அல்லாஹ் வேறு, சிருஷ்டி வேறு என்பதால் இஸ்லாமிய தத்துவம் மாசுபடுகிறதா?
மௌலவீ. எச்.எம்.எம். இப்றாஹீம் (நத்வீ)
முதலாம் பாகம்
ஜனவரி 1982 ம் ஆண்டு வெளியான ஏகத்துவ மெஞ்ஞான இதழான ஞானச்சுரங்கம் பேரின்ப அமுத இதழ் – 6 க்கு சங்கைக்குரிய மௌலவீ ஈழத்து கஸ்ஸான் எச்.எம்.எம் இப்றாஹீம் (நத்வீ) அவர்கள் எழுதிய மெஞ்ஞானக் கட்டுரை.
- இறைவன் சிருஷ்டிக்கு வேறானவனா?
- இறைவன் எங்கும் நிறைந்தவனா?
- இறைவன் ஒவ்வொறு சிருஷ்டியிலும் இருக்கிறானா?
- தச்சன் கதிரைகளைப் படைப்பதைப் போன்று இறைவன் சிருஷ்டிகளைப் படைத்தானா?
- சிருஷ்டிகளுக்கு மூலப் பொருள் இறைவனே என்றால் மூலப் பொருள் பிரிந்திருக்க முடியுமா?
சர்வ சிருஷ்டிகளையும் படைத்தவன் “அல்லாஹ்தான்” என்பதை நாம் அறிந்திருக்கின்றோம். உலகத்திற்கு அதிலுள்ள அத்தனை சிருஷ்டிகளுக்கும் மூலப்பொருள் அவன்தான். என்றும் நாம் நம்பியிருக்கின்றோம். அவன் எங்கும் நிறைந்தவனென்றும், அவனில்லாத இடம் எதுவுமில்லையென்றும் நாம் ஈமான் கொண்டிருக்கின்றோம்.
நான் கொண்டிருக்கு நம்பிக்கை சரிதானா? அல்லது பிழையானதா? என்பது அறிவும் ஆராய்வும் இல்லாமல் இருப்பதன் காரணமாக நமக்கே புரியாமல் பின்பற்றல் (தக்லீத்) வாதியாகவே வாழ்ந்து வருகின்றோம்.
இதுபற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது? முவஹ்ஹிதீன்களும், சூபியாக்களான ஞானவான்களும் என்ன சொல்கின்றார்கள் என்பன போன்ற கேள்விக் கணைகள் எம்மை எதிர் நோக்கி நிற்கின்றன.
இக்கட்டுரையை அல்லாஹ் வேறு, சிருஷ்டி வேறு என்பதால் இஸ்லாமிய தத்துவம் மாசுபடுகின்றதா? என்ற தலைப்போடு உண்மையான ஈமானை (தௌஹீதை) பொதுமக்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இஸ்லாம் தரக்கூடிய சில கருத்துக்களைத் தருகின்றேன்.
சிந்தனைத் தெ ளிவோடு இதைப் படித்துப் பயன் பெறுவது வாசகர்களின் கடமையாகும்.
இறைவன் சிருஷ்டிகளுக்கு வேறானவனா? என்பதை ஆராய்வதற்கு முன் அவனுக்கும், படைப்புகளுக்கு முள்ள தொடர்பு எத்தகையது என்பதை அறிந்திருத்தல் அவசியமாகும்.
இறை அறிந்திராமல் அல்லாஹ் படைத்தான் என்று மாத்திரம் தெரிந்திருப்பதால் இறைவனைப் பற்றிய ஆத்ம ஞானம் எவ்வகையிலும் ஏற்பட முடியாது.
இவனால், அல்லாஹ்வைப் பற்றியும், அவனது “அஸ்மா சிபாத்து” க்களின் வள்ளமைகள் பற்றியும் சொட்டளவேனும் சுவைக்கவும் முடியாது. அல்லாஹ்வைப் பற்றி அறிய வில்லையாயின் அவன் முஃமீனாகவும் இருக்க முடியாது.
முஃமீனாக இல்லையாயின் அவன் இவ்வுலகிற்கு எதற்காக வந்தானோ அந் நோக்கத்தை நிறைவேற்றாத வாலில்லாத மிருகமா இருக்கின்றான். என்பது தெ ளிவாகின்றது. ஏனெனில் தீன் மார்க்கத்தில் முதற்கடமை அல்லாஹ்வைப் பற்றி அறிவதுதான். அவனை அறியவேண்டும் என்று சொன்னவனும் அவனேதான்.
