இலங்கையில் மட்டகளப்பு மஞ்செந்தொடுவாய் பத்தொன்பதாம் வட்டாரத்தில் பலநோக்கு மன்டபத்தில் ஹிழுறியா கலாச்சார நன்நோக்குச் சங்கம் நடாத்திய இவ்வுலகிற்கு அருட்கொடையாக வந்துதித்த எம்பெருமானார் (ஸல்) அவர்களின் பெருமை கூறும் மீலாதுன் நபீ விழா மிகவும் விமர்சையாக 2012.02.07 செவ்வாய் கிழமை காலை 7.00 மனிக்கு ஆரம்பமாகி சுமார் 11.30 மணியளவில் நிறைவு பெற்றது.
இந் நிகழ்வுகளுக்கு பிரதம அதிதியாக மட்டகளப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜா கலாச்சார உத்தியோகத்தர் திருவாளர். திருநிறைச் செல்வம் மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர் திருவாளர் சுவிதரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
அத்துடன் காத்தான்குடியின் புகழ்பெற்ற உலமாஉகள் மற்றும் அரசியல் பிரமுவர்கள் விசேட அதிதிகளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சிகளை எம்.ஐ.எம்.இக்பால் தொகுத்து வழங்கினார்கள்.
புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
நிகழ்வுகளின் ஆரம்பமாக பெருமனார் புகழ் கூறும் மௌலீத் மஜ்லிஸ் 19ம் வட்டாரத்தில் அமைந்துள்ள எம்.ஏ. லெத்தீப் அவர்களின் வீட்டில் இடம்பெற்றது.
19ம் வட்டாரத்திலிருந்து மருத்துப் பீடத்திற்கு இவ்வருடம் தெரிவான மாணவன் ஏ.எம்.றீஸா அவர்களுக்கு ஊக்குவிப்புப் பரிசு பிரதேச செயலாளர் திருமதி கலாமதி தவராஜா அவர்களினால் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கத்தமுல் குர்ஆன் நிகழ்வுகளுடன் 19ம் வட்டாரம் பலநோக்குக் கட்டிடத்தில் ஆரம்பமான நிகழ்வுகள் அதிதிகளின் உரைகள், உலமாஉகளின் விசேட உரைகள் மற்றும் தேசிய கொடியேற்றும் நிகழ்வு அத்துடன் அங்கவீனர்களுக்கான உதவி வழங்கும் நிகழ்வுகளுடன் பெருமானார் புகழ் கூறும் மாணவர்களின் நிகழ்ச்சிகளும் நடந்தேறியது.
இறுதியாக சமூகமளித்த அனைவருக்கும் தபறூக் (அன்னதானம்) வழங்கப்பட்டதுடன் ஸலாத்துடன் நிகழ்வுகள் முடிவுற்றன.