இருநாள் பயணமாக காத்தான்குடிக்கு விஜயம் செய்த சங்கைக்குரிய அஸ்ஸையிது ஸாதாத் முஹம்மது புஹாரி நல்ல கோயாத் தங்கள், அஸ்ஸையிது ஸாதாத் டாக்டர் ஷெய்கு கோயாத் தங்கள் மற்றும் அஸ்ஸையிது ஸாதாத் ராஸீ நல்ல கோயாத் தங்கள் ஆகியோரின் காத்தான்குடி விஜயத்தின் தொகுப்பு.
-அகமியத்திற்காக பைசான் மதீனா.-
நிகழ்வுகள் பற்றிய நிழல்படத்துடனான தொகுப்பு
காத்தான்குடியில் தங்களுடன் பிரதி அமைச்சர் |
சங்கைக்குரிய தங்கள் நாயகம் அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்கு அப்துர் றஷீத் கோயாத் தங்கள் மௌலானா வாப்பா அவர்களின் பரம்பரை வாரிசாக தற்போது இலங்கையில் ஆன்மீகப் பணியினை அவர்களின் மருமனார் ஸையிது ஸாதாத் அகமது புஹாரி நல்ல கோயாத் தங்கள் அவர்களும் மௌலானா வாப்பா அவர்களின் பேரப் பிள்ளைகளான அஸ்ஸையித் ஹஸன் தங்கள் அவர்களும் அஸ்ஸையித் ஹுசைன் தங்கள் அவர்களும் வழங்கி வருகின்றார்கள்.
இந்த வரிசையில் இலங்கையில் பல பாகங்களிலும் சென்று ஆன்மீகப் பணி புரிந்துவரும் அஸ்ஸையிது ஸாதாத் அகமது புகாரி நல்ல கோயாத் தங்கள் அவர்களும் அவர்களுடன் இலங்கைக்கு வருகை தந்திருந்த டாக்டர் ஷெய்கு கோயாத் தங்கள் மற்றும் நல்ல கோயாத் தங்கள் அவர்களின் மகனார் அஸ்ஸையித் அகமத் ராஸித் தங்கள் ஆகியோர் தங்கள் பாட்டனாரினால் நிறுப்பட்ட இடங்களை தரிசிப்பதற்காக 17.01.2013 வியாளக்கிழமை காத்தான்குடிக்கு வருகை தருவதாக இருந்தது.
அடித்தது அதிஷ்டம் என்று எண்ணியவனாக வேலைகள் அனைத்தையும் அப்படியே விட்டுவிட்டு தங்கள்மாருடன் இணைந்து கொள்வதற்காக ஏறாவூர் சென்று அவர்களின் வாகனம் வரும்வரை காத்திருந்தோம்.
ஏறாவூறை வந்தடைந்தபோது. |
சுமார் நன்பகல் 2.30 மணியளவில் ஏறாவுரை தங்கள்மார் வந்தடைந்தனர். அவர்களுடன் இணைந்துகொண்டு அன்று பகல் சாப்பாட்டிட்காக ஏற்கனவே அழைக்கப்பட்டிருந்த அழைப்பின்படி ஏறாவூர் சதாம் ஹுசைன் கிராமத்தில் உள்ள மௌலவீ பாஸில் ஜே.எம்.ஏ வலீத் (கௌதீ) (உதவி ஆசிரியர்- மின்ஹாஜிய்யஹ்) அவர்களின் வீட்டிக்குச் சென்றோம்.
மௌலவீ ஜே.எம்.ஏ வலீத் (கௌதீ) அவர்களின் வீட்டில் |
அஸ்ஸையித் முஹம்மது புஹாரி நல்ல கோயாத் தங்கள் அவர்கள் |
பகல் விருந்து வழங்கப்பட்டபோது.. |
அங்கே பகல் உணவுக்காக பல வகையான உணவுகள் சமைக்கப்பட்டிருந்தன அதில் விசேட அம்சம் என்னவெனில் அங்கே இறைச்சி, கோழி, மீன், முட்டை, மரக்கரி ஆகிய ஐந்து வகையான கறிகளும் வேறுவேறு விதமாக சமைக்கப்பட்டிருந்தன.
