Wednesday, March 7

உள்ளத்தை கொள்ளையிடும் இறைஞான கீதம்

உள்ளத்தை கொள்ளையிடும் ஒரு இறைஞான கீதத்தை பல தத்துவங்களை மென்மையாக்கி அனைவரும் புரியும் வண்ணம் வடித்திருக்கின்றார்கள் ஈழத்து கஸ்ஸான், கவித்திலகம் சங்கைகுரிய மௌலவீ எச்.எம்.எம். இப்றாஹீம் நத்வீ அவர்கள். அதற்கு குரல் வடிவம் கொடுத்திருக்கின்றார் காத்தான்குடியைச் சேர்ந்த ஆன்மீகப் பாடகர் கே.எம்.எம். அமானுல்லாஹ் என்ற இயற்பெயர் கொண்ட றுஹுல்லாஹ் அவர்கள்.

உள்ளத்தை கொள்ளையிடும் இப் பாடலை நீங்களும் கேட்டு மகிழ்வதற்காக பதிவு செய்து எமக்கு அனுப்பியிருக்கின்றார் கல்முனையைச் சேர்ந்த நண்பர்.

உங்கள் செவிகளுக்கு விருந்தாக அந்த இனிய இறைஞனா கீதம்.

இவ் இறைஞான கீதம் எழுத்து வடிவில்

பாடல் மெட்டு : வண்ணம் கொண்ட வெண்ணிலவே 

பாடல்
--------------------------------------------------

ஈமான் கொண்ட சோதரனே 
ஞானம் கேட்க வாராயோ 
உள்ளமையில் பொய்மையில்லை 
உணர்ந்து கொண்டால் நரகமில்லை 
உள்ளமையில் பொய்மையில்லை 
உணர்ந்து கொண்டால் நரகமில்லை 
(ஈமான் கொண்ட....) 

சிந்தித்தால் நீயுமில்லை 
சந்திக்கும் நானுமில்லை 
மண்ணில்லை விண்ணுமில்லை 
கண்ணை மூடின் காட்சியில்லை 
நாம் புரியும் செயற்களெல்லாம் 
இறைக்கன்றி எவர்க்குமில்லை 
பேதத்தை நீக்கி விட்டால் 
போதனைகள் தேவையில்லை 
தள்ளித் தள்ளி நீ நடந்தால் 
சொல்லித்தர யாருமில்லை 

(ஈமான் கொண்ட..) 

குத்றத் எனும் சக்தியில்லை 
இறாதத் எனும் நாட்டமில்லை 
ஸம்உன் எனும் கேள்வியில்லை 
பஸறுன் எனும் பார்வையில்லை 
ஹயாதுன் எனும் ஜீவனில்லை 
இல்முன் எனும் அறிவுமில்லை 
கலாம் எனும் பேச்சுமில்லை 
காரியங்கள் எதுவுமில்லை 
இத்தனையும் இறைவனுக்கே 
சொந்தமன்றி எவர்க்குமில்லை 

(ஈமான் கொண்ட ..) 

எழு நப்ஸ் ஏழு தவாப் 
ஏழு வானம் ஏழு புவி 
ஏழு கடல் ஏழு திடல் 
ஏழுலகம் எழு நரகம் 
இன்னும் இன்னும் எத்தனையோ 
ஏழு தரும் படிப்பினைகள் 
ஏழு ஸிபத் இறைவனுக்கே 
ஏதும் சொந்தம் உனக்கு இல்லை 
உனக்கு ஸிபத் சொந்த மென்றால் 
வைத்தியமும் அதற்கு இல்லை. 

(ஈமான் கொண்ட...) 

தம்பி உந்தன் நெஞ்சத்துக்கு 
தத்துவங்கள் நான் கொடுத்தேன். 
நம்பி நீயும் ஏற்கவில்லை 
ஞானம் நீயும் தேடவில்லை 
எந்தன் பதி நீ பிறந்தும் 
எல்லளவும் பயனும் இல்லை 
ஜீவன் நெஞ்சில் உள்ள வரை 
ஞானமுதம் நான் தருவேன் 
நீயும் வந்து சேர்ந்து விட்டால் 
நாளை யுந்தன் கரம் பிடிப்பேன். 

ஈமான் கொண்ட சோதரனே 
ஞானம் கேட்க வாராயோ 
உள்ளமையில் பொய்மையில்லை 
உணர்ந்து கொண்டால் நரகமில்லை.

-----------முற்றும்-----------
07.03.2012

கவியாக்கியவர் : ஈழத்து கஸ்ஸான், கவித்திலகம் சங்கைகுரிய மௌலவீ. எச்.எம்.எம்.இப்றாஹிம் நத்வீ அவர்கள்.

 
Design by Ahamiyam themes | Hosted by Fizmad - Ahamiyam,UK | Ahamiyam followship,UK