Wednesday, January 16

"தங்கள்களில் தங்கம் கொள்கையில் சிங்கம்" தங்கள் வாப்பா நாயகம்

Ash Shiekh Abdur Rasheed Koya Thangal
அதிசங்கைக்குரிய குத்புஸ்ஸமான், ஆஷிகுல் அவ்லியா, அஷ்ஷெய்குல் காமில், அஸ்ஸெய்யித் அப்துர் றஷீத் கோயாத் தங்கள் மௌலானா வாப்பா (றஹ்) அவர்களின் 16ம் வருடக் கந்தூரியும் ஜாமியத்துல் மின்ஹாஜிய்யா வெள்ளி விழாவும்.
-பைசான் மதீனா-

கூட்டமாக மக்கள் ஒருவரை தூக்கி வருகின்றனர் அவர் இறந்ததுபோல் மூச்சுப் பேச்சு அற்ற நிலையில் காணப்படுகின்றார். அவரை பாம்பு தீண்டியதாகச் சொல்லி அந்தப் பள்ளிவாயலில் உள்ள விஷக் கல்லில் விஷம் இறக்குவதற்காக பிடிக்கின்றனர். கல்லோ விஷம் பிடிக்க மறுக்கின்றது காரணம் பாம்பு தீண்டியவர் ஏற்கனவே இறந்து விட்டார். ஆனாலும் அந்த சிங்கள சகோதரர்கள் கல்லு விஷம் பிடிக்காமையினாலேயே அவர் இறந்தார் என பிரச்சினை செய்கின்றனர். 

விடயம் பொலிஸ் நிலையம் வரைச் செல்கின்றது பொலிசார் அந்த பள்ளிவாயல் நிருவாகத்தினரிடம் சில காலங்களுக்கு அந்த கல் இருக்கும் அறையை முடிவிடுமாறு கோருகின்றனர். பள்ளிவாயல் பரிபாலன சபை அதனை அப்பள்ளியில் வைத்த அந்தப் பெரியாருக்கு தொலைபேசியில் விடயத்தை சொல்கின்றனர். 

நிகழ்வுகள் தொடர்பான புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

அதற்கு அந்தப் பெரியார் “இனி பாம்புகள் அந்த ஊரில் யாரையும் கடிக்காது  மக்காள் அந்த கல்லை மூடி வையுங்கள்" என்று கூறுகின்றார்கள் இச்சம்பவம் நடந்து தற்போது 20 வருடங்களுக்கு மேலாகி விட்டது இச் சம்பவத்தின் பின்னர் அவ்வூரில் நம்மவர்கள் யாரையும் பாம்பு கடித்ததாக எந்த தகவலும் இல்லை. யாரையும் கடிக்கவும் இல்லை என்ற அற்புத நிகழ்வை கூறுகின்றார் தற்போது முதுமையில் தள்ளாடும் அப்பள்ளிவாயலின் பரிபாலகர்களில் ஒருவர்.

ஆம், இச்சம்பவம் நடந்தது இலங்கையின் மலைநாட்டின் அடிவாரமான பத்தியத்தாலவ கிராமத்தில் அங்கு உள்ள பள்ளிவாயலில் விஷக்கல் நட்டவர்கள் அதிசங்கைக்குரிய குத்புஸ்ஸமான், ஆஷிகுல் அவ்லியா, அஷ்ஷெய்குல் காமில், அஸ்ஸெய்யித் அப்துர் றஷீத் கோயாத் தங்கள் மௌலானா வாப்பா (றஹ்) அவர்கள். 
தங்கள் வாப்பா அவர்களின் புனித மஸார்
கண்ணூர் சாலாடு பள்ளியமுல்லையில் பள்ளிகொண்டு அருள் அள்ளி வழங்கும் சங்கைக்குரிய நாயகம் அவர்களின் 16வது ஆண்டு கந்தூரி காத்தான்குடி பத்ரிய்யஹ் ஜும்ஆப் பள்ளிவாயலில் 04.01.2013 வெள்ளிக்கிழமையும்,

