Khaleefa Moulvavee. Abdul Majeed (Rabbani) |
அதிசங்கைக்குரிய ஷெய்கனா அப்துர் ரஊப் மிஸ்பாஹி, பஹ்ஜி காதிரிய்யீ, நக்ஷபந்தி அவர்களின் கிலாபத் பெற்ற கலீபா மௌலவீ அப்துல் மஜீட் றப்பானி அவர்களின் தகப்பனார்.
அப்துல் மஜீட் ஆலிம் முகம்மது முஸ்தபா (அலியார்)
அவர்கள் இன்று பி.ப 01.00 மணியளவில் இலங்கையில், காத்தான்குடியில் தனது இல்லத்தில் வைத்து காலமானார்கள்.
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இலங்கை நேரப்படி இன்று 18.08.2011 வியாழக்கிழமை புனித தறாவீஹ் தொழுகையைத் தொடர்ந்து இரவு 10.00 மணியளவில் காத்தான்குடி 05, பத்ரிய்யஹ் ஜூம்மாப் பள்ளிவாயலில் ஜனாஸாத் தொழுகை நடாத்தப்பட்டு மீராபள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
மர்ஹூம் அப்துல் மஜீட் ஆலிம் முகம்மது முஸ்தபா அவர்கள் சிலமாதங்களாக நோய்வாய்ப் பட்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்னாரின் சகல பாவங்களையும் மன்னித்து ஜன்னதுல் பிர்தௌஸ், ஜன்னத்துர் றையான் எனும் மேலான சுபனபதிகளை அல்லாஹ் கொடுப்பானாக. ஆமீன்.