அன்பான ஆன்மீக வாசகர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்.
அல்லாஹ்வின் பெரும் கருணையாக எமது இணையத்தளத்திற்கு தொடர்ந்து இறைஞான எழுத்தாளர் "ஸைபுல் இதா" தொடர்ந்து பல கட்டுரைகளையும் மெஞ்ஞானம் சார்ந்த சிறிய "மெஞ்ஞானக் கதைகளை"யும் ஈமெயில் மூலமாக அனுப்பிவருகின்றார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
இவர்கள் எமது இணையத்தளத்திற்கு தனியான ஆக்கங்களை எழுதி அனுப்பி வைப்பதை எமது இணையத்தளம் பெறுவதற்கரிய பாக்கியமாகக் கருதுகின்றது. வாசகர்களும் தொடர்ந்து அன்னார் எழுதும் ஆக்கங்களை கவனமாகப் படித்துப் பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
எழுத்தாளர் அவர்களின் எழுத்துக்களை தனியாகப் படிப்பதற்காக எமது இணையத்தளம் "காதிபுல் ஹிக்மஹ் ஸைபுல் இதா பதிவுகள்" என்ற பகுதியை உருவாக்கியுள்ளது. இப் பகுதியில் அவர்களின் பதிவுகளை வாசகர்கள் படித்து பயன் பெறுவீர்களாக!
எமது இணையத்தளத்திற்கு தொடர்ந்து தனது ஆக்கங்களை அனுப்பிவரும் எழுத்தாளர் அவர்களுக்கு எமது நிர்வாகம் சார்பிலும் பல்லாயிரம் வாசகர்கள் சார்பிலும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.