அதிசங்கைக்குரிய ஞானபிதா மௌலவீ. அல்ஹாஜ் அப்துர் ரஊப் (மிஸ்பாஹி) அவர்களால் 2002 ம் ஆண்டு நவம்பர் மாத இதழ் அல்மிஷ்காத்துக்கு எழுதப்பட்ட கட்டுரை
![]() |
சங்கைக்குரிய ஷெய்கனா அவர்கள் அஜ்மீரில் விசேடமாக அணிவிக்கப்பட்ட சால்வையுடன் |
முப்பத்தாறின் இரகசியம்
முன்னோர்களான நபீமார்களில் வருஷம் முழுவதும் நோன்பு நோற்று வந்தவர்களும், ஒரு நாள் விட்டு மறுநாள் நோன்புநோற்று வந்தவர்களும் இருக்கிறார்கள். இந்த வகையில் நீ நோன்பு நோற்பதற்கு சக்தியற்றவனாயிருக்கிறாய்!
இதனால்தான் றமழான் மாதம் மட்டும் நோன்பு நோற்பது உனக்கு கடமையாக்கப்பட்டுள்ளது.
இதனால்தான் றமழான் மாதம் மட்டும் நோன்பு நோற்பது உனக்கு கடமையாக்கப்பட்டுள்ளது.
இம்மாதத்தைத் தவிர மேலதிகமாக நீ நோற்க விரும்பினால் நோற்றுக்கொள்! ஆனால் அவையெல்லாம் சுன்னத்தான நோன்புகளாக கணிக்கப்படுமே யெல்லாமல் பர்ழான நோன்பாக மாட்டாது.
வருஷம் முழுவதும் நோன்பு நோற்பதற்கோ அல்லது ஒரு நாள் விட்டு மறு நாள் நோன்பு நோற்பதற்கோ உனக்கு சக்தி இல்லாததினால் முன் வாழ்ந்த மக்களைவிட நீ நன்மை குறைந்தவனாகிறாய் அல்லவா? இதனால் உனக்கு கவலை ஏற்படுமென்று நினைக்கின்றேன்.
நீ கவலை கொள்ளாதே! முன்னைய நபீமார்களின் உம்மத்துக்களை விட உடல் பலத்தால் நீ குறைந்தவனாயிருந்தாலும் உள்ளத்தைப் பொறுத்தரையிலும் நன்மையைப் பொறுத்தவரையிலும் நீதான் சிறந்தவனாகின்றாய். அதனாற்தான் நீ செய்யும் ஒரு வேலைக்கு பத்து நன்மைகள் எழுதப்படுகின்றன.
ஒன்றுக்கு பத்து வீதம் குறைவின்றிப் பெற்றுக் கொண்டேயிருப்பாய் இவ்வடிப்படையில் முப்பது நோன்புகளுக்கும் முன்னூறு நன்மைகளை பெறுகின்றாய். றமழான் மாதத்தைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதம் சுன்னத்தான் ஆறு நோன்பு நோற்கின்றாய் இவ்வாறுக்கும் அறுபது கிடைக்கின்றது எனவே றமழானில் நோன்பு நோற்பதனாலும் அதை அடுத்து 06 நாட்கள் நோன்பு நோற்பதாலும் மொத்தமாக 360 நன்மைகளை பெற்று வருடம் முழுவதும் நோன்பு நோற்ற பாக்கியத்தை பெற்று விடுகிறாய்.
இது அல்லாஹ் உனக்குச் செய்த மாபெரும் அருளேயாகும். எனவே றமழான் மாதம் மட்டும் நோன்பு நோற்பதோடு நின்று விடாமல் ஷவ்வால் மாத ஆறு நாட்களும் நோன்பு நோற்று வருஷம் முழுவம் நோன்பு நோற்ற கூட்டத்துடன் சேர்ந்துகொள்!
றமழானில் நின்று வணங்கு
அன்புச் சகோதரா!
“நம்பிக்கையுடனும் நன்மையைக் கருதியும் றமழான் மாதம் நின்று வணங்குபவனின் முன் பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னித்து விடுகிறான்” என்று நபீ (ஸல்) கூறியுள்ளார்கள்.
