இந்த அடிப்படையில் காத்தான்குடி பத்ரிய்யஹ் ஜும்ஆப் பள்ளிவாயலிலும் 27வது வருட மாகா கந்தூரி எதிர்வரும் 04.03.2012 ஞாயிற்றுக் கிழமை இடம்பெறவுள்ளது. இதனை முன்னிட்டு அதிசங்கைகுரிய ஷெய்குநாயகம் மௌலவீ அல்ஹாஜ் அப்துர் றஊப் மிஸ்பாஹி அவர்கள் குத்துப்பிய்யஹ்வின் சிறப்பு குறித்து ஆற்றிய சிறப்புரையினை இங்கு பதிவிடுகின்றோம்.
கவிதை
குவலயம் போற்றும் குத்பு நாயகம்
--------------------------------------------------
கவிஞர் எம்.ஏ.சீ. றபாய்தீன்
---------------------------------------------------
வலிமார் திலகமே!
வள்ளல் நபிகளின் வாரிசே!
நுபுவத்தெனும் நபித்துவத்தின் முத்து-
நம் நாயகமென்றால்
விலாயதெனும் வலித்தனத்தின் வித்து நீங்களல்லவா!!
இதனால்தான் இறைவன்
தீனுல் இஸ்லாத்தை
உயிர்ப்பிக்க உங்களை
தீன்தாரியாக முஹ்யித்தீனாக
இந்த அகிலத்திற்கு
அனுப்பி வைத்தான்!
அற்புதமெனும் கறாமத்துக்களை
அல்லாஹ் அவன் உங்களுக்கு
அன்பளிப்பாய் தந்திருந்தான்!
இறையாணையை இதயத்தால்
ஏற்ற நீங்கள்
முறையாக முதலோனுக்காய் முழுத் தியாகம் செய்தீர்கள்!
கறையெண்ணங்களற்றி
கல்பிலொளி ஏற்றினீர்கள்.
இறை விசுவாசிகளால்
எல்லோறையும் மாற்றினீர்கள்!
இறை வணக்கங்களை
இபாதத்களை செய்யச் சொன்னீர்கள்.
இன்ஸான்களை
இறைவன்பால் அழைத்தீர்கள்!
ஈமானை இதயத்தில் நுழைத்தீர்கள்.
தீன்பணி செய்து
தீன்வழி நடந்து
தியாகச் செயல்கள் நீங்கள் செய்த்தால்தான்!
இறைவனின் நேசர்களானீர்கள்
வள்ளல் நபீகளாரின் அம்சங்கள்
உங்களிடம் நிறைந்ததால்தான்
வள்ளலாரின் வம்சமானீர்கள்!
குறைகொள்கை
குபுறு தன்னை
கொன்றொழித்ததனால்தான்!
நீங்கள் என்றும்
குவலயம் போற்றும்
குத்பு ஆனீர்கள்.
குத்புமார்களுக்கெல்லாம் நாயகமானீர்கள்.
--------முற்றும்--------
02.03.2012
காத்தான்குடி 05 பத்ரிய்யஹ் ஜும்ஆப் பள்ளிவாயலில், புனித குத்யிய்யஹ் சங்கத்தினால் ஏற்பாடு செய்திருந்த 27வது வருட புனித குத்துபிய்யஹ் கந்தூரியை முன்னிட்டு இக்கவிதை எழுதப்பட்டது.