Saturday, March 10

புனித குத்பிய்யஹ் கந்தூரி.

இலங்கையில் காத்தான்குடி பத்ரிய்யஹ் ஜும்ஆப் பள்ளிவாயலில் மாத்த்திற்கு இரண்டு முறை புனித குத்பிய்யஹ் மஜ்லிஸ் இடம் பெற்றுவருவது வழக்கமாகும். புனித குத்பிய்யஹ் மஜ்லிஸினை புனித குத்பிய்யஹ் சங்கத்தினர் நடாத்தி வருகின்றனர்.

இவ் வருடம் 27 வது வருடமாக புனித குத்பிய்யஹ் கந்தூரி 04.03.2012 ஞாயிற்றுக் கிழமை மிகச் சிறப்பாக இடம்பெற்றது.


அப்துர் றஸீத் கோயாத் தங்கள்
புனித குத்துப்பிய்யஹ் மஜ்லிஸானது காத்தான்குடி பத்ரிய்யஹ் ஜும்மாப் பள்ளிவாயலில் 1985 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதற்கான அனுமதியை அக்காலத்தில் வாழ்ந்த அதி சங்கைக்குரிய ஆஷிகுல் அவ்லியா, குத்துப்ஸமான் அஸ்ஸெய்யிது ஷெய்க் அப்துர் றஷீத் கோயாத் தங்கள் மௌலானா வாப்பா அவர்கள்

எங்களின் கண்ணியமிக்க ஷெய்கு நாயகம், அஸ்ஸெய்குல் காமில் ஷெய்குத் தரீகதில் காதிரிய்யத்தி வர் ரிப்பாய்யியத்தி வன் நக்ஷபந்திய்யதி அஷ் ஷெய்க் அல் ஆலிமுல் வாஸில் அப்துர் றஊப் மிஸ்பாஹி காத்தானி அவர்களுக்கு தவ்ஹீத் தளமாக விளங்கும் காத்தான்குடி பத்ரிய்யஹ்வினதும் மற்றும் தவ்ஹீத் வாதிகளினதும் பாதுகாப்பு நலன் கருதி பேணி வருவதற்காக வழங்கினார்கள்.

"திருக் கொடியின் முக்கியத்துவம்" சிறப்புரை இணைக்கப்பட்டுள்ளது

சங்கைக்குரிய ஷெய்கு நாயகம்
இதனைத் தொடர்ந்து காத்தான்குடி பத்ரிய்யஹ் ஜும்ஆப் பள்ளிவாயில் இவ் ராத்திப் மஜ்லிஸானது ஆரம்ப காலப்பகுதியல் ஷெய்குநாயகம் அவர்களை கலீபாவாக்க் கொண்டும்,

மர்ஹூம் மௌலவீ பாறூக் காதிரி
அதன்பின் மர்ஹூம் அஷ்ஷஹீத் மௌலவீ பாறூக் காதிரி அவர்களின் தலைமையிலும், அதனைத் தொடர்ந்து சங்கைக்குரிய மௌலவீ ஏ.எல்.எம். இஸ்மாயில் பலாஹி அவர்கள் மற்றும் சங்கைக்குரிய மௌலவீ கலீபத்துஸ் ஷெய்க் எம்.எம்.ஏ. மஜீத் (றப்பானீ), மௌலவீ எச்.எம்.எம்.பஸ்மின் (றப்பானீ) ஆகியோரின் தலைமையிலும் தொடராக நடைபெற்று வருகின்றது.

கலீபா மௌலவீ எம்.எம்.ஏ.அப்துல் மஜீட் (றப்பானீ)
இவ்வருடத்திற்கான புனித குத்துப்பிய்யஹ் கந்தூரி நிகழ்வுகள் 02.03.2012 அன்று வெள்ளிக்கிழமை அஸ்ர் தொழுகையின் பின் சரியாக 05.00 மணிக்கு புனித திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின.

அதி சங்கைக்குரிய ஆஷிகுல் அவ்லியா, குத்துப்ஸமான் அஸ்ஸெய்யிது ஷெய்க் அப்துர் றஷீத் கோயாத் தங்கள் மௌலானா வாப்பா அவர்கள்
புனித திருக்கொடியேற்றத்தை ஆரம்பித்து வைக்குமுகமாக சங்கைக்குரிய ஏ.எல்.எம்.இஸ்மாயில் பலாஹி அவர்கள் (புனித குத்துப்பியஹ் சங்கதின் தலைவர்) பாத்திஹா ஓதினார்கள். அதனைத் தொடர்ந்து துஆப்பிராத்தனையை சங்கைக்குரிய மௌலவீ எச்.எம்.எம். பஸ்மில் றப்பானீ (புனித குத்துப்பியஹ் சங்கதின் உப-தலைவர்) அவர்கள் நிகழ்த்தினார்கள்.


