காலம் 11/07/2012
இடம் காத்தான்குடி பத்ரிய்யா ஜும்அஹ் பள்ளிவாயல்
இலங்கை நேரம் பி.ப. 5.00 மணி.
அண்ணல் நபீ (ஸல்) அவர்களின் திரு வாய் மலர்ந்து “குத்புல் ஹிந்த்” இந்தியத்தளபதி என்று நன்மாராயம் சொல்லப்பட்டவர்களும், 90 இலட்சம் காபிர்களை தன் விலாயத் அற்புதங்கொண்டு தூய தீனுல் இஸ்லாத்தில் இணைத்தவர்களும்,நெருப்புக்கிடங்கில் நுழைந்து நீண்ட நேரத்தின் பின் வெளிவந்தவர்களும், பிறந்ததும் சுஜூதில் விழுந்து தன் முரீதீன்கள் சுவனம் நுழைய வேண்டும் என அல்லாஹ்விடம் கேட்டு அனுமதி பெற்றவர்களும், 70 வருடங்களாக ஒரே பக்கமாகத் தூங்கியவர்களும்,
தான் மரணித்ததும் தன் நெற்றியில் “ஹாதா ஹபீபுல்லாஹ் மாத பீ ஹுப்பில்லாஹ்” இவர் அல்லாஹ்வின் காதலர் அல்லாஹ்வின் அன்பிலேயே மரணித்துவிட்டார் என்று பொறிக்கப்பட்டவர்களுமான,
ஸாஹிபுல் ஜமால், குத்புல் ஹிந்த் ஹாஜா முயீனுத்தீன் ஷிஷ்தீ அவர்களுடையவும், அவர்களின் அருந்தவப்புதல்வர் ஸாஹிபுல் ஜலால் ஹஸ்ரத் ஹாஜா பக்ருத்தீன் ஷிஷ்தீ அவர்களினதும் பெயர்களினால் நேற்று (11/07/2012) மாலை இலங்கை நேரப்படி சரியாக 5.00 மணிக்கு சங்கைக்குரிய ஷைகு நாயகம் அதிசங்கைக்குரிய அப்துர்றஊப் மிஸ்பாஹி அவர்களுடைய தலைமயில் சுன்னத்வல் ஜமாஅத் உலமாக்கள் சூழ தௌஹீத் வாதிகள் பக்திப்பரவசத்துடன் ஆமீன் கூற திருக்கொடி ஏற்றப்பட்டது.
கொடியேற்றம் சம்பந்தமான புகைப்படங்கள் உள்ளே..
இந்நிகழ்வில் விசேட அதிதிகள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். கொடியேற்ற நிகழ்வினைத் தொடர்ந்து மஜ்லிஸ் நிகழ்வுகள் ஷைகு நாயகம் அவர்கள் தலைமை தாங்க அவர்களின் கலீபஹ் மௌலவீ அப்துல் மஜீத் றப்பானீ அவர்கள் பாதிஹா ஓதி கத்முல் குர்ஆன் நிகழ்வினைச் சிறப்பித்தார்கள்.
முதலாம் இரவான அன்று மஃரிப்தொழுகையின் பின்னால் ”மௌலிது அதாயிர்றசூல்” ஹாஜா நாயத்தின் மௌலித் பாவும், இஷாத்தொழுகையின் பின்னால் எங்களின் ஷைகுனா அவர்களினால் அன்னார் பெயரில் யாத்தளிக்கப்பட்ட “ஹாழிறூ” பைத்தும் பாடப்பட்டு
அதனைத்தொடர்ந்து அல்ஜாமிஅத்துர்றப்பானிய்யஹ் அறபுக்கலாபீட அதிபர் மெளலவீ எச். எம்.எம். இப்றாஹீம் நத்வீ அவர்களினால் ஆன்மீச்சுடர் ஹாஜா நாயகம் அவர்களின் மகாத்மியம் பற்றி மார்க்கச் சொற்பொழிவும் நடாத்தப்பட்டு அதனைத் தொடர்ந்து ஏல விற்பனை நிகழ்வுகள் நடாத்தப்பட்டு துஆ மற்றும் சலவாத்துடன் நிகழ்வுகள் யாவும் முற்றுப் பெற்றன.