Saturday, June 25

ஷஹீஹூல் புஹாரி பாராயணம்

இறை தூதை நமது அளித்த கண்மனி கருணை நபீ ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் வாழ்கைதனை இந்த இன்ஸான்களின் இன்மை மறுமை என்ற ஈருளக வாழ்வுக்காக அவர்கள் மொழிந்த வாய்மொழிகளை ஒன்று திரட்டிய ஞானமாகான் ஹதீஸ் கலை மாமேதை இமாம் புஹாரி (றஹ்) அவர்களின் ஹதீதுக் களஞ்சியப் பேழையான புனித புஹாரி ஷரீப் வாசிக்கப்படும் 

புனீத ஸஹீஹுல் புஹாரி மஜ்லிஸ்

எமது காத்தான்குடி பத்ரிய்யஹ் ஜூம்ஆப் பள்ளிவாயலில் 34வது வருடமாக 30/05/2011 அன்று ஆரம்பமாகி தொடர்ந்து 30 தினங்களாக ஓதப்பட்டு வருகின்றது.

இமாம் புஹாரியவர்களின் அடக்ஸ்தளம் பற்றிய வீடியோ பதிவு உள்ளே..

இப்புனித நிகழ்வு இன்ஷா அல்லாஹ் 28/06/2011 செவ்வாய்கிழமை அன்று பின்னேரம் புதன் கிழமை இரவு 9.30 மணியுடன் கந்தூரி வழங்கப்பட்டு நிறைவு பெறவுள்ளது.

இதேவேளை வேர்விலை புஹாரி நிகழ்வானது 137 வது வருடமாக ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது இது இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 03/07/2011 ஞாயிற்றுக்கிழமை காலை கந்தூரி நிகழ்வுடன் நிறைவுபெறவுள்ளது. இக்கந்தூரியில் கலந்து கொள்வதற்கு வெளியூர்களிலிருந்து வருபவர்களின் நலன்கருதி கொழும்பிலிருந்து விசேட ரயில் ஏற்பாடுகள் அரசினால் செய்யப்பட்டுள்ளது.

உலகில் பலரால் அறியப்படாத இமாமவர்களின் உஸ்பகித்தானில் அமைந்துள்ள அடக்ஸ்தளம் உங்களின் பார்வைக்காக..

 
Design by Ahamiyam themes | Hosted by Fizmad - Ahamiyam,UK | Ahamiyam followship,UK