ஸலவாத் மஜ்லீஸிக்காக தயாராகிக் கொண்டிருக்கும் பத்ரிய்யஹ்வின் தோற்றம். |
அகிலம் போற்றும் அண்ணலெம்பெருமானார் நபீ (ஸல்) அன்னவர்கள் பிறந்த தினத்தையும் அந்த நேரத்தையும் கண்ணியப்படுத்துமுகமாக இலங்கை காத்தான்குடி பத்ரிய்யஹ் ஜும்ஆப் பள்ளிவாயலில் மிகவும் சிறப்பாக 25.01.2013 வெள்ளிக்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு இடம் பெறவுள்ளது.
அதிகாலை 2.30 மணிக்கு பயான்
பயானைத் தொடர்ந்து புனித ஸலவாத் மஜ்லிஸ்
துஆப் பிராத்தனை
புனித ஸுப்ஹுத் தொழுகை
நூல் வெளியீட்டு விழா
தபறூக் வினியோகம்
ஸலவாத்.
இத்தினத்தில் இடம் பெறவுள்ள நூல் வெளியீட்டு விழாவில் சங்கைக்குரிய மௌலவீ ஈழத்து கஸ்ஸான், பல்நூல்லாசிரியர், கவிஞர் இப்றாஹிம் நத்வீ எழுதிய "கஸிததுல் வித்ரிய்யஹ் - நபீ புகழ் காப்பியம்" மற்றும் "நபீகள் நாயகம் நம்போன்ற மனிதர் அல்லர்" ஆகிய புத்தங்கள் வெளியிடப்படவுள்ளன.
நிகழ்வுகள் குறித்த சில புகைப்படஙகள் உள்ளே
புனிதமிகு ஸலவாத் மஜ்லிஸிக்காக அலங்கரிக்கப்பட்டிருக்கும் பத்ரிய்யஹ் ஜும்ஆப் பள்ளிவாயல்.
வெளியிடப்படவுள்ள நூல்கள்
அதனைத் தொடர்ந்து அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலியுல்லாஹ் நிதியத்தின் நிர்வாகச் செயலகம், பத்ரிய்யஹ் ஜும்ஆப் பள்ளிவாயலின் புதிய கட்டிட திட்டமிடல் அலுவலகம், மற்றும் பிரதி நகர முதல்வரின் பிரதேச அலுவலம் ஆகியன திறந்து வைக்கப்படவுள்ளன.
முஹிப்பீன்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அகமியம் வேண்டுகோள் விடுகின்றது.