Monday, October 22

ஞானியின் அறவழி ஏற்போம் -கவிதை


இக் கவிதை சுன்னத் வல் ஜமாஅத் ஆன்மீகத் தோழர்களுக்கு எதிராக காத்தான்குடி வஹ்ஹாபிகளால் 02.10.2006 அன்று புனித ரமழான் பிறை 08 யில் தொடங்கப்பட்ட வன்செயலின் போது, கடுங் காயமடைந்தும், வீடுகள் உடமைகள் எரிக்கப்பட்டும், சூறையாடப்பட்டும் அகதிகளாக காத்தான்குடி 5 பத்ரிய்யஹ் ஜும்ஆப் பள்ளிவாயல் வளாகத்தில் தஞ்சமடைந்தோர் சார்பாக ஹாஜாஜீ கலை இலக்கிய வட்டத்தின் ஆயுற்காலத் தலைவர் கவிஞர் ஏ.எல்.ஏ ஜப்பார் GSO அவர்களால் எழுதப்பட்டு அல்மிஸ்காத் ஞானஒளி 57யில் வெளியிடப்பட்டது.
கவிஞர் ஏ.எல்.ஏ. அப்துல் ஜப்பார் GSO அவர்கள்

அப்துர் றஊப் ஞானியின் அறவழி ஏற்போம்
கொள்ளைகள் அடித்தாலும் 
கொடுமைகள் இழைத்தாலும் 
கொண்டுள்ள கொள்கை நாம் 
கடுகேனும் விட மாட்டோம் 

தொல்லைகள் தந்தாலும் 
துயரங்கள் வந்தாலும் 
கல்நெஞ்சக் காரோரை 
கடுகேனும் விட மாட்டோம் 

இறையன்றி செயலில்லை 
இறைசெயலில் தவறில்லை 
கரை கொண்ட நெஞ்சோரே 
கடுகேனும் அறிந்திடுவீர் 

அடிபட்டு வீழ்ந்தாலும் 
வடு பட்டு வாழ்ந்தாலும் 
சுடு பட்டு மாண்டாலும் 
சொர்க்கத்தை நாம் அடைவோம் 

வீடுகளை உடைத்தாலும் 
வீணாக எரித்தாலும் 
காடு மலை யாமடையோம் 
காத்தநகர் வாழ்ந்திருப்போம் 

இது உண்மை இது உண்மை 
இறையுண்மை நம் கொள்கை 
என்றென்றும் காத்திடுவோம் 
எச் செயலும் ஏற்றிடுவோம். 

தௌஹீது வாதிகளே 
தரீகத்து வாதிகளே 
ஒவ்வாத கொள்கைகளை 
உதறிநாம் வாழ்ந்திடுவோம் 

எம்பிள்ளை எம் சமூகம் 
இனிதுறவே வாழ்வதற்கு 
நம் குறைகள் நாம் மறந்து 
நாளெள்ளலாம் உழைத்திடுவோம் 

இறையொளி என்னொளி 
என்னொளி அனைத்தும் 
என் வழி வாழ்பவர் 
நரகினை அடையார் 

நபீ மொழி நன் மொழி 
நாளும் தொடர் மொழி 
வாளினும் கூர் மொழி 
வாழ்கையில் ஏற்போம். 

இறைவழி நபீ வழி 
இறையருள் வருமொழி 
நிறைவுடன் வழங்கும் 
குணங்குடி ஏற்போம் 

குண்றாக் குணங்குடி 
குலத்தால் பெருங்குடி 
அப்துர் றஊப் எனும் 
அருங்குடி ஏற்போம் 

அல்லாஹ் அருள் மொழி 
அப்துல் ஜப்பார் தரும் மொழி 
வல்லாய் ஏற்பாய் 
வளம் பல அருள்வாய். 

“அல்ஹம்துலில்லாஹ்”

கவிஞர். ஏ.எல். அப்துல் ஜப்பார் GSO
காத்தான்குடி



 
Design by Ahamiyam themes | Hosted by Fizmad - Ahamiyam,UK | Ahamiyam followship,UK