காத்தான்குடி பத்ரிய்யஹ்வில் தங்கள் வாப்பாவின் மௌலித் மஜ்லிஸ்
கந்தூரிக்காக உணவு சமைக்கப்படும் காட்சிகள்

கந்தூரிக்கான காரியாலயம்
சிறப்புரையாற்றும் ஈழத்து கஸ்ஸான் இப்றாஹிம் நத்வீ
25வது வருட அல் மத்ரஸதுல் மின்ஹாஜிய்யஹ் பட்டமளிப்பு விழாவும் 16வது வருட தங்கள் வாப்பாவின் கந்தூரியும் கண்டி வட்டுப்பிட்டியில் 12.01.2013 சனிக்கிழமையும் 13.01.2012 ஞாயிற்றுக் கிழமையும் நடந்தேரியிருந்தன.
அதிதிகள் வரவேற்கப்படும் போது..
தங்கள் வாப்பா என்ற பெயரை அறியாத முஸ்லீம்கள் இலங்கையில் இல்லையெனலாம். இலங்கையில் புனித இஸ்லாத்தினை பரப்பியதற்கு வரலாற்று ரீதியான சொந்தக்காரர்கள் இலங்கைக்கு வருகைதந்த ஷெய்குமார்களே ஆகும். அந்த வரிசையில் மிகவும் காத்திரமான பங்களிப்பினை செய்தவர்கள் தென்னிந்தியாவின் கேரள மானிலத்தின் அந்திர தீவுகளில் இருந்து வருகை தந்த கண்ணிய நபீ (ஸல்) அவர்களின் வாரிசுகளான கோயா தங்கள்மார்கள் ஆகும்.
அதிதிகளை வரவேற்கக் காத்திருக்கும் அஷ்ஷையிது ஸாதாத் புஹாரி நல்ல கோயாத் தங்கள்
அன்னவர்களின் வரிசையில் இலங்கைக்கு வருகை தந்து புனிதமிகு மார்கச் சேவை புரிந்த கண்ணிமியக்கவர்களின் வரிசையில் முன்னனியில் திகழ்பவர்கள் சங்கைக்குரிய அஸ்ஸெய்யித் அப்துர் றஷீத் கோயாத் தங்கள் மௌலானா வாப்பா (றஹ்) அவர்கள் மிக முக்கியமானவர்களாவர். இவர்கள் இலங்கையின் நாலாபாகங்களிலும் தனது தரீக்காவை நிறுவியதுடன் கண்ணியமான மார்கப்பணி மூலம் முழு இலங்கைக்கும் இறை தீபமெற்றினார்கள். 
காத்தான்குடி முகைதீன் தைக்கா
காத்தான்குடியில் ஊர் வீதியில் அமைந்துள்ள முகைதீன் தைக்காப் பள்ளிவாயல், ஜமிய்யத்துல் பலாஹ் அரபுக் கல்லூரி, கண்டி வட்டுப்பிட்டியில் மஸ்ஜிதுல் றிபாயி பள்ளிவாயல், ஜாமியத்துல் மின்ஹாஜிய்யஹ் கலாபீடம் மற்றும் தெஹிவலையில் கில் வீதியில் தௌதிய்யஹ் ஞானகலா பீடம் ஆகியவற்றை நிறுவியது மற்றுமல்லாது இலங்கையின் நாலா பாகங்களிலும் உள்ள பள்ளிவாயல்களில் விஷமிறக்கும் கற்களையும் நிறுவி இறைநேசர்களின் தன்மையினை உலகிற்கு எடுத்தொதினார்கள்.

