உலகெங்கும் வாழும் முஸ்லீம்கள் அனைவருக்கும் அறிமுகமானவர் அவர் கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் புனித பேரர், ஏழைகளின் தோழர், அஜ்மீர் அரசர் கரீபே நவாஸ் ஹாஜா முயீனுத்தீன் ஷிஷ்தீ அவர்களின் புனித கந்தூரி வலைகுடா நாடான கத்தாரில் 20-07-2012 அதிகாலை 12.00 மணியளவில் இலங்கைவாழ் சூபித்துவ இஸ்லாமிய அமைப்பான ஹுப்புல் பத்ரிய்யீன் ஏற்பாட்டில் நடந்தேரியிருந்தது.
ஹாஜா மேரே ஹாஜா MP3 டவுன்லோட் செய்ய
அஜ்மீர் அரசரின் புகழை பாடாதோர் பாக்கியம் கெட்டவர்களே, ஒஸ்கார் புகழ் ஏ.ஆர் ரஹ்மான் கூட நாயகம் அவர்களின் புகழை பாடி அதனை ஒரு திரைப்படத்தில் இணைத்து உலகில் அவரை அறியாதோருக்கு அறிமுகப்படுத்தியிருந்தார்
அஜ்மீர் சென்றிருந்த சங்கைகுரிய ஷெய்குநாயகம் அவர்கள் ஏ.ஆர் றஹ்மானைச் சந்தித்த போது..
கத்தாரில் இடம் பெற்ற கந்தூரியின் போது
அஜ்மீர் அரசரின் கந்தூரியானது கிழக்கத்தைய பல நாடுகளிலும் நடை பெறுவது வழக்கம். ஆனால் இந்தியாவில் பல இலட்சம் மக்கள் கலந்து கொள்ளும் கந்தூரி நாயகம் அவர்கள் ஆட்சி புரியும் அஜ்மீர் தர்ஹாவில் நடை பெறுவம் வழக்கமாகும். இக்கந்தூரில் ஜாதி மத பேதமின்றி பல இலட்சம் மக்கள் கலந்து கொள்வதும் வழக்கமானதாகும்.
இதே போன்று இலங்கையில் பல பாகங்களிலும் அஜ்மீர் அரசர் அவர்களின் கந்தூரி இடம் பெற்று வந்தாலும் காத்தான்குடியில் அமைந்துள்ள தெளஹீதின் தளமாகிய பத்ரிய்யஹ் ஜும்ஆப் பள்ளிவாயலில் சங்கைக்குரிய ஷெய்கு நாயகம் ஈழத்தின் சொற் கொண்டல், கலாநிதி மௌலவீ அப்துர் றவூப் மிஸ்பாஹி அவர்களின் தலைமையில் பாரிய கந்தூரி நிகழ்வு பிரதி வருடமும் இடம் பெறுவது வழக்கமாகும்.
காத்தான்குடியில் ஷெய்கு நாயகம் அவர்களுடன் றவூப் ஷாஹிப் அவர்கள்
இக்கந்தூரியின் போது சுமார் இருபது ஆயிரம் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்படுவதும் வழக்கமாகும் இதில் அஜ்மீர் தர்ஹா ஷரீபின் தலைவரும் ஹாஜா நாயகம் அவர்களின் வழித் தோன்றலுமான சங்கைக்குரிய றவூப் ஷாஹிப் அவர்களும் கலந்து சிறப்பித்துள்ளார்கள்.
கத்தாரில் மௌலீத் அத்தாயே றஸூல் ஓதப்படும்போது
இதனால் சங்கைக்குரிய மகான் ஹாஜா முயீனுத்தீன் ஷிஸ்தி அவர்களின் ஆசி எங்களுக்கும் கிடைத்தது. அது எங்களின் ஷெய்கு நாயகம் அவர்களினால் எங்களுக்கு கிடைத்த பாக்கியமாகும். இதனையே ஜோதா அக்பர் படத்திற்காக மேரே ஹாஜா பாடலை எழுதிய கவிஞர் கஷிஃப் அவர்களும் அப்பாடலில் சுட்டிக் காட்டியிருக்கிறார். அதில் தனது ஷெய்குக்கு நன்றிகளை கூறியிருக்கின்றார். (அப்பாடலின் தமிழ் அர்த்தம் கீழே உண்டு பார்க்கவும்)
அந்த வழியிலேயே இலங்கையில் காத்தான்குடியில் சூபித்துவத்தை முழுமையாகப் பின்பற்றும் இளைஞர்களில் கத்தாரில் தொழில் புரிபவர்கள் ஒன்றினைத்து குப்புல் பத்ரிய்யீன் என்ற அமைப்பை உறுவாக்கி அதன் மூலம் தமது மத அனுஸ்டானங்களுக்கு உயிருற்றி வருகிறார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்!
'என்னுடைய ஹாஜாவே . . எனது இதயத்தில் வந்து வாழுங்கள். .
நீங்களே அரசர்களின் அரசர் ஆவீர்கள்;
நீங்களே அலியின் (அலி (றழி) நபியின் மருமகன்) விருப்பத்திற்கு உரியவரும் ஆவீர்கள் . .
ஏழை எளியவர்களின் கொடும்விதியை, நீங்களல்லவா மாற்றினீர்கள் . .
(ஹாஜா. .)
ஹாஜாவே . .உங்களது அரசவையில், அருளின் ஒளியை நாங்கள் காண்கிறோம் . .
உங்களது அரசவையில், மற்ற சாதுக்களும் அருளாளர்களும் உங்களிடம் தலைவணங்குகின்றனர் . .
நீங்களே எங்களது பாதுகாவலர் . .உங்களது திருநாமம், எவ்வளவு அழகு . .
உங்களை நாங்கள் விரும்பினால் , நபியான முஸ்தஃபாவின் அருளும் எங்களுக்குக் கிடைத்திடும் . .
(ஹாஜா. .)
எனது குருவிற்கு எனது வந்தனங்கள் . . எனது அன்பிற்குறிய வந்தனங்கள். .
அவரது மூலமாகத் தான் உங்களைத் தெரிந்து கொண்டேன் . .
எங்களது அனைத்துக் கவலைகளும் இப்பொழுது தொலைந்து விட்டன . .நாங்கள் உங்களது ஆனந்தமாகிய ஒளியின் நிழலில் அல்லவா இருக்கிறோம் . .
தங்களின் மேல் எவரும் எவ்வளவு பொறாமை கொண்டாலும், அது மிகச்சிறிய அளவுதான் எங்களின் வாழ்த்துக்களுக்குரிய உரிய ஹாஜாவே . .
உங்களை விட்டுப் பிரிவது சரியே அல்ல;
நீங்கள் தாம் எமது வழிகாட்டி..
(ஹாஜா. .)