அவனது சொற்படி அவனை அறிய முற்படும்போதுதான் இவனிலே அடைக்களமாக வைக்கப்பட்டிருக்கும் மாபெரும் வெ ளிப்பாடான சிந்தனா சக்தி ஊற்றெடுத்தொட முடியும். உள்ளம் என்ற பூமியிலிருந்து ஊற்றெடுக்கும் சிந்தனையினாற்றான், தான் யாரென்பதும், தான் எங்கிருந்து வந்தேன் என்பதும் தனக்கு மூலம் பொருள் எது என்பதும், தனக்கும் அம்மூலப் பொருளுக்குமுள்ள தொடர்பு எத்தகையது என்பதும் இலகுவாகப் புரியவரும்.
இந்நிலையிலேதான் அவன் அல்லா ஹ்வைக் கொண்டும் முஃமீனானவனாக முடியும். இல்லையேல் இவனும் பகுத்தறிவை பயன் படுத்தாத வாலில்லாத மிருகமேதான். அதில் சந்தேகமில்லை.
அல்லாஹ் படைத்தான் என்று சொல்லும் போது அதிகமானோருக்கு திடீர் என விளங்குவது எவ்வாறெனில் “ஒரு ஓடாவி ஒரு கதிரையைச் செய்வது (படைப்பது) போன்றுதான்” என்று நினைத்துவிடுகின்றனர்.
இக் கொள்கை சரியானதா? என்றுகூட ஆராய்ந்து பார்ப்பதில்லை. ஆராய்வதற்கு அறிவில்லையே! அறிவு குழிதோன்டிப் புதைக்கப்பட்டிருக்கும்போது எங்ஙனம் அறிய முடியும்!.
அறிவே இல்லை என்றிருக்கும்போது அறிஞர்கள் எங்கே இருக்க முடியும்? சரி! இவ்வாதம் இஸ்லாமிய த்த்துவத்திற்கும், குர்ஆன் ஹதீஸ், இஜ்மா, கியாஸ் ஆகிய மூலாதாரங்களுக்கும் சிரியானதா என்று ஆராய்ந்து பார்க்கும்போது, தவ்ஹீதுக்கும் அதை உள்ளடக்கிய மூல மந்திரமான கலீமாவுக்கும் ஏன், பகுத்தறிவிற்கும் நேர் விரோதமானதாகவும், முற்றிலும் முரணானதுமாகவே தெரிகின்றது.
காரணம் யாதெனில், தட்சன் கதிரையைப் படைப்பது போன்றுதான், அல்லாஹ் சிருஷ்டிகளைப் படைக்கின்றான் என்றால் தச்சனும், கதிரையும் வேறாக இருப்பதுபோல் சிருஷ்டியை விட்டும் எவ்வகையிலும் பிரிக்க முடியாத வல்ல நாயனை தன் படைப்பை விட்டும் வேறாக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
வேறு என்று கொள்வது இஸ்லாமிய த்த்துவத்திற்கு நேர் முரணானதும், ஷிர்க் என்ற படுகுழியில் தள்ளக்கூடியதும், என்பதை நம்மில் அதிகமானோர் அறியாமையின் காரணமாக விளங்கிக் கொள்வதில்லை.
கதிரையின் மூலப்பொருள் மரமாகவும், மரம் எல்லாநேரங்களிலும் எல்லா நிலைகளிலும் கதிரையை விட்டும் பிரியாமல், கதிரை தானாகத்தான் இருக்கும்போது கதிரைக்கு மூலப்பொருள் தச்சன் என்று சொல்வது எங்ஙனம் பொருந்தப் போகின்றது.
பகுத்தறிவு ஏற்றுக் கொள்கின்றதா? சிந்தனை செய்து பாருங்கள்! தச்சனுக்கு இடம் தளம் அவசியமாவதுபோல் (இவ்வுதாரணத்தின் படி) அல்லாஹ்வுக்கு இடம், தளம் உண்டாகி மூலப் பொ ருட்கள் பலதரப்பட்டு, இஸ்லாமிய த்த்துவமே உடைத்தெரியப்படுகிறது.
மாத்திரமல்லாமல், இறைவனுடன் இறைவன் அல்லாத பொருட்களும் உண்டு என்ற ஷிர்ஹ் இணையை ஏற்படுத்தக் கூடியதுமாய் அமைந்து விடுகிறது. இது மன்னிக்க முடியாத மாபெரும் குற்றமாகும். இறைவன் என்பவன் தனக்கு தானாய் தன்னைக் கொண்டே ( வேறொன்றைக் கொண்டு உண்டாகாமல்) உண்டாகி நிலைத்திருப்பவன்.