கண்டி வட்டுப்பிட்டியில் மஸ்ஜிதுல் றிபாயியுடன் அமைந்துள்ள ஜாமியத்துல் மின்ஹாஜிய்யா
கண்ணியமிக்க மௌலானா வாப்பா அவர்கள் இஸ்லாத்தை தூய வடிவில் சொல்லும் சுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகளை உருவாக்குவதில் என்று ஆர்வம் காட்டினார்கள். அந்த அடிப்படையில் மேலுள்ள அரபுக்கலாசாலைகளை நிறுவிய அவர்கள் காத்தான்குடியில் மார்கப்பிரச்சினையின் பின்னர் கண்ணிமிக்க எங்களின் ஷெய்குநாயகம் காதிமுல் வலீ, மௌலவீ அஷ்ஷெய்க் அப்துர் ரஊப் மிஸ்பாஹி அவர்களிடம் “மார்கத்தை சொல்லக்கூடிய உலமாஉகளை உருவாக்குங்கள் மகன்” என்று கூறினார்கள். இதன் பின்னனியிலேதான் மத்ரஸதுல் றப்பானிய்யஹ் குர்ஆன் பாடசாலை ஜாமியத்துர் றப்பானிய்யஹ் அரபுக் கலாசாலையாக விஸ்தரிக்கப்பட்டமைக்கு தூண்டுகோலாக அமைந்தது.

வட்டுப்பிட்டியில் அமைக்கப்பட்டிருந்த வரவேற்புத் தோரணம்.

இலங்கையில் எல்லோராலும் “தங்கள் வாப்பா” என்று மரியாதையாக அழைக்கப்படும் இவர்கள் எப்போதும் மிகவும் சாந்தமானவர்களாகவும், பொறுமையைக் கொண்டு போதிப்பவர்களாகவும் வாழ்ந்தார்கள். அன்னாரை வாழ்நாளில் தரிசித்த எவரிடமாவது அவர்களை பற்றிக் கேட்டால் அவர்களைப் பற்றி கூற முற்படுகையில் பெரும்பாலானவர்கள் அழுது விடுவதை காண முடிகின்றது.



தங்கள் வாப்பா அவர்களினால் நிறுவப்பட்ட கண்டி வட்டுப்பிட்டிய மத்ரஸாவின் இருபத்தைந்தாம் ஆண்டு வெள்ளிவிழா கடந்த 12.01.2013 சனிக்கிழமை மிகவும் விமர்சையாக இடம் பெற்றது. தங்கள் வாப்பாவின் 16வது வருட கந்தூரி 13.01.2013 ஞாயிற்றுக் கிழமையும் இடம் பெற்றன.

தங்கள் வாப்பாவுடன் காணப்படும் மருமகனார் பீ.பீ.எஸ்.எஸ் புஹாரி நல்ல கோயாத் தங்கள்
இவ் நிகழ்வுகள் அனைத்தும் தங்கள் வாப்பா அவர்களின் மருமகனார் அஷ்ஷெய்கு ஷெய்யிது புஹாரி நல்ல கோயாத் தங்கள் அவர்களின் தலைமையில் இடம் பெற்றன. 

இந்நிகழ்வுகளின் கலந்து கொள்வதற்காக என்று இந்தியாவின் அந்தூரத் தீவிலிருந்து தங்கள் வாப்பா அவர்களின் சின்ன மாமாவின் மகன் வைத்தியத் கலாநிதி ஷெய்கு கோயாத் தங்கள் அவர்களும் புஹாரித் தங்கள் நாயகத்தின் மகனார் அஷ்ஷையித் அகமத் ராஸி (இர்பானீ) தங்கள் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Dr. ஷெய்கு கோயாத் தங்கள்
அஷ்ஷையித் அகமத் ராஸி (இர்பானீ) தங்கள்
கலந்து கொண்டு சிறப்பிப்பதற்காக வருகை தந்திருந்த அதிதிகள் இஸ்லாமிய பாரம்பரிய முறைப்படி தகரா அடித்து பைத் பாடி வட்டுப்பிட்டி சந்தியிலிருந்து நிகழ்ச்சி இடம் பெறும் இடத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.



