காத்தான்குடி -06 தீன் வீதியில் அமைந்துள்ள மஸ்ஜிது மன்பஇல்ஹைராத் பள்ளிவாயலில் 03/02/2012 ம் திகதி அண்ணல் நபீ ஸல் அவர்களின் புனிதமௌலித் மஜ்லிஸ் பதினோராம் நாள் மிக சிறப்பாக நடைபெற்றது.
அன்றைய நாள் இஷா தொழுகையினை தொடர்ந்து ஹைராத் குர்ஆன் மத்ரஸாவிலிருந்து சுமார் 20 மாணவர்கள் அல் குர்ஆன் ஷரீபையும்,மார்க்க அடிப்படைச் சட்டங்களையும், சூராக்களையும், 40 நபீமொழிகளையும் மனனம்செய்து தகமைச் சான்றிதழ் பெற்று மத்ரஸாவை விட்டும் வெளியேகினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!
அங்கு நடைபெற்ற நிகழ்வுகள் யாவும் பார்த்தோரை பரவசத்திற்குள்ளாக்கியதோடு, மாணவ,மாணவியரின் மழலைமொழிகளை கேட்ட அவர்களின் பெற்றோர்களை சந்தோசத்தில் ஆழ்த்தியது.
அதனைத்தொடர்ந்து உரையாற்றிய குர்ஆன் மத்ரஸா முஅல்லிம் மௌலவீ எச்.எம்.எம். பஸ்மின் றப்பானீ அவர்கள்
“முஹம்மத் நபீ (ஸல்) அவர்கள் இல்லை என்றால் வான மண்டலங்கள்,பூமி, உலகம் அதிலுள்ள எதுவும் படைக்கப்பட்டிருக்கமாட்டாது, அல் குர்ஆன் இறக்கியருளப்பட்டதும் அண்ணல் நபீ (ஸல்) அவர்களுக்காகத்தான்.”
“இந்தக் குர்ஆனை நாங்கள் ஒரு மலையின் மீது இறக்கியிருந்தால் அது இறைவனின் பயத்தால் வெடித்துச் சிதறி இருக்கும்”.(அல் குர்ஆன்)
“குர்ஆனை கற்று அதை பிறருக்குக் கற்றுக்கொடுப்பவரே உங்களில் சிறந்தவர்!” (நபீமொழி)
“எவர் அல் குர் ஆனை ஓதி அதன் படி அமல் செய்தாரோ அவரின் பெற்றோர்களுக்கு நாளை மறுமையில் ஒளியினால் ஆன கிரீடம் ஒன்றை அல்லாஹ் அணிவிக்கின்றான். அந்தக்கிரீடத்தின் பிரகாசம் சூரியனுடைய பிரகாசத்தை விட ஒளிவுடையதாக இருக்கும்”
போன்ற திரு வசனங்களையும், நபீமொழிகளையும் எடுத்துக்காட்டி சன்மார்க்க விளக்கமளித்தார்கள்.
இதனைத் தொடர்ந்து சான்றிதழ் வழங்குவைபவம் நடைபெற்றது. புனித குர்ஆன் ஓதி முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் உலமாஉகளாலும் மற்றும் மன்பஉல் ஹைறாத் பள்ளிவாயல் நிருவாகிகளினாலும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.
இத்துடன் நிகழ்வுகள் யாவும் சலவாத்துடன் இனிதே நிறைவு பெற்றன.
அகமியத்துக்காக - ஹபீத் மஹ்மூது லெப்பை
இதனைத் தொடர்ந்து சான்றிதழ் வழங்குவைபவம் நடைபெற்றது. புனித குர்ஆன் ஓதி முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் உலமாஉகளாலும் மற்றும் மன்பஉல் ஹைறாத் பள்ளிவாயல் நிருவாகிகளினாலும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.
இத்துடன் நிகழ்வுகள் யாவும் சலவாத்துடன் இனிதே நிறைவு பெற்றன.
அகமியத்துக்காக - ஹபீத் மஹ்மூது லெப்பை