அருளாய் இவ்வுலகிற்கு அவதரித்த எம்பெருமானார் (ஸல்) அவர்கள் பிறந்த ரபிஉனில் அவ்வல் மாத்த்தில் எங்களின் கண்மணி (ஸல்) அவர்களின் புகழ் கூறும் புன்னிய மௌலீத் மஜ்லிஸ் புனித திருக் கொடியேற்றத்துடன் காத்தான்குடியில் அப்துல் ஜவாத் ஆலிம் வலீயுல்லாஹ் நிதியத்தின் கீழ் இயங்கும் காத்தான்குடி 05 பத்ரிய்யஹ் ஜும்ஆப் பள்ளிவாயலிலும் அதன் கிளை நிறுவனங்களான காத்தான்குடி தீன் வீதியில் அமைந்துள்ள மன்பஉல் ஹைராத் பள்ளிவாயலிலும் மற்றும் ஜென்னத் மாவத்தையில் அமைந்துள்ள மர்ஹும் தையிப் ஆலிம் அவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட அல் மத்ரஸதுர் றஹ்மானிய்யஹ் குர்ஆன் மத்ரஸாவிலும் நூறாணிய்யஹ் மாவத்தையில் அமைந்துள்ள அல் மத்ரஸதுல் இப்றாஹீமிய்யஹ் மத்ரஸாவிலும் மிகவும் விமர்சையாக நடை பெற்று வருகின்றது.
ஹைராத் பள்ளிவாயலில் 24.01.2012 செவ்வாய்கிழமை 35வது வருடமாக புனித திருக்கொடியேற்றப்பட்டு நிகழ்வுகள் இடம் பெற்று வருகின்றன. கொடியேற்ற தினத்தன்று கத்முல் குர்ஆன் வைபவத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
புகைப்படங்கள் உள்ளே...
தொடராக 12தினங்கள் இடம் பெறும் இந்நிகழ்வுகளில் மாலை மஃரிப் தொழுகையை தொடர்ந்து சுப்ஹான மௌலீதும், இஷாத் தொழுகையினை தொடர்ந்து மார்க்க உபனியாசங்களும் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.
இதே போன்று பத்ரிய்யஹ் ஜும்ஆப் பள்ளிவாயலிலும் இதே தினத்தில் திருக் கொடியேற்றப்பட்டு மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து பெருமானாரின் புகழ் கூறும் சுப்ஹான மௌலீத் மஜ்லிஸ் இடம் பெற்று வருகின்றது.
அல் மத்ரஸதுல் இப்றாஹிமிய்யாவில் மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து மௌலீத் மஜ்லிஸ் ஆரம்பமாகி இஷாத்தொழுகையின் பின்னால் மார்க்க உபனியாசம் நிகழ்த்தப்பட்டு வருகின்றது.
அல் மத்ரஸதுர் றஹ்மானிய்யாவில் மாலை 05 மணியளவில் மௌலீத் மஜ்லிஸ் ஆரம்பமாகி மஃரிப் தொழுகையை தொடர்ந்து மார்க்க உபனியாசம் நிகழ்த்தப்பட்டு வருகின்றது.