இலங்கையிலிருந்து விசேட அதிதியாக கூட்டுறவுத் துறை பிரதி அமைச்சரும் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினருமான பஷீர் ஷெய்குதாவுத் எம்.பி அவர்களும் காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அரபிக் கலாசாலையின் உப அதிபர் மௌலவீ அலியார் பலாஹி மற்றும் மௌலவீ அமீன் பலாஹி மற்றும் மௌலவீ முஸாதிக் அஸ்ஹரீ உட்பட பல உலமாக்களும் பல நூறூ முஹிப்பீன்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தங்களுடன் ஜாமியத்துல் பலாஹ்வின் உப அதிபர் மௌலவீ அலியார் (பலாஹி)

இந் நிகழ்வுகளில் முதலாம் நாள் வெள்ளிவிழா மற்றும் மின்ஹாஜிய்யஹ் பட்டமளிப்பு விழா நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டதுடன் அதில் வீசேட நிகழ்வுகளாக மின்ஹாஜிய்யஹ்வின் 06ம் ஆண்டு மாணவர்களுக்கு சால்வை அணிவித்தல் நிகழ்வு இடம் பெற்றது இதில் தங்கள் நாயகம் அவர்கள் மாணவர்களுக்கு சால்வை அணிவித்தார்கள். அதனை தொடர்ந்து அதிதிகளுக்கு பொன்னாடை போர்த்தும் நிகழ்வு மற்றும் மௌலவீ பாஸில் பட்டமளிப்பு விழா என்பன இடம் பெற்றன.



மௌலவீ பாஸில் பட்டமளிப்பு விழாவில் ஜாமியத்துல் மின்ஹாஜிய்யாவில் தமது கற்கைநெறியைப் பூர்த்தி செய்து கொண்ட நான்கு மௌலவீமார்களும் மற்றும் நான்கு ஹாபிழ்களும் பட்டமளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.




அத்துடன் ஜாமியத்துல் மின்ஹாஜியாவின் நினைவு மலர் வெளியீடும், மௌலவீ அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம்.காஸிம் (பலாஹி) அவர்களினால் எழுதப்பட்ட தாருல் பகாவில் தரித்திருக்கும் தங்கள் வாப்பா எனும் தங்கள் வாப்பாவின் சரித்திர நாவலும் மற்றும் ஆங்கிலத்தில் தங்கக்கோயாத் தங்கள் அவர்களினால் எழுதப்பட்ட எம் பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்கை வரலாற்று நூலும் வெளியிடப்பட்டன.


ஜாமியத்துல் மின்ஹாஜிய்யா அதிபரும்
நூலாசிரியருமான மௌலவீ எம்.எல்.ஏ.எம். காஸிம் (பலாஹி)
நினைவுமலர் வெளியிடப்படும் காட்சி

தங்கள் வாப்பாவின் வரலாறு கூறும் புத்தம்.

ஜாமியத்துல் மின்ஹாஜிய்யா மாணவர்களால் அரபுப் பாடல் பாடப்படும் போது.
அதனை தொடர்ந்து கூட்டுரவுத்துறைப் பிரதி அமைச்சர் பசீர் ஷெகுதாவுத் அவர்களின் உரையும் அதனைத் தொடர்ந்து ஆங்கிலத்தில் ஹாபிஸ் இஹ்சான் காதிரி அவர்களின் விசேட உரையும் அதனைத் தொடர்ந்து காயல்பட்டணத்திலிருந்து வருகை தந்த காயல்பட்டிணம் மஹ்லரதுல் காதிரிய்யஹ்வின் விரிவுரையாளர் மௌலவீ அஸ்ஹர் ஆலிம் அவர்களின் சிறப்புரையுடன் சமூகமளித்திருந்த அனைவருக்கும் இரவு போசனம் வழங்கப்பட்டு நிகழ்வுகள் முடிவடைந்தன
மௌலவீ அஸ்ஹர் ஆலிம் காதிரி-காயல் பட்டிணம்.



அடுத்தநாள் 13.01.2013 ஞாயிற்றுக் கிழமை காலையில் அகிலத்திற்கு அருட்கொடையாக வந்துதித்த பெருமானார் (ஸல்) அவர்களின் ஸலவாத் மஜ்லிஸ் காலை 10 மணிக்கு இடம் பெற்றது.


