என்ற தலைப்பில் ஞானச் சுரங்கத்தில் வெளியான கட்டுரைக்கு மேலும் சில விளக்கங்கள்.
குருபாவா, ஸ்ரீ லங்கா
(1981ம் ஆண்டு ஞானக்கடல், மெஞ்ஞான சூரியன் சங்கைக்குரிய மௌலவீ அல்ஹாஜ் அப்துர் றஊப் (மிஸ்பாஹி, பஹ்ஜி) அவர்களால் ஞானச்சுரங்கம் என்ற பத்திரிகை எழுதப்பட்டு அது இஸ்லாமிய மெஞ்ஞானப் பேரவையினால் வெளியிடப்பட்டது.
![]() |
சங்கைக்குரிய மகான் குருபாவா அவர்கள் |
ஞானச்சுரங்கத்தின் இரண்டாவது இதழில் சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹி அவர்கள் “இருட்டில் இருந்தான் இறைவன்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார்கள். அதற்கு “மேலும் சில விளக்கம்” என்ற தலைப்பில் இலங்கையில் வாழ்ந்து தற்போது அமெரிக்காவில் அடக்கம் செய்யப்பட்டுள்ள மகான் குருபாவா (முகம்மத் ரஹீம் பாவா முகையத்தீன்) அவர்களால் எழுதப்பட்ட விளக்கக் கட்டுரை இது)
அன்புள்ள ஆலிம் தம்பி, மற்றும் ஆலிம் தம்பிமாருக்கும் உங்கள் பின்தொடர்ந்து ஆண்டவன் பாதையில் கடமைசெய்யும் எல்லாத் தம்பிமார்களுக்கும் என்னுடைய ஸலாம் அஸ்ஸலாமு அலைக்கும். வரஹ்மதுல்லாஹிவபரகாத்துஹு.
ஞானச் சுரங்கம் என்ற தங்களின் இரண்டாவது இதழில் “இருட்டில் இருந்தான் இறைவன்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை பிரசுரித்திருந்தீர்கள். அவர் சொன்னதில் ஒரு பிழையுமிருக்க வில்லை அதை அறிவோம்.
ஈமான் உறுதியோடும் அல்லாஹ்வுடைய நம்பிக்கையோடும், ஒரு மனிதன் பார்த்தால், அதில் சில உண்மைகள் விளங்கும் என்று நான் நம்புகிறேன். நாம் நம்ப வேண்டும்.
(மாகான் குருபாவா அவர்களின் வீடியோ பேட்டி உள்ளே இணைக்கப்பட்டுள்ளது)
(மாகான் குருபாவா அவர்களின் வீடியோ பேட்டி உள்ளே இணைக்கப்பட்டுள்ளது)
துனியாவென்ற ஆலம் தோன்றி இருபது கோடி வருடங்களாக, அல்லாஹ்வென்ற தத்துவம் சகல சிருஷ்டிகளையும் தண்னடக்கத்திற்குள் வைத்து இயக்கிக் கொண்டிருகின்றது.
![]() |
சங்கைகுரிய மகான் குருபாவா அவர்களின் அடக்கஸ்தளம், அமெரிக்கா. |
அவனோ பிரகாசமானவன், ஒப்புவமையில்லாதவன், நிகர் ஒன்றில்லாதவன், ஆதியும் அந்தமுங் கடந்து நின்ற ஒரு மெய்ப் பொருள். பிறப்பு இறப்பு இல்லாதவன்.
துன்பம் இன்பம் இல்லாதவன் பெண்டிர் பிள்ளையில்லாதவன், சொத்து சுதந்திரம் ஒன்றும் தன்வசமில்லாதவன், அது தன்னிலைக்கு உரியதென்று இல்லாதவன், இது போன்று எண்ணற்ற நிலைகளில்லாதவன்தான் அவன்.
துன்பம் இன்பம் இல்லாதவன் பெண்டிர் பிள்ளையில்லாதவன், சொத்து சுதந்திரம் ஒன்றும் தன்வசமில்லாதவன், அது தன்னிலைக்கு உரியதென்று இல்லாதவன், இது போன்று எண்ணற்ற நிலைகளில்லாதவன்தான் அவன்.
முற்காலத்தில் சில அறிவாளிகள், முதியவர்கள் ஞானிகள் கருத்துக்களின் மூலமாகவும், பாடல்களின் மூலமாகவும், ஆதிக்கு முன் அநாதியில் அல்லாஹ் இருளாயிருந்தானென்று சொல்லியிருப்பதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.
