அகமியத்துக்காக -தப்லே ஆலம்
சாய்ந்தமருது நகரானது இலங்கையின் கிழக்கு மகாணத்தில் கல்முனை நகரையடுத்து அமைந்துள்ளது.இது செல்வச் செழிப்பு மிக்க முழுமையாக முஸ்லீம் மாத்திரம் அடர்த்தியாக வாழும் பகுதியாகும்.
இங்கு இறைநேசர்களான நான்கு இறைநேசர்களின் தர்ஹாக்கள் குறிப்பிடத்தக்கவையாக காணப்படுகின்றன. அதில் எமது கதாநாயகர் தவிந்த மூப்பெரும் நாதாக்களான,
மகானின் புனித ஸியாரம்
கந்தூரிப் புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
அடுத்தவர்களாக சற்குரு மக்காமில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள சங்கைக்குரிய மகான் ஹஸன் வலியுல்லாஹ் அவர்களாவர் இவர்கள் நாற்பது இறைநேசர்களுக்கு தலைவராக இருந்ததினால் இவர்களுக்கு “சற்குரு” என்ற பெயர் வழங்கப்பட்டது. இவர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தை “சற்குரு மக்காம்” என்றே அழைக்கின்றனர்.
அப்துல் வாஹித் மௌலானா அவர்களின் புனித ஸியாரம் |
அடுத்தவர்கள் சங்கைகுரிய மகான் அஷ்ஷெய்கு அப்துல் வாஹித் மௌலானா அவர்களாவர். இவர்களின் தர்ஹாவுடன் அல் மத்ரஸதுல் வாஹிதிய்யஹ் அரபுக் கல்லூரியும் அமைந்து காணப்படுகின்றது.
அல் மத்ரஸதுல் வாஹிதிய்யஹ் மாணவர்களில் சிலர் |
இவ்வாறு பல மகான்களின் உறையுள்ளாக காணப்படும் சாந்தமருது நகரில் தொடர்ந்து வருடாவருடம் இப் புனித தர்ஹாக்களில் திருக்குர்ஆன் மஜ்லிஸ், மௌலீத் பாராயணம், மற்றும் கந்தூரி நிகழ்வுகள் இடம் பெற்று வருகின்றன.
பாடல் இசைக்கும் பக்கீர் ஜமாஅத்தினர். |
என்றாலும் எமது கதாநாயகர் சங்கைக்குரிய மகான் அஷ்-ஷெய்கு ஹாஜா ஜௌஹர் ஷாஉல் ஜிஸ்தி (ரழி) அவர்களின் தர்ஹாவில் பக்கீர் ஜமாஅத்தினர் தொடர்ந்து கந்தூரி தினங்களில் தங்கிருந்து பாடல்களை இசைப்பது விசேட அம்சமாகும்.
மகான் அவர்கள் பற்றி.
அல்லாஹ்வின் திருத்தூதரான முஹம்மது நபி (ஸல்) அவா;களது மரபிலே தோன்றி இந்திய தேசத்துக்கு வந்து இறைபணி செய்து அஜ்மீர் ஷரீபில் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கும் அதாயீ றஸூல் செய்யிதினா ஹாஜா முயினுத்தீனுல் ஜிஸ்தி நாயகமவர்களின் தலைமுறை வழியாக வந்தவர்கள் அஷ்-ஷெய்கு ஹாஜா ஜௌஹர் ஷாஉல் ஜிஸ்தி (ரழி) அவர்கள்.
இவர்கள் இந்தியாவிலுள்ள கேரள மானிலத்தின் மலபார் பிரதேசத்தில் குண்டுவெடி எனும் ஊரில் பிறந்தார்கள். அன்னார் மகத்துவமிக்க காதிரியத்துல் ஜிஸ்தி தரீக்காவை இலங்கையின் பல பாகங்களிலும் பிரசித்தம் செய்தது மட்டுமன்றி உலகின் பல நாடுகளுக்கும் சென்று இஸ்லாத்தின்பால் பாமரமக்களை ஈர்த்து அவர்களை சீர்திருத்தி நல்லுபதேசங்கள் செய்து அவ்விடங்களில் தைக்கியாகள், ஸாவியாக்களை நிறுவி தீனுல் இஸ்லாத்துக்காக பாடுபட்டார்கள்.
இறுதியாக இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அம்பாறை மாவட்டத்தின் பழம்பெரும் கிராமமான சாந்தம் தவழும் சாய்ந்தமருது எனும் ஊரை வந்தடைந்தார்கள்.
