அன்பின் வாசகர்களுக்கு,
இஸ்லாமிய சுன்னத் வல் ஜமாஅத் சூபித்துவ முதன்மை இணையத்தளமான எம்மீது எதிரிகளால் சைபர் தாக்குதல் (Cyper Attack ) மூலம் எமது இணையத்தளத்தை அழிக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அது தோல்வியில் முடிந்துள்ளது என்பதை வாசகர்களாகிய உங்களுக்கு அறியத்தருகின்றோம்.
அத்துடன் எமது இணையத்தளமானது சூபித்துவம் சார்ந்த சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையை மட்டுமே எப்போதும் பிரச்சாரம் செய்யும் என்பதுடன் எமது ஈமெயில் முகவரிகளான ahamiyamweb@gmail.com, ahamiyamsl@gmail.com முகவரிகள் போன்று (Duplicate) பிரதி செய்யப்பட்டு அனுப்பப்படும் எந்த ஈமெயில்களையும் வாசகர்கள் திறந்து பார்க்காமல் அழித்து விடுமாறும் பணிவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
அத்துடன் அகமியம் மறு அறிவித்தல்வரை எவரையும் ஈமெயில் மூலம் எந்த தேவைக்காகவும் தொடர்பு கொள்ளாது என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
கணணித்துறை வள்ளுனர்களின் உதவியுடன் எதிரிகளை அகமியம் எதிர்கொள்ளும் என்பதுடன் இந்த தாக்குதல் தொடர்பிலான எதிரிகளை கண்டறியும்வரை அகமியத்தின் வாசகர்களை கவனமாக தங்களின் இணைய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கின்றது.
தங்களுக்கு ஏதாவது ஈமெயில்கள் எமது முகவரிபோன்று Duplicate செய்யப்பட்டு அனுப்பப்பட்டால் அதனை அழிப்பதற்கு முன்னால் எமக்கு Forward செய்து அனுப்பி வைத்தபின் அழித்து விடுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.
இவ்வாறு நீங்கள் செய்யும் போது அது எமக்கு பெரிய உதவியாக அமையும் என்பதுடன் அதன் மூலம் எதிரிகளை எம்மால் கண்டு கொள்ள முடியும்.
இவ்வாறு நீங்கள் செய்யும் போது அது எமக்கு பெரிய உதவியாக அமையும் என்பதுடன் அதன் மூலம் எதிரிகளை எம்மால் கண்டு கொள்ள முடியும்.
இப்படிக்கு
நிர்வாகம், அகமியம் இணையத்தளம்.