அதிசங்கைக்குரிய ஞானபிதா கண்ணியமிக்க ஷெய்குனா அல்ஹாஜ். மௌலவீ அப்துர் றஊப் மிஸ்பாஹி அவர்களின் கலீபா சங்கைகுரிய மௌலவீ எம்.எம்.ஏ மஜீட் றப்பானி காதிரி வன் நக்ஷபந்தி அவர்களின் மனைவி இன்று காலை சுமார் 7.50 மணியளவில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்து காலமானார்கள்.இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இலங்கை நேரப்படி இன்று 19.02.212 இஷாத் தொழுகையினைத் தொடர்ந்து சுமார் 9.00 மணியளவில் காத்தான்குடி 05 பத்ரிய்யஹ் ஜும்ஆப் பள்ளிவாயலில் ஜனாஸாத் தொழுகை நடாத்தப்பட்டு முஹ்சின் மௌலானா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

சங்கைகுரிய கலீபா அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் அகமியம் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றது.
அஹ்ஸனல்லாஹு அஸாஅ ஹும் வகபர லி மைய்யித்திஹிம்.
யா அல்லாஹ்! கலீபாவின் மனைவியது பாவங்களையும் தவறுகளையும் மன்னித்து எங்களுடைய ஷெய்குனா அவர்களின் பொருட்டினால் நாளை மறுமையில் நபீகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஷபாஅத் பெற்று அவர்களின் அருகாமையில் ஜன்னத்துல் பிர்தௌஸில் இருக்க அருள்பாளிப்பாயாக ஆமீன்.
நிர்வாகம்- அகமியம் இணையத்தளம்