இந்த ஹதீஸைப் பற்றி நீ கேள்ளவிப்பட்டிருக்கிறாயா? இது ஸஹீஹான ஹதீஸ்தான். மேலே கூறிய ஹதீஸின்படி றமழான் மாதம் நின்று வணங்கினால் நீ முன்செய்த பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்படுமென்பது உண்மைதான் இப்பாக்கியத்தைப் பெறுவதற்கு நீயும் விரும்புவாய் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நின்று வணங்குவதுதான் உனக்குப் பிரச்சினையாக இருக்கலாமென்று நினைக்கின்றேன்.
ஏனெனில் நின்று வணங்குவதென்றால் இரவு முழுவது வணங்கிக் கொண்டே இருக்க வேண்டுமென்று நீ கருதலாம்.
சன்மார்க்கம் மிக எழிதானது குழப்பத்திற்குரியதோ பிரச்சினைக்குரியதோ கஷ்டமானதோ அல்ல. றமழானில் நின்று வணங்குவதென்றால் என்னவென்பதை தெரிந்துகொள்!.
நோன்பு திறந்ததிலிருந்து சுபஹ் வரை தொழுதால்தான் நின்று வணங்கிய கூட்டத்தில் சேரலாம் என்று நினைத்துக் கொள்ளாதே!
நோன்புமாத ஒவ்வொறு இரவிலும் மஹ்ரிப் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுது அதற்கான இரண்டு ரக்ஆஅத் சுன்னத்தையும் தொழுது இஷாத் தொழுகையையும் ஜமாஅத்துடன் தொழுது அதற்கான முன்பின் சுன்னத்களையும் தொழுது தறாவீஹ் தொழுகையும் வித்ர் தொழுகையையும் தொழுது வருவாயானால் றமழான் மாதம் நின்று வணங்கிய கூட்டத்தில் சேர்ந்துவிடுவாய்
இப்போது நான் கூறிய தொழுகைகள் எல்லாம் நமது ஊரைப் பொறுத்தமட்டில் (இலங்கை, காத்தான்குடி) இரவு பத்தரை மணிக்குமுன் முடிந்து விடுகிறதல்லவ?. இஸ்லாம் இவ்வாறு இலேசானதாயும் சலுகை நிறைந்த்தாயியும் இருக்க நீ ஏன் அசட்டையாய் இருக்கிறாய்? இந்த ஒரு மாதமாவது மேற்கூறிய வணக்கத்தைச் செய்யாமல் இருந்து கொண்டு அல்லாவின் பொருளை எதிர்பார்பதெவ்வாறு? எதிரபார்ப்பது நியாயமாகுமா?
நின்று வணங்குதல் என்பதன் விபரம் இதுதான் இந்த அளவாவது நீ செய்தால் நின்று வணங்கியவனாகிய விடலாம் அல்லவா? ஆனால் இவ்வளவுக்கு மேலாக நீ வணங்க விரும்பினால் அது உனது ஹிம்மத்தைப் பொறுத்ததேயாகும்.
செய்வதற்கு கூலிகிடைப்பது நிச்சயமே! “நின்று வணங்கியவனுடைய முன்பாவங்கள் மன்னிக்கப்டுகின்றன” என்று நபீ (ஸல்) அவர்கள் கூறியதிலிருந்து நீ என்ன விளங்குகிறாய்? நீ முன்செய்த சிறிய பெரிய பாவம் அனைத்தையுமே மன்னித்து விடுகிறான் என்று கருதுகிறாயா? அவ்வாறு கருதாதே இதில் விபரமுண்டு விபரத்தை கூறுகிறேன் சற்று சிந்தி!
பாவங்கள் இரு வகைப்படும் ஒன்று பெரிய பாவம்! மற்றது சிறிய பாவம்! பெரிய பாவம் என்றால் நீ செய்யக்கூடிய தொழுகை, ஸக்காத் போன்ற நல்ல காரியங்களினால் மட்டும் மன்னிக்கப்படாதது. அவைகளுக்காக அல்லாஹ்விடத்தில் நீ பாவமன்னிப்புக் கோரவும் வேண்டும் உதாரணமாக விபச்சாரம், குடி ஆகியவைகளை போன்று
சிறிய பாவம் என்றால் நீ செய்கின்ற தொழுகை ஸக்காத் போன்ற நல்ல காரியங்களினால் மன்னிக்கப்படும். உதாரணமாக அந்நிய பெண்களைப் பார்ப்பது போன்று, இவ்விருவகைப் பாவங்களிலும் நீ றமழான் இரவில் நின்று வணங்குவதால் சிறிய பாவம் மட்டும்தான் மன்னிக்கப்படுகின்றது பெரிய பாவத்திற்காக அது குறித்து நீ அழுது சலித்து மன்னிப்புக் கோரிக்கொள்.
