அஸ்ஸலாமு அலைக்கும்
அகமியத்தின் வாசகர்களுக்கு அகமியம் மிகவும் சந்தோசத்துடன் அறியத்தருவதாவது எமது வளர்ச்சிப் பணியில் அடுத்த கட்டமாக அகமியம் விஸ்தரிப்புச் செய்யப்படவுள்ளது.
இந்த திட்டத்திற்கமைய அகமியம் நியூஸ், அகமியம் ஒளிரசை மற்றும் அகமியம் உலகலாவிய குறுஞ் செய்திச் சேவை என மூன்று விசேட திட்டங்கள் அகமியத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
அகமியம் நியூஸ்
இத் திட்டத்தின்கீழ் இஸ்லாம் சார்ந்த மற்றும் உலகலாவிய செய்திகளை அவ்வப்போது வாசகர்களுக்கு பிரத்தியேகமாக வழங்கும்.
அகமியம் ஒளிரசை.
இத் திட்டமானது இஸ்லாமிய அகீதா சார்ந்த ஒலி, ஒளிப் பெட்டகமாக அமையும்.
அகமியம் குறுஞ்செய்திச் சேவை.
இத் திட்டமானது உலகில் எந்த மூலையில் வசிக்கும் வாசகர்களுக்கும் உலகில் இடம்பெறும் முக்கியச் செய்திகளை குறுந் தகவல்களாக (SMS) கையடக்க தொலைபேசிகளுக்கு வழங்கும். இது இலவசமாக அந்தந்த நாட்டின் சட்ட விதிகளுக்கு ஏற்ப அமைந்திருக்கும்.
இச் சேவைகள் அனைத்தையும் வாசகர்களுக்கு இலவசமாக வழங்கும் ஏற்பாடுகளில் அகமியம் தற்போது ஈடுபட்டு வருகின்றது. இன்ஷா அல்லாஹ் எமது சேவை மிக விரைவில் மக்களை வந்தடையும் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நிருவாகம்
அகமியம் பெலோசிப்.
Ahamiyam Fellowship, UK