கடந்த ஒருவார காலமாக பெய்துவரும் கடும் அடை மழைகாரணமாக கிழக்கு மாகாணம் முழுவதும் முற்று முழுதாக நீரினால் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் மழையும் காற்றும் வீசுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதம் அடைந்துள்ளதுடன் வீதிகளையும் தண்ணீர் மூடியுள்ளதால் போக்குவரத்தும் முழுமையாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்திசெய்ய முடியாத அளவு வீடுகளிலும் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்கள் வசிப்பதற்கு இட வசதியின்றி இடைத்தங்கல் முகாம்களாக பாடசாலைகள் பள்ளிவாயல்கள் தேவாலயங்கள் கோவில்கள் மற்றும் பொதுவான மேட்டுப்பகுதிகளில் அமைந்துள்ள கட்டிடங்களில் வசித்து வருகின்றனர். இருந்த போதும் போதிய அன்றாடத் தேவைகளான உணவு, உடை, மலசல கூட வசதிகளுக்கு மிகவும் கஸ்டப்பட்டுவருகின்றனர்.
இந்நிலையில் அத்தியவசிய தேவையான உணவு வினியாகத்தினை வழங்குவதற்கு பல பொது நிறுவனங்களும் தனவந்தர்களும், மற்றும் அரசியல் வாதிகள், அரசாங்கம் என அனைவரும் தங்களால் ஆன உதவிகளை இப்பகுதிகளில் வழங்கிவருகின்றனர்.
இந்த மக்கள் சேவையின் ஒரு அங்கமாக புதிய காத்தான்குடி தீன் வீதியில் அமைந்துள்ள மன்பஉல் ஹைராத் பள்ளிவாயலில் காத்தான்குடி அல்ஹாஜ் அப்துல் ஜவால் ஆலிம் வலியுல்லாஹ் நிதியத்தினால் பொதுமக்கள், தனவந்தர்கள், அரசியல் வாதிகள் மற்றும் பொது நிறுவனங்களின் உதவியுடன் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அன்றாடம் சமைத்த உணவுகளை வழங்கி வருகின்றது.
அத்தோடு குறிப்பாக காத்தான்குடிக்கு அண்மையிலுள்ள மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள காங்கேயன்ஓடை பிரதேச மக்களுக்கு சமூகத்தொண்டு நிறுவனங்களின் அனுசரனையுடன் சமைத்த உணவு வழங்கப்பட்டு வருகின்றது.
அத்துடன் தொடர்ந்தும் மழை நீடித்து வருவதால் இன்னும் பொதுமக்களுக்கு தொடர்ந்து அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய சேவைகளை வழங்குவதுடன் தேவைகளை பூர்த்தி செய்யவும் தீர்மானித்துள்ளது இதற்காக இந்த இக்கெட்டான சூழலில் உதவிபுரிய உள்நாட்டில் மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் பொதுநலன் விரும்பிகள் மற்றும் தனவந்தர்களிடமிருந்து பண உதவிகளை நாடியுள்ளது. உதவிகள் செய்ய விரும்புபவர்கள் கீழுள்ள முகவரிக்கு உடனடியாக வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
உதவிகள் வழங்க வேண்டிய முகவரிக்கு கிளிக் செய்யவும்.
நன்றி
Ajawt Media Team