! 
உலகின் வெளித்தோற்றம் கவர்ச்சியானதாகவிருப்பதைக் கண்டு மயங்கிவிடாதே! அதன் வெளித்தோற்றம் கவர்ச்சியாயிருந்தாலும் அதன் உள்தோற்றம் மிக மோசமானதும், அருவருப்பானதுமாகும். கருங்குஷ்டத்தால் பாதிக்கப்பட்ட, பார்வைக்கு அருவருப்பான ஒரு பெண் அழகிய பட்டாடை உடுத்து, தங்கவைர நகைகள் அணிந்து தோற்றமளிப்பது போன்றதே இந்தத் துன்யாவின் கதை என்பதை அறிந்துகொள். 

குஷ்டரோகத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் அவளோடு உடலுறவு கொள்ள விரும்புவாயா? 

தாஜூல் அறூஸ் - கேள் மகனே கேள்.. (பாகம்-4)

ஷாதுலிய்யஹ் தரீகஹ்வின் ஞானகுருக்களில் ஒருவரும் “ஹிகம்” என்ற ஞானநூலை எழுதியவருமான அஹ்மத் இப்னு அதாயில்லாஹ் அஸ்ஸிக்கந்தரீ (றஹ்) அவர்கள் தங்களின் ஞானமாணவனுக்கு “தாஜூல் அறூஸ்” என்ற தலைப்பில் எழுதிய அறபு மடலின் சாரம்.
Ash Shiekh Moulavee. Abdur Rauff
Misbahee, Bahjee

நமது வாழ்நாளில் கிடைக்கப்பெறுவதற்கு மிகவும் அருமையான பொக்கிஷமாகும் இவ்வுரை இதனை மிகவும் பேணுதலாகப் படித்து ஈருலகிலும் பயன் பெறுவோமாக! இதனை தமிழில் வடித்தவர்கள் சங்கைக்குரிய “காத்தமுல் வலி”, “காமில் முக்கம்மில்” அஷ்ஷேக் அப்துல் ரஊப் மிஸ்பாஹி அவர்களாவர். இது 2002 ஆண்டு இலங்கையில் வெளியான அல்மிஷ்காத் வாராந்த சஞ்சிகையில் தொடராக வெளிவந்ததாகும் – ஆசிரியர்-

அன்பு மகனே! 
உனது நிலையைக் கண்டு கவலைப்பட வேண்டியுள்ளது. ஏனெனில் நீ நரைத்துவிட்டாய். உனது உறுப்புக்கள் தளர்ந்து விட்டன. இன்னும் சில நாட்களில் நூறாவது பிறந்த தினம் கொண்டாடப் போகிறாய் ஆனால் உனது வயதுக்கேற்ற புத்தியும், அறிவும் உன்னிடம் இல்லை. நீ சிறு குழந்தையைவிட இழிநிலையிலேயே இருக்கிறாய். அல்லஹ் உன்னிடம் எதைக் கேட்கிறான் என்பதை புரியாமல் இருக்கிறாய். நீ புத்தியுள்ளவனாயிருந்தால் பிறர் உன்னை நினைத்து அழுவதற்கு முன் நீ உன்னை நினைத்து அழு. 

தாஜூல் அறூஸ் - கேள் மகனே கேள்.. (பாகம்-5)

ஷாதுலிய்யஹ் தரீகஹ்வின் ஞானகுருக்களில் ஒருவரும் “ஹிகம்” என்ற ஞானநூலை எழுதியவருமான அஹ்மத் இப்னு அதாயில்லாஹ் அஸ்ஸிக்கந்தரீ (றஹ்) அவர்கள் தங்களின் ஞானமாணவனுக்கு “தாஜூல் அறூஸ்” என்ற தலைப்பில் எழுதிய அறபு மடலின் சாரம்.
Ash Shiekh Moulavee Abur Rauff
Misbahee, Bahjee

நமது வாழ்நாளில் கிடைக்கப்பெறுவதற்கு மிகவும் அருமையான பொக்கிஷமாகும் இவ்வுரை. இதனை மிகவும் பேணுதலாகப் படித்து ஈருலகிலும் பயன் பெறுவோமாக! இதனை தமிழில் வடித்தவர்கள் சங்கைக்குரிய “காத்தமுல் வலி”, “காமில் முக்கம்மில்” அஷ்ஷேக் அப்துல் ரஊப் மிஸ்பாஹி அவர்களாவர். இது 2002 ஆண்டு இலங்கையில் வெளியான அல்மிஷ்காத் மாதாந்த சஞ்சிகையில் தொடராக வெளிவந்ததாகும் – ஆசிரியர்-

அன்பு மகனே! 
மனிதர்களில் இரு பிரிவினர்கள் உள்ளனர். ஒரு பிரிவினர் மலவண்டு போன்றவர்கள். மற்றவர்கள் விட்டில் பூச்சுப் போன்றவர்கள். மலவண்டு எந்நேரமும் மலத்திலேயே புரண்டு கொண்டிருக்கும் ஆயினும் தான் மலத்தில் புரள்வது கூட அதற்குப் புரிவதில்லை. அதில் அத்தர் சிறிதளவேனும் விழுந்து விட்டால் அது உடனே மயங்கிவிடும். 