சங்கைக்குரிய ஷெய்கு நாயகம் அவா;கள் இவ்வூருக்கு வந்தபோது அவா;கள் இங்கு தங்கியிருந்து தமது தரீக்காவூடைய வேலைகள், மார்க்கப் பணிகளை தொடர்வதற்காக சாய்ந்தமருதுவில் மார்க்கப் பற்றுள்ளவரான வாவா முல்லைக்கார்ர் என்பவர் சாய்ந்தமருது 10ம் குறிச்சியில் பெண்கள் பாடசாலை வீதியில் அமைந்துள்ள தமக்குச் சொந்தமான காணித்துண்டு ஒன்றை ஷெய்கு நாயகம் அவர்களுக்கு இனாமாகக் கொடுத்து அவர்களின் கலீபாவாகவும் கிலாபத் பெற்று வாழ்ந்தார்கள். இவரைத் தொடர்ந்து பல கலீபாக்கள் ஷெய்கு நாயகம் அவர்களினால் நியமிக்கப்பட்டனர்.
அக்காலப் பகுதியிலே ஷெய்கு அவர்கள் பல கராமத்துக்களைச் செய்து காட்டியதுடன் தாம் சார்ந்த தரீக்காவில் பல முரீதீன்களை சேர்த்து அவர்களுக்கு பைஅத் (ஞானதீர்ச்சை) கொடுத்து ஆத்மீகக் கல்வியையும் போதித்தார்கள்.
அத்துடன் சாய்ந்தமருதுவை தனது தீன்பணிக்குரிய மையத்தளமாகக் கொண்ட ஷெய்கு நாயகம் அவர்கள் இலங்கையின் பல பாகங்களுக்கும் சன்மார்க்கப் பணியாற்றச் சென்று வருவார்கள்.
மகான் அவர்களின் அற்புதங்கள்
மகான் அஷ்-ஷெய்கு ஹாஜா ஜௌஹாஷாஉல் ஜிஸ்தி (ரழி) அவர்கள் தான் வாழும் காலத்தில் நிகழ்த்திய அற்புதங்களுக்குச் சான்றாகப் பின்வரும் சிலவற்றைக் கூறலாம்.
1.ஷெய்கு நாயகம் அவர்கள் கண்டி மீரா மக்காம் பள்ளி வாசலில் தாம் “கல்வத்து” எனும் இறைதியானத்தை மேற்கொள்வதற்காக அங்கு வந்தபோது அவ்வூர் மக்கள் வந்து கண்டிப்பாக நீங்கள் இங்கு கல்வத்திருக்க முடியாது என்று சொல்லி மகான் அவர்களை பள்ளியை விட்டு வெளியேற்ற முயன்றனர்.
அப்போது மகான் அவர்கள் நான் இருந்தே தீருவேனென்று விடாப்பிடியாக பக்தியோடு கல்வத்தை மீரா மக்காம் பள்ளியில் முடித்துக் கொண்டார்கள்.
ஷெய்கு நாயகமவா;களின் பக்தி கண்டு ஊர் மக்கள் திரண்டுவந்து அவர்களிடம் பைஅத் பெற்று அவர்களின் தரீக்காவைப் பின்பற்றியதுடன் நடந்தவற்றுக்காக மன்னிப்பும் கேட்டார்கள்.
2. அதன்பின் மகானவர்கள் பாவா ஆதம் மலை சென்று, புசல்லாவை எனும் ஊரை அடைந்தபோது அவ்வூர் பள்ளியின் கதீப் அவர்கள் ஷெய்கவர்களை ஒரு மார்க்கப் போதகர் எனக்கண்டு பள்ளியில் தங்குவதற்கு இடம் கொடுத்தார்கள்.
அதே நேரம் ஷெய்கு அவர்கள் தங்கியிருந்த அறையினுள் “ஹூ” என்னும் ஓசை கேட்டு அயலவா;கள் வந்து பார்த்தபோது அறையினுள் ஒரு பெரு வெளிச்சம் தெரிந்ததாம். இவ்வதிசயத்தைக் கண்டவர்கள் அறையினுள்; பார்த்தபோது மகான் அவர்கள் அல்லாஹ்வைத் தியானித்துக் கொண்டிருந்தார்கள்.