ஆதிக்குமுன் அநாதியில் அல்லாஹ் இருளாயிருந்தான் என்றதன் கருத்து : சகல படைப்புக்களையும் படைக்காமல் தன்னந்தனியாக இருந்த காலத்திற்கு இருட்காலமென்று சொல்லப்பட்டும்.
அவன் தோற்றுவித்தகாலம் ஆதிகாலம், அவன் ரூபமாகிய படைப்புக்களை விளங்கச் செய்தகாலம் அவ்வல் காலம், அதை விளங்கி அவைகளை எழுப்பியகாலம் ஹயாத்துடைய காலம் இப்படி ஒவ்வொன்றுக்கும் அந்தந்த நேரத்திற்கு அந்தந்த காலத்தினை குறிக்கப்படுகிறது.
பின்பு விளக்கம் வந்த காலத்தில் அவனும் விளக்கமாகி வந்துவிட்டான். எல்லாம் விளக்கமாகி வந்து கொண்டிருக்கிறது. அப்படி அப்படி விளக்கமாகி, எல்லாம் வெளியான அந்தக்காலத்தைத்தான் ஒளிவுடைய காலமென்று சொல்லப்படுகிறது. என்பது கருத்தேயல்லாமல் அல்லாஹ் இருளாய் இருந்தான் என்று சொல்வதற்கில்லை.
நீங்கள் ஒரு கமத்தினை வாங்கி, அதனை பாழடைய விட்டு விடுவீர்களாயின், அதற்குப் பாழடைந்த பூமியென்றுதான் சொல்லப்படும். அதுபோன்று, அல்லாஹ் விருத்திசெய்யாத அந்தக் காலத்தை இருட்காலமென்று சொல்லப்படுகிறது.
இதை நாங்கள் இரண்டு கருத்துக்களில் எடுக்க வேண்டும். காணியிருந்தும், நான் அதனை விருத்தி செய்யாது போனால் அது பாழடைந்த பூமி. அதேபோல்தான் மனிதர்களுடைய செயல்களும்.
இதை நாங்கள் இரண்டு கருத்துக்களில் எடுக்க வேண்டும். காணியிருந்தும், நான் அதனை விருத்தி செய்யாது போனால் அது பாழடைந்த பூமி. அதேபோல்தான் மனிதர்களுடைய செயல்களும்.
ஒரு மனிதன் தன்னுடைய அறிவையும் இறைவனுடைய அருளையும், ஈமானையும் கொண்டு அவனுடைய இல்மும் அறிவும், குணங்களும் பெறாதகாலம் ஒரு இன்ஸானுக்கு இருட்காலம், ஒரு மனிதன் தன்னிலே நன்மையை விளங்கி விருத்தி செய்யும்போது அது அவனுக்கு பிரகாசமான ஒளிவின் காலம்.
இதைதான் ஞானிகளும், பெரியார்களும் அல்லாஹ் ஒன்றையும் விருத்தி செய்யாத காலத்தை, அவன் இருளில் இருந்தான் என்று பாவித்தது அக்காலத்தையும் இருட்காலமென்றுதான் சொல்லப்படும்.
மனிதனுக்கு எல்லாம் இருந்தும், தொண்ணூற்றொன்பது அவனுடைய றஹ்மத்தான் விலாயத்துக்கள் கொடுக்கப்பட்டும், இன்ஸான் இருளில் இருக்கின்றான்.
என்று சொல்லப்படுவது போல அல்லாஹ்விடத்தில் எல்லாமிருந்தும் அவன் விருத்திசெய்யாமல் தனித்திருந்த காலத்தை இருள்காலம் என்று சொல்லப்படும் என்றது கருத்து.
என்று சொல்லப்படுவது போல அல்லாஹ்விடத்தில் எல்லாமிருந்தும் அவன் விருத்திசெய்யாமல் தனித்திருந்த காலத்தை இருள்காலம் என்று சொல்லப்படும் என்றது கருத்து.
இதுதான் அந்த நுட்பவிளக்கமேயன்றி அல்லாஹ் இருளின் இருக்கின்றான் என்பது கருத்தல்ல, இந்த நிலைக்குதான் இந்த சொல்லை பாவித்தது.
அருமையான சகோதரர்களே! நாங்கள் இதனைச் சிந்திக்க வேண்டும். இதைப்பற்றிய பாடல்களையும், சொற்களையும் குற்றம் பிடிப்பதில் ஒருவன் கவனித்துக் கொண்டிருப்பானாயின் அவன் தன் குற்றத்தைப் பார்க்க மாட்டான். பிறர் குற்றம் பார்ப்பவன் தன்னைத் திருத்திக் கொள்ள மாட்டான். தன்னைத்திருத்துகிறவன் பிறர் குற்றங்களை எதிர் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டான்.
