அதி சங்கைக்குரிய வலியுல் காமில் அப்துல் ஜவாத் பெரிய ஆலிம் (றஹ்) அவர்களின் 32வது கந்தூரி எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை 26.09.2010 அன்று இலங் கையில் காத்தான்குடி பத்ரியாஹ் ஜூம்மாப் பள்ளிவாயலில் மிகவும் விமர்சையாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் அதி சங்கைக்குரிய மௌலவி அல்ஹாஜ் அப்துர் ரஊப் மிஸ்பாஹி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பு பயான் நிகழ்த்த உள்ளார்கள். பெரிய ஆலிம் (றஹ்) அவர்கள் குறித்து அவர்களின் அருந்தவப் புதல்வர் அதி சங்கைக்குரிய ஞானபிதா அவர்கள் ஆற்றிய உரை எம்மால் பிரசுரிக்கப்படுகின்றது.