www.shumsme.com உத்தியோகபூர்வமாக ஆரம்பம்
இலங்கை காத்தான்குடியில் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலியுல்லாஹ் நிதியத்திற்காக புதிய இணையத்தளமொன்று சென்ற வருடம் திறந்து வைக்கப்பட்டிருந்தது.
அதனை தொடர்ந்து இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 07.11.2011 அன்று (பெருநாள் தினத்தில்) காலை 9.45 மணியளவில் ஷம்ஸ் மிடியா யுனிட் என்ற பெயரில் புதிய இணையத் தளமொன்றினை சுன்னத் வல் ஜமாஅத் மற்றும் ஸுபித்துவம் சார்ந்த கருத்துக்களை உலகறியச் செய்வதற்காக வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
இந்த இணையத்தளத்தின் முகவரி
இந்த இணையத்தளத்தின் முகவரி
அத்துடன் பல வருடங்கள் நடாத்தப்பட்டு சில காலங்கள் நிறுத்தப்பட்டிருந்த ஷம்ஸ் மிடியா அலுவலகமும் மீள புனரமைக்கப்பட்டு நவீன வசதிகளுடன் கணனி மயப்படுத்தப்பட்டு திறந்து வைக்கப்படவுள்ளது.
இவ்விணையத்தளத்தில் விசேடமாக காத்தான்குடி பத்ரிய்யஹ் ஜும்ஆப் பள்ளிவாயலில் இடம் பெறும் விடேச நிகழ்வுகள் அனைத்தும் இவ்விணையத்தளத்தினூடாக நேரடி அஞ்சல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுகின்றது. அதன் ஆரம்ப தினமாக ஹஜ்ஜுப் பெருநாள் தினம் உட்பட இனிவரும் காலங்களில் நடைபெறும் விஷேட நிகழ்வுகள் அனைத்தும் இதில் நேரடியஞ்சல் செய்யப்படும்.
ஷம்ஸ் மிடியா யுனிட்டில் நேரடியஞ்சல் செய்யப்படுகின்ற சகல நிகழ்வுகளும் அகமியமும் நேரடியாக வழங்கும் என்பதை அகமியத்தின் வாசகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.
அத்துடன் இலங்கையில் வாழும் ஆத்மீகவாதிகளின் நன்மை கருதி ஷம்ஸ் மிடியா யுனிட்டினால் இலவச SMS சேவை ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனை இலங்கையில் வாழும் டயலொக், மொடிப்டெல் மற்றும் இட்டிஸலாத் பாவனையார்கள் தங்களின் கைத்தொலைபேசியில் பத்ரிய்யஹ்வில் இடம் பெறும் விசேட நிகழ்வுகள் பற்றிய விபரங்களை குறுந்தகவலாக பெற்றுக் கொள்ள முடியும்.

இச் சேவையைப் பெற்றுக் கொள்ள Follow Shumsnews என டைப் செய்து 40404 என்ற இலக்கத்திற்கு அனுப்புவதன் மூலம் செயற்படுத்தலாம்.