ஹாஜாஜீ சிறப்புக் கவிதை
எதிர்வரும் 15.07.2012 ஞாயிற்றுக்கிழமை இடம் பெறவிருக்கும் 26வது வருட ஹாஜாஜீ மகா கந்தூரியை முன்னிட்டு வெளியிடப்படும் கவிதை
கவிஞர் எம்.ஏ.சி. றபாய்தீன் ஜே.பி.
இறையருள் பெற்ற
ஹாஜா
இதயத்தில்
மலர்ந்த ரோஜா
குறை கொள்கை
குபுறு போக்கி
குவலயத்தில்
வாழ்ந்த ஹாஜா!
இறை வணக்கம் இபாதத்
செய்து
இறைவழி வாழ்ந்து
வாழ்வில்
இறைநேசரான ஹாஜா!
அருளுக்கும்
பொருளுக்கும் ஹாஜா
அன்புக்கும்
அகிம்சைக்கும் ஹாஜா
பொறுமையின் பொக்கிஷமே
ஹாஜா
பெருமானார் பேரரே
ஹாஜா
இறைமார்க்கம்
இஸ்லாம் தன்னில்
எல்லோரையும்
அழைத்தவரே ஹாஜா
இறை தூதர் வழி
நடந்து
இறையன்பு
பெற்றவர் ஹாஜா
ராஜஸ்தான்
மாநிலத்தின் ராஜா
றஹ்மானை
அறிந்தவரே ஹாஜா
ரோஜா மணம் பரப்பி
நமது
ரணங்கள்
போக்கிடும் ஹாஜா
ராஜாதி
ராஜாக்களையெல்லாம்
தம்மிடம்
வரவழைக்கும் ஹாஜா
பூஜ்ஜிய வாழ்கையை
உணர்ந்து
புனித வழி
காட்டும் ஹாஜா.
தீ வணங்கிகளை
யெல்லாம்
தீனினுள் நுழைத்த
ஹாஜா
தீயோர் தீயவைகளை
எல்லாம்
திருத்திய எங்கள்
ஹாஜா
நோவினை செய்த
போதும்
நேர்வழி நின்ற
ஹாஜா
காபிர்களை
எல்லாம் வாழ்வில்
கருணையுடன்
அழைத்த ஹாஜா
எங்களை
நேசிக்கும் ஹாஜா
ஏந்தலே எங்கள்
ஹாஜா
உங்களின்
அன்புவேண்டி
உவக்குகிறோம்
எங்கள் ஹாஜா
திங்களாய்
நீங்களிருந்து
தீனொளி
பரப்பிடும் ஹாஜா.
மங்காத உங்கள்
பணியால்
எங்கள் மனதில்
வாழும் ஹாஜா.