சிருஷ்டி என்பது (தன்னை கொண்டு உண்டாகாமல் ) அல்லாஹ்வைக் கொண்டு உண்டானவை. அல்லாவுக்கு சிருஷ்டிகள் வேறு என்று கருதும்போது சிருஷ்டி ஒவ்வொன்றும் தனித்தனி சுயமான வுஜுதை உடையதென்றும், அல்லாஹ்வைப் போன்ற எத்தனையோ வுஜூதுகளும், தாத்துகளும் உண்டு என்ற அபத்தமான, தௌஹீதுக்கு முரணான கருத்தை இவன் அறியாமலேயே ஏற்க வேண்டி ஏற்படுவதோடு இணைவைத்தவனாகவும் ஆகின்றான்.
யதார்த்த்தில், இணை என்பதற்கே இடமில்லையாயினும், இவனது எண்ணத்தில் இணை ஏற்படுகிறது. இறைவன் சிருஷ்டிகளுக்கு வேறானவன் அல்ல, பலதாக தெரிந்தாலும், அவை ஒன்றுதான். ஒன்றின் வெ ளிப்பாடுகள்- கோலங்கள்தான், இருப்பவை ஒன்றுதான். என்று கொள்ளும்போது இணை ஏற்பட முடியுமா?
இணை ஏற்படுவதற்கு வேறு ஒன்று வேண்டுமே. மின்சக்கி (கரண்ட்) ஒன்றுதான், கோலங்கள் பல விளக்குகளாக இருப்பதால் கரண்ட் பல என்று சொல்ல முடியாது. எனவே, இணை (ஷிர்க்) என்ற சொல்லின் விளக்கமென்ன வெனில் அடிப்படையில் ஷிர்க் இல்லை.
இவன் வேறு என்று கருதும்போது இவனது பேத புத்தி என்ற வஹ்மின் காரணமாக எண்ணத்தில் இனை ஏற்படுகின்றது.
இவரது எண்ணத்தில் ஏற்படுவதால் யாதார்த்த்தில் அப்படி ஒன்று இல்லை, இருக்கவும் முடியாது. கண் வருத்தமுடையவன் சூரியன் இல்லை என்று சொல்வதால் உண்மையில் சூரியன் இல்லாமல் ஆகி விடுகிறதா?
சாரைக் கண்ணனுக்கு ஒரு பொருள் இரண்டாகத் தெரிவதால் பொருள் இரண்டாகி விடுகிறதா? பொருள் ஒன்றேயொன்றுதான். இதுவே கலீமா தையிவா கூறும் தௌஹீதின்- ஈமானின் உண்மை விளக்கமாகும்.
இஸ்லாமிய கொள்கையும் ஏனைய கொள்கைகளும்.
சகல கொள்கைகளையும் எதிர்த்து, கொள்கைகள் பலதென்று சொல்லப் படினும்,உண்மையில் றைகொள்கை என்பது ஒன்றுதான் உள்ளது. அதுதான் இஸ்லாம் போதிக்கின்ற ஏகத்துவக் கொள்கையாகும்.
இன்று கொள்கை விளக்கங்கள் சொல்லப்படாத்தன் காரணமாக இஸ்லாமியர்களுக்கே தங்களது கொள்கை என்ன? அதன் விபரம் எப்படி? என்ற விளக்கம் தெரியாமல் வாழ்கின்றனர்.
இன்று பலர், அல்லாஹ் வேறு சிருஷ்டி வேறு என்ற ஷிர்கான நம்பிக்கையுடன் இருப்பதோடு, அவன் வேறாக இருந்தாலும் ஒவ்வொறு சிருஷ்டியிலும் இருக்கின்றான் என்று நம்பியிருக்கின்றனர்.
இக்கருத்தை மூலதாரங்களைக் கொண்டும் அல்லாஹ் வழங்கிய பகுத்தறிவைக் கொண்டும் ஆராய்ந்து பார்க்கும்போது அல்லாஹ் ஒவ்வொறு சிருஷ்டியிலும் இருக்கின்றான் என்ற கொள்கை இஸ்லாமிய கொள்கைக்கும் த்த்துவத்திற்கும் நேர் விரோதமானதாகவே தெரிகின்றது.
காரணம் என்னவெனில் இவர்களின் கூற்றுப்படி அல்லாஹ் வேறு சிருஷ்டி வேறு என்பதே பெரும் பிழையாய் இருக்க, அவன் ஒவ்வொறு பொருளிலும் இருக்கின்றான் என்று சொல்வது இணைக்கு மேல் இணையாக முடிகிறது.
