Wednesday, August 31

புனித நோன்புப் பெருநாள் தினத்தொழுகையும் புத்தக வெளியீடும்

இலங்கையில் காத்தான்குடி பத்ரிய்யஹ் ஜும்மாப் பள்ளிவாயலில் புனித நோன்புப் பெருநாள் தினமான இன்று 31.08.2011 சரியாக காலை 9.30 (சில மணித்தியாலங்களுக்கு முன்னர்) 

அதிசங்கைக்குரிய ஷெய்கனா மௌலவீ அப்துர் ரஊப் (மிஸ்பாஹி,பஹ்ஜி) காதிரி, வநக்ஷபந்தி அவர்கள் எழுதிய தீபுல் வர்தஹ் பீ ஷர்ஹில் புர்தஹ் புத்தக வெளியீடு புனித காதிரிய்யஹ் திருச்சபையினரின் ஏற்பாட்டில் திருச்சபையின் தலைவர் கலீபா மௌலவீ அப்துல் மஜீட் (றப்பானி) அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

அதனைத் தொடர்ந்து புர்தாவின் வரலாறு பற்றி அதிசங்கைகுரிய ஷெய்கனா அவர்கள் உரையாற்றினார்கள்.

அதன் பின்னர் புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் பத்ரிய்யஹ் ஜும்மாப் பள்ளிவாயலுக்கான மூன்றாம் தள வேலைகள் பாத்திஹா ஓதி ஆரம்பித்து வைக்கப்பட்டன.
புத்த வெளியீட்டு
நிகழ்சியை தொகுத்து வழங்கும் அமீர் ஆசிரியர்
கிராஅத் ஓதும் றப்பானிய்யஹ் அரபுக் கலாசாலை மாணவர்
அறிமுக உரை கலீபா மௌலவீ அப்துல் மஜீட் (றப்பானீ)

நூலின் முதலாவது பிரதியைப் பெற்றுக் கொள்ளும் மௌலவீ ஏ.எல்.எம்.இஸ்மாயில் (பலாஹி)






நன்றியுரை நிகழ்த்தும் கலீபா மௌலவீ அப்துல் மஜீட் (றப்பானீ)
புனித நோன்புப் பெருநாள் பயான்
புர்தாவின் சிறப்புக் கூறும் அதிசங்கைகுரிய ஞானபிதா அவர்கள்






புனித நோன்புப் பெருநாள் ஜும்மாப் பிரசங்கள்
மௌலவீ ஏ.எல்.எம். இஸ்மாயில் (பலாஹி)
பள்ளிவாயல் புதிய கட்டிடத்திற்கான மூன்றாம் தள வேலை ஆரம்ப வைபவம்













புகைப்படங்கள் எமது கிழக்கு மாகாண நிருபர்.

 
Design by Ahamiyam themes | Hosted by Fizmad - Ahamiyam,UK | Ahamiyam followship,UK