இலங்கையில் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்மஹ் பள்ளிவாயலில் இன்று சனிக்கிழமை காலை 09.30 மணிக்கு அஷ் ஷுப்பான் நலன்புரிச் சங்கத்தினரின் ஏழை மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகளை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக காத்தான்குடி நகர சபையின் பிரதி தவிசாளர் அல்ஹாஜ் எம்.ஐ.எம். ஜெஸீம் ஜே.பி அவர்களும் கௌரவ அதிதிகளாக பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலின் தலைவரும் ஓய்வு பெற்ற ஆசிரியரும் எழுத்தாளரும் கவிஞருமான மௌலவீ எச்.எம்.எம் இப்றாஹீம் நத்வீ அவர்களும் மற்றும் அல் ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக் கலாசாலையின் விரிவுரையாளரும் புனித காதிரிய்யஹ் திருச்சபையின் தலைவருமான கலீபா மௌலவீ அப்துல் மஜீட் (றப்பானீ) அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
புகைப்படங்கள் உள்ளே...
அத்துடன் பல உலமாஉகள் பொதுமக்கள் ஊடகவியலாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்ட இந்நிகழ்வு சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டு சுமார் 1000 வறிய மாணவ மாணவியர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் இலவசமாக வழங்கப்பட்டன.
கிராஅத் ஜாமியா மாணவர் எம்.டி.எம் ஷுஹ்தி
இந்நிகழ்வை ஆரம்பித்து வைக்குமுகமாக ஜாமிய்யத்துர் றப்பானிய்யஹ் மாணவன் ஷுஹ்தி அவர்கள் கிறாஅத் ஓதி ஆரம்பித்து வைத்தார்.
வரவேற்புரை மௌலவீ அ.ஜ.மு சம்ஹான் (றப்பானீ)
அதனைத் தொடர்ந்து வரவேற்புரையை மௌலவீ சம்ஹான் றப்பானீ அவர்கள் நிகழ்த்தினார்கள்.
ஏ.எம்.எம்.ஸுபானீ |
அஷ்ஷுப்பான் அமைப்பின் நோக்கங்களையும் அதன் செயற்திட்டங்கள் குறித்து அவ்வமைப்பின் செயலாளர் ஏ.எம்.எம்.ஸுபானீ அவர்கள் உரையாற்றினார்.
எம்.ஐ.எம். ஜெஸீம் ஜே.பி
விசேட உரையை காத்தான்குடி நகரசபையின் பிரதி தவிசாளரும் அப்துல் ஜவாத் ஆலிம் வலியுல்லாஹ் நிதியத்தின் தலைவருமான அல்ஹாஜ் எம்.ஐ.எம் ஜெஸீம் ஜே.பி அவர்கள் கல்வியின் நோக்கம் குறித்து உரையாற்றினார்.
மாணவர் சார்பில் அப்பியாசக் கொப்பிகளைப் பெற்றுக் கொள்ளும் காட்சி |
அதனைத் தொடர்ந்து 1000 மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் இலவசமாக வழங்கப்பட்டன.
இறுதியில் சிறப்புரையை பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலின் தலைவரும் எழுத்தாளரும் கவிஞருமான மௌலவீ எச்.எம்.எம். இப்றாஹிம் நத்வீ அவர்கள் ஆற்றியதுடன் நிகழ்வுகள் சலவாத்துடன் நிறைவு பெற்றது.
புகைப்படங்கள் தகவலும்
எம்.ஜே.எம்.இர்ஸாத் -காத்தான்குடி.