Saturday, February 4

பூமான் புகழ் கூறும் ஸலவாத் மஜ்லிஸ்

அகிலத்திற்கு அருட் கொடையாக வந்துதித்த எம் பெருமானார் (ஸல்) அவர்களின் பிறந்த தினமான றபீஉனில் அவ்வல் பிறை 10 இல் அதிகாலை சரியாக 3.30 மணிக்கு காத்தான்குடி 05 குறிச்சி பத்ரிய்யஹ் ஜும்மாப் பள்ளிவாயில் புனித ஸலவாத் மஜ்லிஸ் பிரதி வருடமும் இடம் பெற்று வருவது வழக்கமாகும்.

அதே போன்று இவ்வருடமும் பெருமானாரின் புகழ் கூறும் புனித ஸலவாத் மஜ்லிஸ் 04.02.2012 இன்று இரவு 05.02.2012 அதிகாலையில் இடம் பெற தயாராகிக் கொண்டிருக்கின்றது. 

இதே தினத்தில் 05.02.2012 எங்களின் கண்மணி ஷெய்கு நாயகம் மௌலவீ அல்ஹாஜ் அப்துர் றஊப் மிஸ்பாஹி அவர்களின் பிறந்த தினமாகவும் உள்ளதால் பிறந்த தின நிகழ்வுகளும் இடம் பெறவுள்ளன.

தயாராகிக் கொண்டிருக்கும் பத்ரிய்யஹ் புகைப்படங்கள் உள்ளே..

அதற்காகத் தயாராகிக் கொண்டிருக்கும் பத்ரிய்யஹ் மண்ணின் சில புகைப்படங்கள் வாசகர்களினதும் ஷெய்குனா அவர்களின் முரிதுகளினதும் பார்வைக்கா அகமியம் வழங்குகின்றது.

ஸலவாத் மஜ்லிஸ் நிகழ்ச்சி நிரல்
அதிகாலை 03.30 பயான்
அதிகாலை 04.00 மணிக்கு நபீகள் கோமான் மீதான ஸலவாத்
அதிகாலை 5.10 சுபஹ் தொழுகை
துஆ மற்றும் தபறூக் வினியோகம்.










நன்றி: புகைப்படங்கள் எம்.ஐ.எம்.இர்ஸாத்

 
Design by Ahamiyam themes | Hosted by Fizmad - Ahamiyam,UK | Ahamiyam followship,UK