அத்தோடு இன்னொருவகையில் பாவம் இருவகையாகப் பிரிக்கப்படுகிறது.
ஒன்று – அடியானுக்கும் அல்லாஹ்வுக்குமிடையே சம்பந்தப்பட்டது. மற்றது அடியார்களுக்கிடையில் சம்பந்தப்பட்டது
முந்திய வகையைச் சேர்ந்த பாவமாயின் அதற்காக அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரினால் அதை அல்லாஹ் மன்னித்து விடுவான்.
உதாரணமாக- தொழுகையை விடுதல் போன்று, இரண்டாம் வகையைச் சேர்ந்த பாவமாயின் ஒருவர் இன்னொருவருடைய பொருளைத் திருடுதல், புறம்பேசுதல் அநீதி செய்தல் போன்று. இவ்கைப்பாவம் அல்லாஹ்விடம் மன்னிக்கப்புக் கோருவதால் மட்டும் மன்னிக்கப்படமாட்டாது.
திருடிய பொருளை பொருளுக்குரியவரிடம் ஒப்படைக்கும் வரை, யாரைப் பற்றிப் புறம் பேசினரோ அவரிடம் நேரடியாகச்சென்று மன்னிப்புக்கேட்கும் வரை அநீதி செய்தவர் அநீதி செய்யப் பட்டவரின் மனத்திருப்தியைப் பெறும் வரை !
எனவே இப்புனிதமிக்க றமழான் மாத்தில் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரவிளையும் நீ இரண்டாம் வகையைச் சேர்ந்த பாவங்கள் செய்தவனாயிருந்தால் மேற்கூறிய முறையைக் கையாண்டு உன் வாழ்வைத் தூய்மைப்படுத்து!
ரமழான் மாதம் மூன்று பிரிவு
ரமழான் மாதத்தை நாயகம் (ஸல்) அவர்கள் மூன்று பிரிவுகளாக்கியுள்ளார்கள்.
முதற் பிரிவு “றஹ்மத் ” அல்லாவின் அருளுடையதென்றும்,
இரண்டாம் பிரிவு “ மக்பிறத்” அல்லாஹ்வின் பாவமன்னிப்புக்குரியதென்றும்,
மூன்றாம் பிரிவு “ இத்குன் மினன்னார்” நரகிலிருந்து விடுவிக்கும் பிரிவு என்றும் கூறியுள்ளார்கள்.
முதற் பிரிவான முந்திய பத்து நாட்களிலும் அல்லாஹ்வினது அருள் இறங்குகிறது.
அந்நாட்களில் நீ துஆக் கேட்கும் நேரங்களிலெல்லாம் “அழ்ழாஹூம்மர்ஹம்னீ” என்று கேட்டுக்கொள்! அறவு மொழியில் உனக்கு கேட்கத் தெரியாதா? அப்படியானால் “இறைவா எனக்கருள்செய்” என்று தமிழ் மொழியில் மடக்கி, மடக்கி கேட்டுக் கொள்!
இரண்டாம் பிரிவான் நடுப்பத்து நாட்களிலும் பாவமன்னிப்பு கிடைக்கிறது. அந்நாட்களில் நீ அல்லாஹ்விடம் கேட்கும் தேவைகளுடன் “அழ்ழாஹூம்மக்பிர்லீ” என்று கேட்டுக்கொள்! தமிழில் கேட்பதானால் “இறைவா எனது குற்றத்தை மன்னிப்பாயாக” என்று கேட்டுக்கொள்.
மூன்றாம் பிரிவான பிந்திய பத்து நாட்களிலும் நரகத்திற்கென்று கணிக்கப்பட்டவர்களில் அவன் நாடியோரை விடுதலை செய்கிறான். அந்நாட்களில் “அழ்ழாஹூம்ம அஃமத்திக்னீமின்னார்” என்று கேட்கத்தவறி விடாதே! “இறைவா! நரகிலிருந்த என்னை விடுதலையாக்கிவிடு” என்று கெஞ்சிக்கேள்!
நீ கேட்பது நிச்சயமாகக் கிடைக்கும். இந்த மாதத்திலிருந்தாவது கேட்டுப்பார்!
மீதி நாளை தொடரும்
நீ கேட்பது நிச்சயமாகக் கிடைக்கும். இந்த மாதத்திலிருந்தாவது கேட்டுப்பார்!
மீதி நாளை தொடரும்