காத்தான்குடி தீன் வீதியில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் மன்பஉல் ஹைராத் பள்ளிவாயலில் தொடர்ந்து 12 தினங்கள் ஓதப்பட்டு வந்த பெருமானாரின் புகழ் கூறும் மவ்லீத் நிகழ்வு இன்று 05.02.2012 காலையில் வழங்கப்பட்ட மாகா கந்தூரியுடன் நிறைவு பெற்றது.
இந் நிகழ்வுகளை அதிசங்கைக்கும் மதிப்புக்குமுரிய ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் அப்துர் றஊப் மிஸ்பாஹி, பஹ்ஜி அவர்கள் ஆரம்பித்து வைக்க விசேட அதிதிகளாக காத்தான்குடியின் பிரதி தவிசாளரும், அப்துல் ஜவாத் ஆலிம் வலீயுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் உப-தலைவருமான அல்ஹாஜ் எம்.ஐ. ஜெஸீம் ஜே.பி அவர்களும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான அல்ஹாஜ் பஸீர் ஷேகுதாவுத் எம்.பி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வுகள் தொடர்பாக எமக்குக் கிடைப்பெற்ற புகைப்படங்கள் இங்கே பிரசுரிக்கப்படுகின்றன.