அதனைத் தொடர்ந்து பி.ப 7.00 மணியளவில் இஷாத் தொழுகையினைத் தொடர்ந்து றிபாய் றாதிப் மற்றும் சன்மார்க்க உரைகள் இடம் பெற்றன. முதலாவதாக சன்மார்க்க உரையினை காயல் பட்ணத்திலிருந்து வருகை தந்த அஸ்ஹர் ஆலிம் அவர்கள் ஆற்றினார்கள்.

தங்களின் தலைமையில் இடம் பெற்ற றியாயீ றாதிப் நிகழ்வு

காயல்பட்டினம் அஸ்ஹர் ஆலிம் நண்பர்களுடன்..
அவர்கள் தனது உரையில் "தங்கள் வாப்பா அவர்களைப் பற்றி நான் அதிகம் அறியேன், என்னை அவர்களே முதல் முதலில் இலங்கைக்கு அழைத்துள்ளார்கள் மற்றும் அவர்கள் வசித்த ரூமிலேயே நான் தங்கியுள்ளேன். இது இறைவன் எனக்கு வழங்கிய மிகப் பெரும் பாக்கியம். நான் அவர்களை இனித்தான் அதிகம் தெரிந்து கொள்வேன்" என்று குறிப்பிட்டார்கள்.
தங்கள் வாப்பாவின் பெருமைகளை பாடும் அமானுல்லாஹ் (றூகுல்லாஹ்)
அதனைத் தொடர்ந்து காத்தான்குடி அமானுல்லாஹ் (றூகுல்லாஹ்) அவர்களினால் தங்கள் வாப்பா அவர்களின் பெருமை சொல்லும் ஒரு கீதம் இசைக்கப்பட்டது. அடுத்த நிகழ்வாக காத்தான்குடியிலிருந்து விசேட சொற்பெழிவாளராகக் கலந்து கொண்ட ஈழத்து கஸ்ஸான், கவிஞர், மௌலவீ இப்றாஹிம் நத்வீ அவர்களின் தங்கள் வாப்பாவின் அதிசயம் கூறும் விசேட சொற்பொழிவு இடம் பெற்றது.

காத்தான்குடி -மௌலவீ இப்றாஹிம் நத்வீ
இதனைத் தொடர்ந்து இரவு 10.30 மணியளவில் சமூகமளித்திருந்த அனைவருக்கும் இராப்போசனம் வழங்கப்பட்டதுடன் இவ்வருடத்திற்கான கந்தூரி நிகழ்வுகள் நிறைவு பெற்றன. அல்ஹம்துலில்லாஹ்.

கலந்து கொண்ட முஹிப்பீன்களில் சிலர்...
இந்நிகழ்வுகளில் கலந்து கொண்டு சிறப்பிப்பதற்காக இலங்கையின் நாலா பக்கங்களில் இருந்தும் முஹிப்பீன்களும் முரித்தீன்களும் வந்திருந்தனர். அதில் கலந்து கொள்வதற்கான பாக்கியத்தை அல்லாஹ் எனக்கும் அருளியிருந்தான். எல்லாப் புகழும் இறைவனுக்கே.



அத்துடன் கந்தூரிக்காக வட்டுப்பிட்டி சென்ற எமக்கு தங்கள்மாருடன் கண்டியில் அமைந்துள்ள மீரா மக்காம் பள்ளிவாயிலையும் அதிலிருந்து அருளாட்சி புரியும் மகான் அஷ்ஷெய்கு ஷிஹாபுத்தீன் வலீயுல்லாஹ் (றஹ்) அவர்களையும் தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது.
மீராமக்காம் தர்ஹாவில் 
கண்டி மீரா மக்காம் பள்ளிவாயல்
அஷ் ஷெய்கு ஸிஹாபுத்தீன் வலீ (றஹ்) அவர்களின் வாசஸ்தளம் 
அஷ் ஷெய்கு ஸிஹாபுத்தீன் வலீ (றஹ்) அவர்களின்  மஸார்.
தங்கள் வாப்பா நாயகம் அவர்கள் பற்றிய மற்றுமொரு பதிவு

 
Design by Ahamiyam themes | Hosted by Fizmad - Ahamiyam,UK | Ahamiyam followship,UK