அடுத்த நிகழ்வாக “ முறாதீயா.... முறாதீயா... முறாதீ.. முறாதீ ஷெய்க் முஹ்யித்தீன் முறாதீ.." என்ற முறாதிய்யாஹ் முழக்கத்துடன் நூற்றுக்கணக்கான பக்கதர்கள் புடைசூழ புனித திருக் கொடியை அனைத்து உலமாஉகளும் ஒன்றினைந்து ஏற்றிவைக்க பக்கீர் ஜமாஅத்தினரின் “தப்” ஓசையும் முரிதீன்களின் உள்ளத்தில் பக்திப் பரவசத்தை ஏற்படுத்தியது.


அடுத்த நிகழ்வாக புனித கத்முல் குர்ஆன் பாராயணமும் மஃரிப் தொழுகையின் பின்னால் புனித முஹ்யித்தீன் மௌலீத் பாச்சரமும் அதனை அடுத்து பத்ரிய்யஹ் ஜும்மாப் பள்ளிவாயலின் தலைவரும், ஈழத்து கஸ்ஸான் சங்கைக்குரிய மௌலவீ எச்.எம்.எம். இப்றாஹிம் நத்வீ அவர்களினால் மார்க்கச் சொற்பொழிவு “இஸ்லாத்தில் கொடியும் முக்கியத்துவம்” என்ற தலைப்பில் இடம் பெற்றதுடன் சுமார் 9.30 மணியளவில் தபர்றூக் வினியோகத்துடன் முதலாம் நாள் நிகழ்வுகள் யாவும் சலவாத்துடன் நிறைவு பெற்றன.

"திருக் கொடியின் முக்கியத்துவம்" சிறப்புரை

Download செய்ய
(Download என்பதை கிளிக் செய்து - பின்னர் Mouse யை Right Click செய்து "Save as" யை கிளிக் செய்யவும்)
மௌலவீ. ஈழத்து கஸ்ஸான் எச்.எம்.எம். இப்றாஹீம் நத்வீ
இரண்டாம் நாள் நிகவுகளாக அதிசங்கைக்குரிய ஷெய்குநாயகம் அவர்களின் தலைமையில் சரியாக பி.ப 5.00 மணிக்கு புனித முஹ்யித்தீன் மௌலீத் நிகழ்வும், மஃரிப் தொழுகையின் பின்னால் புனித குத்பிய்யஹ் மஜ்லிஸின் தலைவர் கலீபா ஏ.எல்.எம். இஸ்மாயில் பலாஹி அவர்களின் தலைமையில் “அல் குத்பிய்யதுஷ் ஷரீபா” குத்பிய்யஹ் றாத்திப் மஜ்லிஸ். இடம்பெற்றது. இஷாத் தொழுகையின் பின்னால் தபறூக் வினியோகத்துடன் மஜ்லிஸ் நிகழ்வுகள் யாவும் ஸலவாத்துடன் நிறைவு பெற்றன.


மூன்றாம் நாள் நிகழ்வுகளாக பி.ப.5.00 மணிக்கு புனித முஹ்யித்தீன் மௌலீத் பாராயணமும், மஃரிப் தொழுகையின் பின்னால் புனித புர்தாஹ் ஷரீபாவும் அதனை தொடர்ந்து இஷாத் தொழுகையின் பின்னால் சங்கைக்குரிய மௌலவீ கே.ஆர்.எம். ஸஹ்லான் றப்பானீ அவர்களால் மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது.

மௌலவீ கே.ஆர்.எம்.ஸஹ்லான் (றப்பானீ)
அதனைத் தொடர்ந்து பெரிய துஆ ஓதப்பட்டு, தபறூக் வினியோகத்தின் போது ஆத்மீகப் பாடகர் கே.எம்.எம். அமானுல்லாஹ் (றூஹுல்லாஹ்) அவர்களினால் ஈழத்து கஸ்ஸான் இயற்றிய ஆன்மீகப் பாடல் பாடப்பட்டது.

ஆன்மீகப் பாடகர் கே.எம்.எம்.அமானுல்லாஹ் (றூஹுல்லாஹ்)
பின்னர் இவ்வருட புனித குத்பிய்யஹ் மஜ்லிஸ் நிகழ்ச்சிகள் யாவும் இனிதே சலவாத்துடன் நிறைவு பெற்றன.






நன்றி:
புகைப்படங்கள் மூலம் : ஸம்ஸ் மீடியா யுனிட் (www.shumsme.com)
தகவல் உதவி : www.ajawt.org

 
Design by Ahamiyam themes | Hosted by Fizmad - Ahamiyam,UK | Ahamiyam followship,UK