அழகாக காட்சிதரும் ஏறாவூர் சதாம் ஹுசைன் கிராமம் |
பசியாறிய நாங்கள் சிறுது நேரம் ஓய்வெடுத்து அஸர் தொழுகையை முடித்தவர்களாக பின்னேரம் 4.30 மணியளவில் விசேட அழைப்போன்றை தங்கள்மார்களுக்கு விடுத்து அவர்களின் வருகைக்காக அன்றைய நாள் முழுவதும் காத்திருந்த கௌரவ கூட்டறவுத் துறை பிரதி அமைச்சர் பஷீர் ஷேகுதாவுத் எம்.பீ (அஸ்ரபீ) அவர்களின் வீட்டிக்குச் சென்றோம்.
பிரதிஅமைச்சரின் வீட்டுக்குள் விரவேசிக்கும் டாக்டர் ஷெய்கு கோயத்தங்கள் மற்றும் ராஸீ நல்ல கோயாத்தங்கள். |
ஏறாவூரில் பிரதிஅமைச்சர் பஷீர் சேகுதாவூத் அவர்களின் வீட்டில் |
தங்கள்மாருக்கு தேனீர் விருந்து வழங்கப்படும் போது |
அவ்விடத்திலிருந்து விடைபெறுமுகமாக துஆ பிராத்தனையின்போது |
அவர்களின் வீட்டில் தேனீர் உபசாரம் வருகைதந்திருந்த தங்கள்மார்களுக்கு வழங்கப்பட்டிருந்த்து தேனீர் உபசாரத்தில் கலந்து கொண்டதுடன் அங்கு வருகைதந்திருந்த ஏறாவூரைச் சேர்ந்த பிரமுகர்களை சந்தித்து விட்டு சுமார் 5.30 மணியளவில் எங்களின் வாகனங்கள் காத்தான்குடியை நோக்கிப் பயணித்தன.
காத்தான்குடியை சுமார் மாலை 6.00 மணியளவில் வந்தடைந்த தங்கள்மார் சுமார் 7.30 மணியளவில் சிறிது ஓய்வு எடுப்பதாக இருந்தது என்றாலும் காத்தான்குடியில் அவர்கள் தங்கிய வீட்டில் வருகை தந்துகொண்டிருந்த முஹிப்பீன்கள் தங்கள்மாரை தரிசித்து ஸலாம் கூறி முஸாபஹா செய்து கொண்டிருந்ததால் அதற்கு சாத்தியமற்றுப் போயிற்று.
இரவு சுமார் 7.30 மணியளவில் தங்கள்மாருடன் சென்று காத்தான்குடி ஊர் வீதியில் அமைந்துள்ள தங்கள் வாப்பாவினால் கட்டப்பட்ட முஹ்யத்தீன் தைக்காவை பார்வையிட்டுவிட்டு நேரடியாக காத்தான்குடியில் சுன்னத் வல் ஜமாஅத்தின் தலைமையகமாக காட்சிதரும் காத்தான்குடி பத்ரிய்யஹ் ஜும்ஆப் பள்ளிவாயலை தரிசித்தோம்.
தங்கள்மார் ஷெய்குநாயகம் மிஸ்பாஹி அவர்களை நோக்கி சுடப்பட்ட தடங்களை பார்க்கும் போது. |
அதனை முடித்துக் கொண்டு எமது பிரயாணம் நாம் தங்கியிருந்த வீட்டுக்குச் சென்றோம். அங்கு சமூகமளித்திருந்த முஹிப்பீன்கள் முரித்தீன்கள் அனைவரையும் சந்தித்தபின்னர் சங்கைக்குரிய நல்ல கோயாத் தங்கள் அவர்களுடன் இரவு சுமார் 1.00 மணிவரை இஸ்லாமிய மார்க்க விடயங்களை கேட்டறிந்தோம்.