3. அட்டுளுகம எனும் ஊரிலுள்ள சிலர்; இரத்தினபுரி சென்று வியாபாரம் செய்பவர்களாக இருந்தனர். அக்காலத்தில் வர்த்தகம் செய்பவர்கள் தோணியின் மூலமே தமது பிரயாணங்களை மேற்கொண்டு வந்தனர்.
அவ்வேளையிலே ஒருநாள் திடீரென அவர்கள் பயணம் செய்யும் ஆறுகளெல்லாம் நீர்வற்றி வியாபாரத்திற்கு சென்ற தோணிகளெல்லாம் தரைதட்டி நின்றன.
அப்பொழுது அவ்வூரின் பள்ளிவாசலாகிய “ஜன்னத்” பள்ளியில் தங்கியிருந்த மகான் அவா;களிடம் சென்று அவ்வியாபாரிகள் முறையிடவே “ஆறு பெருகிவிட்டால் என்னை உங்களது ஊருக்கு கொண்டு போவீர்களா” எனக் கேட்டார்கள்.
அதற்கு அந்த வியாபாரிகள் ஒப்புக்கொள்ள மறுகணமே பாட்டமாய் மழை பெய்யத் தொடங்கியது தரைதட்டிய தோணிகளெல்லாம் நீரில் மிதக்கவே வியாபாரிகள் மகான் அவர்களையும் தோணியில் கூட்டிக்கொண்டு தங்கள் ஊருக்குச் சென்றனர்.
ஹாஜா மக்காம் தர்ஹாவின் நிருவாக சபையினர் |
4. பாணந்துறையிலுள்ள பள்ளிவாசலில் 40 நாட்கள் தங்கி கல்வத்து இருந்த ஷெய்கு நாயகமவர்களை அவ்வூரில்வா;ழும் இருவர் பால், பழம் என்பன கொண்டு சென்று சோதனை செய்தனர். அவற்றை தனது கல்வத்துக் காலத்தில் ஏறிட்டும் பார்க்காத மகான் அவர்களிடம் இந்த இருவரும் தோல்வியூற்றனர்.
மகான் அவர்கள் அவ்வூரில் பின்னர் தனது பாட்டன் ஜிஸ்தி நாயகம் அவர்களின் பெயரில் தைக்கியா கட்டி அங்கு மக்களுக்கு நல்லுபதேசம் செய்தார்கள். இப்பள்ளிவாயிலே இப்போது பாணந்துறையில் ஜிஸ்தி பள்ளிவாசல் என அழைக்கப்படுகின்றது.
5. ஷெய்கு நாயகம் அவர்கள் காலிப் பகுதியிலுள்ள கட்டுக்கொடை எனும் ஊரில் வந்திருந்து வைத்தியம் செய்து கொண்டிருந்த வேளையிலே அங்குள்ள ஒரு செல்வந்தருக்குப் பிறந்த இரண்டு கால்களும் நடக்க முடியாமல் நோயூற்றிருந்த கன்னிப் பெண்ணின் தீராத நோயைத் தனது ஆத்மீக வலிமையினால் மிகவும் இலகுவாகக் குணப்படுத்தினார்கள்.
அதையடுத்து அப்பெண்ணின் பெற்றோர்களின் சம்மதத்துடன் “சரீபா” எனும் அப்பெண்ணை தனது வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக் கொண்டார்கள்.
இத்தம்பதியினருக்கு இரு புதல்வர்கள் பிறந்தார்கள் இவர்களின் ஒருவர்தான் தீன்பணி செய்து இறையடியெய்தி "அட்டுளுகம" எனும் ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கும் அஷ்-ஷெய்கு ஹாஜா அப்துல் றஹீம் ஜௌஹாஷா (ரஹ்) அவர்களாகும்.
மற்றையவர்கள் கொழும்பில் தனது இறைபணியைப் புரிந்தார்கள் இவர்களின் புனித ஸியாரம் தெஹிவலை ஜும்மாப் பள்ளிவாயலில் தற்போது அமைந்துள்ள கௌத்துக்கு கீழே உள்ளது. பள்ளிவாயல் விஸ்தரிப்பின் போது அவ்விடத்தில் கௌது (நீர்த் தடாகம்) அமைக்கப்பட்டது
இவ்வாறு பல அற்புதங்களுடன் இறைபணி புரிந்த மகான் அவர்கள் தான் உயிருடன் வாழ்ந்த காலத்தில் சாய்ந்தமருது கிராமத்தில் ஓவ்வொரு வருடமும் ரபிஉல் ஆகிர் மாதத்தில் வலிகள் கோமான் குத்புல் அக்தாப் முகையத்தீன் ஆண்டகை (ரழி) அவர்களின் பெயரினால் மரக்கம்பத்தில் கொடியேற்றி தொடர்ச்சியாக 12 நாட்கள் மௌலீது ஓதி இறுதியில் கந்தூரியூம் கொடுத்து வந்தார்கள்.