ஆனால், ஒரு சரியான இன்ஸான் ஹயாத்துமௌத்து, துன்யா, ஆகிறா இந்த இரண்டு காலங்களுக்கிடையில், தனக்குள் உள்ள குற்றங்களைத் தீர்க்கப்பார்பவனே தவிர உலக குற்றங்களையும், கவிகளையும், பாடல்களையும், திருத்துவதற்கு அவனுக்கு நேரமில்லை.
அப்படிப்பார்க்கவும் மாட்டான். அவன் தனது ஹயாத்து, மௌத்துக்குள் நன்மையை எடுத்து நடத்தி, தீமையை விலக்கி நடத்திக் கொள்வதுதான் அவனின் வேலை.
திடசித்தமான ஈமானும் அல்லாஹ்வின் நம்பிக்கையும், உள்ளவன் இதைத்தான் செய்வான் எனது அருமையான சகோதரர்களே! நாங்கள் இதனைச் சிந்திக்க வேண்டும்.
ஒரு மனிதன் பேசுவது, என்பது மிகவும் இலேசு, அதனால் அவன் தன் பொழுதைத்தான் வீணாக்குகிறான். அதனையவன் விட்டுவிட்டு வாயை மூடி தன்னைப் பார்த்து ஸலாமத்தாகி திருந்திக் கொள்ள முயல்வானாயின் றஹ்மத்தைப் பெற்றுக் கொள்வான், காலவிரயமும் அவனுக்கில்லை.
எனது அருமையான சகோதரர்களே! இதைச் சிந்தித்து வாதாட்டங்களையும், பிறரில் குற்றம் காண்பதையும் விட்டுவிட்டு உண்மையொன்றிருக்கிறது, அல்லாஹ் ஒருவனிருக்கிறான் அவனுக்கு வழிப்படல் என்றிருக்கிறது அதனை எடுத்து நடத்துங்கள்.
நாங்கள் ஒரு சமுதாயம், நாங்கள் ஒத்த இந்த உண்மையை நிலைப்படுத்திக்கொள்ள, ஒவ்வொறுவரும் தெண்டித்துக் கொள்ள வேண்டும்.
மௌலவி ஆலிம் தம்பி, இதுதான் துன்யாவில் இருக்கிறது பல சங்கங்களும், பல பிரிவுகளுமிருந்து அல்லாஹ், றசூல், குத்ப் முஹ்யித்தீன், என்ற உண்மைப் பொருளை விளங்காமல் ஒவ்வொரு பகுதியினரும் போராடுகிறார்கள்.
ஆனால் நீங்கள் சொன்னதும் பேசியதும் சரி, அவர் சொன்னதும் பாடியதும் சரி, ஆனால் இஸ்லாம் என்ற ஒற்றுமையினை அவர்கள் உடைத்துக் கொண்டு போராடுகின்றனரேயன்றி ஒற்றுமையினை சேகரித்துக் கொள்வதற்கு பாடுபடுகிறார்களில்லை. அல்லாஹ் அவர்களை திருத்தியமைக்க வேண்டும்.
ஆனால் நீங்கள் சொன்னதும் பேசியதும் சரி, அவர் சொன்னதும் பாடியதும் சரி, ஆனால் இஸ்லாம் என்ற ஒற்றுமையினை அவர்கள் உடைத்துக் கொண்டு போராடுகின்றனரேயன்றி ஒற்றுமையினை சேகரித்துக் கொள்வதற்கு பாடுபடுகிறார்களில்லை. அல்லாஹ் அவர்களை திருத்தியமைக்க வேண்டும்.
ஆமீன்.
(17.09.1981ம் ஆண்டு இலங்கை, காத்தான்குடியில் இஸ்லாமிய மெஞ்ஞானப் பேரவை வெளியீடாக வெளிவந்த ஞானச்சுரங்கம் இதழ் 11 க்கு சங்கைக்குரிய மகான் முகம்மத் ரஹீம் பாவா முகையத்தீன் (குருபாவா) அவர்களால் எழுத்தப்பட்ட கட்டுரை. மகானின் அடக்கஸ்தளம் தற்போது அமெரிக்காவில் ஈஸ்ட் பெலோபில்ட் இல் அமைந்துள்ளது.)
சங்கைக்குரிய மகான் அவர்களின் வரலாறு ஆங்கில மொழிபெயர்ப்புடன் தமிழில் மகான் அவர்களின் நாவிலிருந்தே..