சமைத்த உணவு இன்றும் 14.01.2011 வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டபோது
அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலியுல்லாஹ் நிதியத்தினால் இன்று 14.01.2011 வெள்ளிக்கிழமை சுமார் 2000 வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டது.
இன்றைய நிகழ்வுகளை சங்கைக்குரிய மௌலவிமார்களான மௌலவி இப்றாஹிம் நத்வி மற்றும் மௌலவி அப்துல் மஜீட் றப்பானி ஆகியோர் ஆரம்பித்துவைத்தனர். இதனைத் தொடர்ந்து அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலியுல்லாஹ் நிதியத்தின் தொண்டர்களால் பகல் போசனம் சமைக்கப்பட்டு மஸ்ஜிதுல் மன்பஉல் ஹைராத் பகுதி மக்களுக்கும், காத்தான்குடி பத்ரிய்யா ஜூம்மாப்பள்ளிவாயல் பகுதிவாழ் மக்களுக்கும் மிகவும் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் காங்கேயன் ஓடைவாழ் மக்களுக்கும் வழங்கப்பட்டன.
கடந்த ஒரு வாரமாக தொடரும் இச்சேவையானது இனிவரும் நாட்களிலும் இன்ஷா அல்லாஹ் தொடருமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.