![]() |
மர்ஹூம் பாறுக் காதிரி அவர்கள் |
அன்று 04 வது வருட மகா கந்தூரி மிக விமர்சையாக எமது அவ்லிய்யாக்களின் தளமான காத்தான்குடி பத்ரிய்யஹ் ஜூம்மாப் பள்ளிவாயலில் கரீப் நவாஸ் பொன்டேஷன் ஏற்பாட்டில் நடந்தேரிக்கொண்டிருந்தது.
இறுதி தினமான அன்று மௌலவீ பாஸில் றப்பானி பட்டமளிப்பு விழா நடைபெற்று மூன்று மௌலவீமார்கள் மௌலவீ பாஸில் பட்டம் பெற்றுக் கொண்டனர்
1990 ம் ஆண்டு நாலாம் வருட அஜ்மீர் ஹாஜா முயீனுத்தீன் ஷிஷ்தி அவர்களின் மகா கந்தூரியில் சங்கைக்குரிய மௌலவீ மர்ஹூம் பாறுக் காதிரி அவர்கள் பட்டமளிப்பு விழாவின் பின்னர் பரகத்துக்காக அஜ்மீர் அரசர் அவர்களைப் பற்றி ஒரு சிறிய உரையை ஆற்றி அத்துடன் அஸ்மாஉ ஹாஜா (அஜ்மீர் ஹாஜா நாயகமவர்களின் திருநாமங்கள்) ஓதி அம்மஜ்லிசை பெரிய துஆ பிராத்தனையுடன் இனிதே நிறைவு செய்தார்கள்.
சங்கைக்குரிய மர்ஹூம் பாறுக் காதிரி அவர்கள் ஆற்றிய சிறப்புரை இணைக்கப்பட்டுள்ளது
தற்போது 25வது வருட கந்தூரியை பத்ரிய்யஹ் மண்ணில் நடந்தேரிக் கொண்டிருக்கையில்.. எமது அன்புக்குரிய பாறூக் காதிரி அவர்களின் அழகிய குரலோசையில் அன்று ஒலித்த பயானும் அஸ்மாஉ ஹாஜாவையும் இன்று உங்களின் செவிகளுக்கு விருந்தாக்குகின்றோம்.
அன்னாரின் உதவியுடன் நாங்களும் மறுமையில் கரைசேர துஆ செய்வோமாக..
சங்கைக்குரிய மர்ஹூம் பாறூக் காதிரி அவர்கள் சுன்னத் வல் ஜமாஅத்தின் எதிரிகளால் 29.05.1998 வெள்ளிக்கிழமை பின்னேரம் சனி இரவு 10.25 மணிக்கு அவர்களின் வீட்டில் வைத்து துப்பாக்கிக் சூட்டுக்கு இலக்காகி ஷஹீதாக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மர்ஹூம் பாறுக் காதிரி அவர்கள் 1990 ஆண்டு அஜ்மீர் ஹாஜா நாயகமவர்களின் 04 வது கந்தூரியில் ஆற்றிய உரை.