அதிசங்கைக்குரிய அஸ்ஸெய்கு முகம்மது புஹாரி நல்ல கோயாத்தங்கள் மௌலானா வாப்பா அவர்களின் 56 பிறந்த தினத்தையொட்டி 31.01.2014 அன்று எழுதிய கவிதை
பாக்கியம் கேட்கின்றேன்!
வாழ்த்துக்கள் சொல்ல
வார்த்தைகள் இல்லையே!
வாழ்த்துகின்ற நாவுக்கும்
வக்கேதும் இல்லையே!
-----
புண்ணிய நபீ பேரர்
பூமியின் சுவர்கமே!
தங்களை - காண்பது பாக்கியம்
கண்டது-
பாக்கியம்! பாக்கியம்!
-----
கண்ணூரார் வாரிசை
கண்ணாக காண்கின்றோம்
திரு நபீயின் பேரரை
திரவியமாய் போற்றினோம்!
------
சுவர்கத்தின் வாடயை
ஒரு துடிநேரம் உணரவே
திரு நபீயின் ஷபாஅத்தை
இந்த-
துஸ்டனுக்கு அருள்வீரோ?
-----
நானறிந்த சொல்லெல்லாம்
நாவெடுத்துப் பார்க்கின்றேன்
நாதரே உம் பெருமை
இந்த நாலெழுத்தில் அடங்குமோ?
-----
-----
வாழ்த்த வந்தவன்
வளமிழந்து நிற்கின்றேன்!
வடிகின்ற கண்ணீரை
காணிக்கையாய் கேட்கின்றேன்
வள்ளளே!
தங்கள் அருகிருக்கும்
பாக்கியம்
ஈருலகிலும் தருவிரோ?
-----
அகமியத்துக்காக
-பைசான் மதீனா.-