ஷேகுல் பலாஹ் அவர்கள் விருது வழங்கி கௌரவிக்கும் காட்சி
நிகழ்வுகளில் இறுதி துஆப் பிராத்தனையை நல்ல கோயாத் தங்கள் செய்யும் போது
அடுத்தநாள் காலை சுபஹ் தொழுகையின் பின்னர் ஒரு டீ அறிந்திவிட்டு காத்தான்குடியில் உள்ள பழம்பெரும் மத்ரஸாவும் அதிசங்கைக்குரிய தங்கள் மௌலானா வாப்பா அவர்களால் நிறுவப்பட்டதுமான அல் ஜாமிய்யத்துல் பலாஹ் அறபுக் கலாசாலைக்கு சென்றோம்
அங்கு உலகளவில் புனித குர்ஆன் முரத்தல் போட்டியில் முதலிடம் பெற்ற கொழும்பு பெரிய பள்ளிவாயலில் இயங்கும் மதீனத்துல் இல்ம் அறபுக் கல்லூரியின் மாணவருமான அல்-ஹாபிழ் எம்.ஆர்.முஹம்மது ரிஸ்கான் அவர்களுக்கு இடம்பெற்ற பாராட்டு விழாவில் விசேட அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தனர் தங்கள்மார். அதனைத் தொடர்ந்து காலை உணவை ஜாமியத்துல் பலாஹ் அரபுக் கலாசாலையில் சாப்பிட்டு அங்கிருந்து விடை பெற்றோம்.
அங்கிருந்து விடைபெற்ற நாம் அதன் முன்னால் அமைந்துள்ள தங்கள் வாப்பா அவர்களின் முகைதீன் தைக்காவிற்கு சென்று அதனை தரிசித்துவிட்டு
அதன் முன்னால் அமைந்துள்ள முஹ்யத்தீன் தைக்காவின் விசேட செயலாளரும் நிர்வாகியுமான ஜனாப் ஏ.எம்.முகைதீன் ஜே.பி (முகைதீன் மெனேஜர்) அவர்கள் வயது முதிர்ந்து மிகவும் நோய்வாய்ப்பட்டவர்களாக காணப்பட்டதால் அவர்களை சுகம் விசாரிக்கச் சென்றோம்.
காத்தான்குடி முகைதீன் தைக்காவை தரிசித்த போது.
அதன் முன்னால் அமைந்துள்ள முஹ்யத்தீன் தைக்காவின் விசேட செயலாளரும் நிர்வாகியுமான ஜனாப் ஏ.எம்.முகைதீன் ஜே.பி (முகைதீன் மெனேஜர்) அவர்கள் வயது முதிர்ந்து மிகவும் நோய்வாய்ப்பட்டவர்களாக காணப்பட்டதால் அவர்களை சுகம் விசாரிக்கச் சென்றோம்.
சுகவீனமான நிலையில் முகைதீன் மனேஜர்
(மிகவும் சுகயீனமுற்றிருந்த முகைதீன் மனேஜர் அவர்கள் நேற்று 22.01.2013 காலை 6.00 மணிக்கு இறையடி சேர்ந்தார்கள் இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் பாவங்களை இறைவன் மன்னித்து அவனுடைய லிஹாஹை வழங்குவானாக.)
அங்கு சென்று அவர்களை சுகம் விசாரித்து அவர்களுக்காக துஆப்பிராத்தனை செய்தபின்னர் அப்போது மிகவும் அன்பாக விடுக்கப்பட்ட ஒரு அழைப்பை ஏற்று காத்தான்குடி ஸூபி ஹஸ்ரத் அவர்களின் வீட்டுக்குச் சென்றோம். அன்னார் வயது முதிர்ந்த நிலையில் இருப்பதுடன் தங்கள்மாரை காண்பதற்கு மிகவும் ஆசையாக இருப்பதாகவும் வந்து சந்திக்க நேரம் ஒதுக்கிகேட்டபோது நேரக் குறைவு காரணமாக உடனடியாக அன்னாரை அவரின் வீட்டுக்குச் சென்று சந்தித்தோம்.
அன்னாரை சந்தித்தபின்னர் காங்கேயன் தங்கள்வாப்பா அவர்களினால் அமைக்கப்பட்ட முகைதீன் ஜும்ஆப் பள்ளிவாயலுக்கு விஜயம் செய்தோம் அவங்கு றிபாய் மௌலவீ தலைமையிலான பள்ளியின் நிருவாகக் குழுவினர் எங்களை வரவேற்றனர். அங்கு சென்று பள்ளிவாயலை தரிசித்ததுடன் எங்கு தங்கள்மாருக்கு வழங்கப்பட்ட தேனீர் உபசாரத்தின்பின்னர் அங்கு கூடியிருந்த மக்களிடம் விடைபெற்று கல்முனை செல்லத் தயாரானோம்.