தாஜூல் அறூஸ் - கேள் மகனே கேள்.. (பாகம்-6)

"ஷாதுலிய்யஹ் தரீகஹ்வின் ஞானகுருக்களில் ஒருவரும் “ஹிகம்” என்ற ஞானநூலை எழுதியவருமான அஹ்மத் இப்னு அதாயில்லாஹ் அஸ்ஸிக்கந்தரீ (றஹ்) அவர்கள் தங்களின் ஞானமாணவனுக்கு “தாஜூல் அறூஸ்” என்ற தலைப்பில் எழுதிய அறபு மடலின் சாரம்"
Ash Shiekh Abur Rauff
Misbahee, Bahjee

நமது வாழ்நாளில் கிடைக்கப்பெறுவதற்கு மிகவும் அருமையான பொக்கிஷமாகும் இவ்வுரை. இதனை மிகவும் பேணுதலாகப் படித்து ஈருலகிலும் பயன் பெறுவோமாக! இதனை தமிழில் வடித்தவர்கள் சங்கைக்குரிய “காத்தமுல் வலி”, “காமில் முக்கம்மில்” அஷ்ஷேக் அப்துல் ரஊப் மிஸ்பாஹி அவர்களாவர். இது 2002 ஆண்டு இலங்கையில் வெளியான அல்மிஷ்காத் மாதாந்த சஞ்சிகையில் தொடராக வெளிவந்ததாகும் – ஆசிரியர்-

அன்பு மகனே! 
உனது நப்ஸ்யை நீ நன்மையின்பால் அழைத்தாலும் அது பின்வாங்கிக் கொண்டேயிருக்கும். ஏனெனில் பின்வாங்குவது அதன் சுபாபமாகும். எனவே முதலில் அதற்காக மருந்தை கொடுத்து அதை உன் வசப்படுத்திக்கொள். உனது “நப்ஸ்” உனக்கு வசப்பட்டும் வழிபட்டுமிடுமாயின் நீ பாவமான விடயங்களில் அனுபவித்த இன்பத்தை நன்மையான விடயங்களில் அனுபவித்துப்பார். 

தாஜூல் அறூஸ் - கேள் மகனே கேள்.. (பாகம்-7)

"ஷாதுலிய்யஹ் தரீகஹ்வின் ஞானகுருக்களில் ஒருவரும் “ஹிகம்” என்ற ஞானநூலை எழுதியவருமான அஹ்மத் இப்னு அதாயில்லாஹ் அஸ்ஸிக்கந்தரீ (றஹ்) அவர்கள் தங்களின் ஞானமாணவனுக்கு “தாஜூல் அறூஸ்” என்ற தலைப்பில் எழுதிய அறபு மடலின் சாரம்"
Ash Shiekh Moulavee Abdur Rauff
Misbahee, Bahjee

நமது வாழ்நாளில் கிடைக்கப்பெறுவதற்கு மிகவும் அருமையான பொக்கிஷமாகும் இவ்வுரை. இதனை மிகவும் பேணுதலாகப் படித்து ஈருலகிலும் பயன் பெறுவோமாக! இதனை தமிழில் வடித்தவர்கள் சங்கைக்குரிய “காத்தமுல் வலி”, “காமில் முக்கம்மில்” அஷ்ஷேக் அப்துல் ரஊப் மிஸ்பாஹி அவர்களாவர். இது 2002 ஆண்டு இலங்கையில் வெளியான அல்மிஷ்காத் மாதாந்த சஞ்சிகையில் தொடராக வெளிவந்ததாகும் – ஆசிரியர்-

அன்பு மகனே! 
உனது உள்ளத்துக்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். கவனமாய் கேள்! உனது உள்ளம் வீட்டின் முகடு போன்றது. வீட்டில் நெருப்பெறித்தால் அதிலிருந்து எழும்புகை முகடைக் கருப்பாக்கி விடும். இவ்வாறுதான் மனவெழுச்சியெனும் புகை உடலில் உருவானால் “கல்பு” என்ற முகடு கறுப்பாகிவிடும். 

அன்பு மகனே! 
மனிதர்களால் உனக்கு இன்னல் ஏற்படும்போது அவர்களைச் சபித்து கண்டித்துவிடாதே! ஆயினும் அந்நேரம். நீ செய்த பாவத்தின் நிமித்தம் அல்லாஹ்தான் உன்னைக் கண்டிக்கிறான் என்று நினைத்து நீ உன்னை கண்டித்துக்கொள். இதற்கு மாறாக அந்த இன்னல் மனிதர்களால்தான் ஏற்பட்டதென்று நினைத்து அவர்களைக் கண்டித்துவிடாதே! 

Design by Ahamiyam themes | Hosted by Fizmad - Ahamiyam,UK | Ahamiyam followship,UK