இன்று இலங்கை நேரப்படி இரவு 10.00 மணிக்கு காத்தான்குடி பத்ரிய்யஹ் ஜூம்மாப் பள்ளிவாயலில் புனித பத்ரு போரில் கலந்து கொண்டு புனித இஸ்லாத்திற்கு உயிர் அளித்த உத்தம பத்ரு ஸஹாபாக்களின் நினைவு தினம் கொண்டாடப்பட்டது.
நிகழ்வினை முன்னிட்டு புனித திருக்கொடியினை சங்கைக்குரிய மௌலவீ. அப்துல் மஜீட் றப்பானி அவர்கள் முறாதிய்யஹ் முழக்கத்துடன் ஏற்றி வைக்க நிகழ்வுகள் ஆரம்பமாகி கத்தமுல் குர்ஆன் வைபவமும், அதனைத் தொடர்ந்து புனித பத்ரிய்யின்களின் திரு நாமங்கள் பாராயணம் செய்யப்பட்டு அதனை அடுத்து சன்மார்க்க உரை நிகழ்த்தப்பட்டது.
(புகைப்படங்கள் உள்ளே.....)
பத்ரு ஸஹாப்பாக்களின் சிறப்புக்கள் பற்றிய சிறப்புரையை மௌலவீ. கே.ஆர்.எம் ஸஹ்லான் (றப்பானீ) பீ.பீ.ஏ அவர்கள் நிகழ்த்தினார்கள்.
அதனைத் தொடர்ந்து ஏல விற்பனை நடைபெற்று பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டுபட்டதுடன் நிழக்வுகள் நிறைவடைந்தன.
Thanks to
Photos : MMM Riswan- Kattankudy, Sri Lanka