காங்கேயன் ஓடை முகைதீன் ஜும்ஆப் பள்ளிவாயல்
அன்று வெள்ளிக்கிழமையாக இருந்ததினால்ல அவசரமாக கல்முனை சென்று ஜும்ஆவுக்கு திரும்ப வேண்டியதாக இருந்தது. கல்முனைக்கு சென்ற நாங்கள் சாந்தமருதில் அமைந்துள்ள பெட்ரொல் செட் அஸீஸ் அவர்களின் வீட்டிக்கு சென்றோம் அங்கு தேனீர் உபசாரத்தில் கலந்து கொண்டுவிட்டு அங்கு சமூகம் தந்திருந்த மக்களுக்கும் முரீத்தீன்களிடமும் விடைபெற்று ஜும் ஆவுக்காக மட்டகளப்பு பூநோச்சிமுனை பள்ளிவாயலுக்குச் சென்றோம்.
சாந்தமருதுவில் அல்ஹாஜ் அஸீஸ் அவர்களின் வீட்டில்
அங்கு ஜும்ஆத் தொழுகையை நிறைவேற்றியதுடன் அங்கு குழுமியிருந்த மக்களிடம் விடைபெற்று காத்தான்குடிக்கு திரும்பினோம்
அன்றைய பகல் விருந்துபசாரத்தினை அல் ஜாமியத்துல் மின்ஹாஜிய்யஹ்யாவின் அதிபர் மௌலவீ ஏ.எம்.ஏ.எம் ஹாஸிம் (பலாஹி) (பிரதி அமைச்சர் அவர்களின் சகோதரர்) அவர்களின் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த்துடன் அந்த விருந்துபசாரத்தில் இலங்கையின் சிறுவர் அபிவிருத்தி மகளீர் விவகாரப் பிரதி அமைச்சரும், மட்டகள்ப்பு பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் எம்.ஏ.எல்.எம் ஹிஸ்புழ்ழாஹ் அவர்கள் கலந்து கொள்ள இருந்தார்கள்.
பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புழ்ழாஹ் அவர்களுடன்
மௌலவீ காஸிம் பலாஹி அவர்களின் வீட்டைச் சென்றடைந்த தங்கள்மாரை பிரதி அமைச்சர் அவர்களும் மௌலவீ காஸிம் பலாஹி அவர்களும் வரவேற்றனர். அங்கு சிறிது நேரம் பிரதி அமைச்சருடன் உரையாடிவிட்டு பகல் விருந்திற்காக சென்றோம்.
தங்கள்மார்களுக்கு பகல் விருந்து அளிக்கும் காட்சி
தங்கள்மாருடன் அல்ஹாஜ் எஸ்.எல் சீனி முகம்மது (சீனி வாப்பா) அவர்கள்
அங்கு பகல் விருந்தினை முடித்துக்கொண்டு பிரதி அமைச்சர் அவர்கள் விடை பெற்றுச் சென்றார்கள் அதனைத் தொடர்ந்து சிறிது நேரம் அங்கு தாமதித்த தங்கள்மார் கொழும்பு செல்வதற்காக தயாராகினர்.
இலங்கைக்கு வருகை தந்திருந்த இரண்டு தங்கள்களுக்கு அடுத்தநாள் இந்தியா செல்வதாக இருந்தது. சிறிது நேரம் அங்கு தாமதித்த தங்கள்மார் அங்கு சமூகம்தந்த முரீதீன்கள் முஹிப்பீன்களுக்கு ஸலாம் கூறி இங்கிருந்து விடைபெற்று கொழும்பு சென்றனர்.
கொழும்பில் ஒரு நாள் ஓய்வெடுத்து 21.01.2013 அன்று டாக்டர் ஷெய்கு கோயாத் தங்கள் அவர்களும் அஸ்ஸையித் ராஸித் தங்கள் அவர்களும் இந்தியா பயணமானார்கள். அடுத்தநாள் 22.01.2013 செவ்வாய்கிழமை சங்கைக்குரிய அகமது புஹாரி நல்ல கோயாத் தங்கள் அவர்கள் புனித உம்ராக் கடமையை நிறைவேற்றுவதுடன் தனது பட்டனார் எங்களின் கண்மணி முஹம்மது (ஸல்) அவர்களை தரிசிப்பதற்காகவும் புனித மக்கமா நகரம் சென்றார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.
அல்ஹம்துலில்லாஹ்.
அகமியத்திற்காக பைசான் மதீனா.
24.01.2013