மட்டுமன்றி, அகண்டப் பொருளான அல்லாஹ்வை கண்டப்பொருளான சிருஷ்டியில் கட்டுப்படுத்துவதாகவும் அமைகின்றது. சிருஷ்டி கத்தாவான ஒரு செயலை செய்வதற்கு யாரின்பாலும் தெவையற்ற சர்வ வல்லமையுள்ள நாயன், சிருஷ்டியின்பால்தேவையாகின்றான்.
என்ற கருத்தையும் ஏற்படுத்தி இறை த்த்துவத்தை உடைத்து விடுகின்றது. எதற்குமே தேவையற்ற அவன் சிருஷ்டி என்ற பொருளில் வாசம் செய்ய தேவையாகின்றான். என்றால் அவனை அல்லாஹ் என்று எப்படி ஏற்றுக் கொள்வது.சிந்தனை செய்து பாருங்கள்.
அல்லாஹ்வும், சிருஷ்டியும் வேறானவை என்பதாலும், சிருஷ்டியில் இறைவன் இருக்கின்றான் என்று கொள்வதாலும் சுயமாக இயங்க்க்கூடிய இறைவனுடைய வுஜுதைப் போன்று மேலும் எத் தனையோ சுயமான வுஜுதுகள் மூலப் பொருட்கள் இருக்கிறது.
என்ற தவ்ஹீதுக்கு முரணான படுகுழியல் தள்ளப்பட்டு விடுகின்றனர். இன்னோரின் நிலையை (அகீதா கொள்கை நிலையை) சூபியாக்களான ஞானவான்களும், உசூல் சட்ட வல்லுனர்களும் அவர்களது பரிபாசையில் ஹூலுல் உடையவர்கள் என்று வர்ணிக்கின்றனர்.
ஹூலூல் என்றால்?
ஹூலூல் என்பதற்கு வரைவிலக்கணம் “துஹூலு ஷைஇன் பீ ஷைஇன்” ஒரு பொருள் இன்னொரு பொருளில் நுழைதல் என்பதாகும்.
உதாரணமாக. கிளாஸ் என்ற ஒரு பொருளில் தண்ணீர் என்ற பொருள் நுழைவது போலாகும். கிளாஸ் என்பதும் தண்ணீர் என்பதும் வேவ்வேறான இரு மூலப் பொருட்கள். ஒன்றில் ஒன்றிருப்பதுபோல் அல்லாஹ் என்பவன் சிருஷ்டி என்ற பொருளில் (“கிளாஸில் தன்னீர் இருப்பதுபோல்”) இருக்கின்றான். என்று இக்கொள்கையுடையவர்கள் கருதுகின்றனர்.
இக்கருத்து சுயமான இரு மூலப்பொருட்கள் இருக்கிறது என்ற கருத்தை எடுத்துக்காட்டுகிறது. இது தவறான கருத்தாகும். எனவே, சுயமான வுஜூத் ஹக்குடைய வுஜூத் (தாத்) ஒன்றேதான்.
மூலப் பொருள் ஒன்றேதான். அது பிரியாத்தும் பிரித்தெடுக்க முடியாத்துமாகும். இதுதான் ஈமானும் தௌஹீதுமாகும். இத் த்த்துவத்தை மையமாக்க்கொண்டு இறைவன் ஒவ்வொறு பொருளிலும் இருக்கின்றான் என்ற கொள்கை நிராகரிக்கப்படுகின்றது.
இக்கொள்கையுடையோரை வழி கெட்டவர்கள் என்றும் இஸ்லாம் கண்டிக்கின்றது.
இரு பொருள் ஒரு பொருளாகல்..
கிளாஸில் நீர் இருப்பது போன்று அல்லாஹ் சிருஷ்டியிலிருக்கிறான் என்ற தவறான கொள்கையைப் போன்று இன்னுமொரு கொள்கையுண்டு அதுவும் தவறான கொள்கையாகும்.
தொடரும்..
ஜனவரி 1982 ம் ஆண்டு வெளியான ஏகத்துவ மெஞ்ஞான இதழான ஞானச்சுரங்கம் பேரின்ப அமுத இதழ் – 6 க்கு சங்கைக்குரிய மௌலவீ ஈழத்து கஸ்ஸான் எச்.எம்.எம் இப்றாஹீம் (நத்வீ) அவர்கள் எழுதிய மெஞ்ஞானக் கட்டுரை.
தொடரும்..
ஜனவரி 1982 ம் ஆண்டு வெளியான ஏகத்துவ மெஞ்ஞான இதழான ஞானச்சுரங்கம் பேரின்ப அமுத இதழ் – 6 க்கு சங்கைக்குரிய மௌலவீ ஈழத்து கஸ்ஸான் எச்.எம்.எம் இப்றாஹீம் (நத்வீ) அவர்கள் எழுதிய மெஞ்ஞானக் கட்டுரை.