இஸ்லாத்தின் வசந்த காலமான றபீஉனில் அவ்வல் மாதத்தில் எங்களின் உயிரினும் மேலான உத்தம நபீயின் அவதாரத்தினால் அகிலமே அருட் பிளம்பானது. அன்னாரின் சிறப்புக்களையும் புகழையும் இந்நாளில் விசேடமாக எடுத்தோதுவது எங்களின் மீது கடமையாக உள்ளது.
"அல்லாஹ்வுடைய சிறப்பைக் கொண்டும் மேலும் அவனது றஹ்மத்தைக் கொண்டும் அவர்கள் சந்தோசமடையட்டும். (அவர்கள் அப்படி சந்தோசமடைவது) அவர்கள் சேமித்து வைத்திருப்பவைகளை விட மிகவும் சிறந்தது."
-அல்குர்ஆன்-
1981ம் ஆண்டு ஜனவரி திங்கள் 21ம் நாள் அதிசங்கைக்குரிய ஷெய்கு நாயகம் ஞானபிதா அல்ஹாஜ் மௌலவீ அப்துர் றஊப் (மிஸ்பாஹி) அதாலல்லாஹு பகாஅஹூ. அவர்கள் ஆற்றிய நபீகள் நாயகம் (ஸல்) அவர்களின் புகழ் தொடர்பான ஆன்மீக விளக்கவுரை.
குறிப்பு:
இங்கே : சிறப்பு என்பது புனித திரு குர்ஆன் என்றும், றஹ்மத் என்பது கொண்டு நாடப்படுவது நபீகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்றும் தப்ஸீர் கலை மேதை இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் அத்துர்றுல் மன்தூர் என்ற குர்ஆன் விளக்கவுரையில் கூறுகின்றார்கள்.