ஷெய்கு நாயகம் அவர்கள் சாய்ந்தமருதுவில் இறைவனடி எய்துமுன் தேக வைத்தியரான சேகுவனார் என்பவரிடம் தான் மரணிக்கும் நாளைச் சொன்னபடி உழுச் செய்து கொண்டு இறை தியானத்திலிருந்தார்கள்.
தனது முரீதீன்கள் சூழ்ந்திட ஹிஜ்ரி 1324 ரபிஉல் ஆகிர் மாதம் பிறை 20 செவ்வாய்க்கிழமை சுபுஹ் நேரத்தில் சங்கைக்குரிய ஷெய்கு நாயகமவர்கள் இறையடியெய்தினார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ஷெய்கு நாயகம் அவர்கள் தமது வபாத்தின் பின்னர் 1961ம் ஆண்டு தனது பேரப்பிள்ளை அஷ்-ஷெய்கு ஹாஜா முஸ்ஸம்மில் ஜௌஹர் ஷா (றஹ்) அவா;களிடம் கனவில் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர்கள் அடங்கப்பட்டிருக்கும் ஸியாரத்துடன் இணைந்தவாறு கிடுகினால் பள்ளிவாசல் ஒன்று அமைக்கப்பட்டது.
தற்போது அமைக்கப்பட்டுவரும் பள்ளிவாயலில் உள்தோற்றம் |
பின்னர் இப்பள்ளிவாசலானது 1966ம் ஆண்டு முஸ்ஸம்மில் ஜௌஹர் ஷா (றஹ்) அவர்களது மேற்பார்வையின் கீழ் கல்லினால் கட்டப்பட்டது.
தற்போது இப்பள்ளிவாசல் முற்றாக உடைக்கப்பட்டு தற்போதுள்ள நிருவாகத்தினரால் இரு மாடிகளைக் கொண்ட பள்ளிவாசலாக கட்டப்பட்டுள்ளது. இப்பள்ளிவாசல் ஹாஜா மக்காம் பள்ளிவாசல் எனவும் மஸ்ஜிதுல் ஆரிபீன் எனவும் அழைக்கப்படுகின்றது.
அஷ்-ஷெய்கு ஹாஜா ஜௌஹார் ஷாஉல் ஜிஸ்தி (ரழி) அவர்களின் வபாத்தின்பின் அவர்களினால் நிறைவேற்றப்பட்டு வந்த கொடியேற்றம், மௌலீ, கந்தூரி வைபவங்கள் என்பன இத் தர்ஹாவின் நம்பிக்கையாளர் சபையினரால் வருடாவருடம் வாழையடி வாழையாக நிறைவேற்றப் பட்டு வருகின்றது.
கொடியேற்றமும், கந்தூரி வைபவமும்.
இத் தர்ஹாவில் மரக்கம்பத்தில் ஏற்றப்பட்டு வந்த கொடியானது தற்போது இதன் நம்பிக்கையாளர் சபையினரால் 1995ம் மூன்று தட்டுக்களைக் கொண்ட மினரா அமைக்கப்பட்டு அதில் வருடா வருடம் ஏற்றப்பட்டு வருகின்றது.
இந்த வகையில் தர்ஹாவின் 132வது வருட கொடியேற்றம் 2012.02.22ம் திகதி நடைபெற்று தொடர்ச்சியாக 12 நாட்கள் மௌலீது ஓதப்பட்டு 2012.03.11ம் திகதி 132வது வருடாந்த மகா கந்தூரி இடம் பெற்றது.
மிகவும் பழைமையான இவ் தர்ஹாவானது தற்போது புனர்நிர்மாணம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஈகையாளர்கள் அதற்கு உதவிகளை வழங்கலாம்.
அகமியத்துக்காக -
தகவல் மற்றும் வரலாறு - ஏ.எல்.நஸீர் ஆசிரியர், Nortary Public, JP
செயலாளர் - ஹாஜா மக்காம் நிர்வாக சபை.
புகைப்படங்கள் - தப்லே ஆலம்.