ஏழைகளின் தோழர், அஜ்மீர் அரசர், அத்தாயே ரஸூல் ஹாஜா முயீனுத்தீன் ஷிஷ்தி (றழி) அன்னவர்களினதும் அவர்களின் அருந்தவப் புதல்வர் சர்தாரே சர்வார், ஸாஹிபுல் ஜலால் ஹாஜா பக்றுத்தீன் ஷிஷ்தி (றழி) அவர்களிதும் 25வது வருட மகா கந்தூரி இலங்கையில் காத்தான்குடி பத்ரிய்யஹ் ஜும்ஆ பள்ளிவாயலில் கரீப் நவாஸ் பொன்டேசன் ஏற்பாட்டில் நேற்று 24.07.2011 ஞாயிற்றுக்கிழமை மாலை 10.00 மணிக்கு நடைபெற்றது.
இக்கந்தூரியில் சுமார் 2500 கிலோ அரிசி சமைக்கப்பட்டு சுமார் 10,000 முஹிப்பீன்களுக்கு கந்தூரி வழங்கப்பட்டது. நேற்றைய இறுதி நிகழ்வில் விசேட ஹாஜாஜீ ஞாபகார்த்த உரையை அதி சங்கைக்குரிய ஷெய்கனா மௌலவி அல்ஹாஜ் அப்துர் ரஊப் மிஸ்பாஹி அவர்கள் ஆற்றினார்கள்.
உள்ளே புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன
உள்ளே புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன
இந்நிகழ்வில் காத்தான் நகரசபைச் தலைவர், உப தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உட்பட உள்ளூர் வெளியூர் உலமாக்கள் மற்றும் முஹிப்பீன்களும் கலந்து சிறப்பித்தனர்.
இக்கந்தூரி தினத்தில் புனித குத்துபிய்யஹ் மஜ்லிஸ் வெளியிட்ட இஸ்லாமிய கீத இறுவெட்டில் பாடல்களைப் பாடிய பாடகர்கள் மற்றும் பாடல்களை எழுதி கவிஞர்கள் பரில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன் வருடா வருடம் கந்தூரியில் வேலை பார்க்கும் ஹாஜாஜீ தொண்டர்களில் குலுக்கல் மூலம் தெரிவு செய்யப்படும் ஒருவருக்கு அஜ்மீர் சென்றுவர வழங்கப்படும் விமானப்பயணச்சீட்டுப் பரிசு 25 வது கந்தூரியில் வேலை செய்ய 487 தொண்டர்களில் குலுக்கள் மூலம் தெரிவு செய்யப்பட்ட அல்ஹாஜ் ஏ.ஆர்.எல் மஃமூது லெப்பை அவர்களுக்கு வழங்கப்பட்டது.
அத்துடன் ஹாஜாஜீ வினாவிடை போட்டியில் சரியான விடையினை எழுதி தெரிவு செய்யப்பட்ட அதிஷ்டசாலிகளுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன.
அதனையடுத்து 25வது வருட ஹாஜாஜீ மகா கந்தூரி இனிதே சலாவாத்துடன் நிறைவு பெற்றது
அதி சங்கைக்குரிய ஷெய்கனா மௌலவீ அல்ஹாஜ் அப்துர் ரஊப் மிஸ்பாஹி அவர்கள் ஆற்றிய உரையினை அகமியத்தில் எதிர்பாருங்கள் விரைவில்...