கிழக்கில் தொடர்ந்தும் கடும் மழை 90 வீதமான மக்கள் பாதிப்பு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் கடந்த ஒரு வாரகாலத்திற்கு மேலாக பெய்து வரும் மாரிமழையினால் கிழக்கின் தாழ்நிலப்பிரதேசத்தில் வாழும் மக்கள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருந்தனர். பெரும்பாலானவர்களின் வீடுகளில் தண்ணீர் புகுந்து சில நாட்கள் மழையின் சீற்றம் குறைந்ததனால் நிலைமை சீரடைந்துகொண்டிருந்தது
நிலைமை இவ்வாறு தொடரும் நிலையில் நேற்று இரவு பெய்த கடும் காற்றுடன் கூடிய மழையினால் முற்று முழுதாக 90% மக்கள் வாழும் வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளதுடன் வீதிகள் மற்றும் பாலங்கள் உடைப்பெடுத்துள்ளன. மரங்கள் முறிந்து விழுந்துள்ளதனால் மின்சாரம் கிழக்கு மாகாணம் முழுவதும் தடைப்பட்டுள்ளது.
இந்நிலையில் காத்தான்குடியில் பெரு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு வீட்டிலிருந்து வெளியேறியுள்ள மக்களுக்கு சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நிதியத்துடன் தனவந்தர்கள் அரசியல் வாதிகள் மன்பஉல் ஹைராத் பள்ளிவாயல் நிர்வாகம் ஆகியோர் இணைந்து இப்பகுதியில் வெள்ளத்தினால் இடம் பெயர்ந்துள்ள மக்களுக்கு தற்போது உணவுகளை சமைத்து வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.
சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு இன்று இரவு உணவு சமைத்து வளங்கப்பட்டதுடன் தொடர்ந்து மழை நீடிப்பதால் இப்பணி தொடரவுள்ளது என அங்கிருந்து கிடைத்த தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.















