கடந்த 23-04-2012 திங்கட்கிழமையன்று கல்முனை கடற்ரைகப்பள்ளிவாயலில் மகான் குத்புல் மஜீத், வல்பர்துல் வஹீத் காரணக்கடல் அப்துல் காதிர் ஷாஹுல் ஹமீத் பாதுஷா நாயகம் கத்தஸல்லாஹு சிர்ரஹுல் அஸீஸ் அன்னவர்களின் நினைவாக பாவாமார்களின் தப் ஓசை முழங்க திருக்கொடி ஏற்றப்பட்டது. அதற்கு முன்பாக காரணக்கடல் கன்ஜசவாயி ஆண்டகையின் கொடி ஊர் வலமாக பக்தர்களின் அருளுக்காக வலம் வந்தது.
இந்தக்கொடியேற்ற நிகழ்வு ஒவ்வொரு வருடமும் மிக விமர்சையாக நடைபெற்று வருகின்றன. இவ்வருடமும் மிகச்சிறப்பாக ஏற்றப்பட்ட கொடியேற்ற நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர் கூட்டம் குழுமியிருந்தன. இங்கு 12 தினங்கள் நிகழ்வுகள் பல நடைபெற இருக்கின்றன.
கல்முனை கடற்கரைப்பள்ளி வாயல் அக்காலத்தில் வாழ்ந்த ஒரு வயது முதிர்ந்த பெரியவரின் கனவில் சாஹுல் ஹமீத் ஆண்டகையின் ஆணைப்படி கட்டப்பட்டது என்பது வரலாறுசொல்லும் உண்மைச் சம்பவமாகும்.
அதனாலோ என்னவோ இன்று இக்கொடியேற்ற நிகழ்வும், கந்தூரி நிகழ்வும் தேசிய நிகழ்வாக மாற்றம் பெற்றிருப்பது.??







Posted in:
