இதற்காக கொழும்பு நவலோக வைத்தியசாலையில் அன்னாருக்கு வைத்தியப் பரிசோதனை செய்யப்பட்டது. வைத்தியப் பரீசோதனையில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் சங்கைக்குரிய ஷெய்குனா அவர்களின் முழு உடலும் பரிசோதனைக்குற்படுத்தப்பட்டது.
இப்பரிசோதனையின்போது அவர்களின் வயதுற்குரிய எந்த உடல் உபாதையும் அன்னாரின் புனித தேகத்தில் இல்லை என்பதையும் அவர்கள் தொடர்ந்து பல மாதங்கள் ஒரே நிலையிலிருந்து எழுதியதால் இடது கால் நரம்பு ஒன்று நசிவடைந்து இருப்பதையும் நரம்பியல் வைத்திய நிபுணர்கள் கண்டுபிடித்தனர்.அதற்காக சங்கைக்குரிய ஷெய்கனா அவர்கள் சுமார் மூன்று மாதங்கள் கட்டில் மெத்தையில் இருந்தவாறு மாத்திரைகள் சாப்பிட வேண்டும் என்றும் எந்தக்காரணத்திற்காகவும் சில அடிகள் கூட நடக்கக்கூடாது என்றும் சகல பிரயாணங்களையும் சில மாதங்களுக்கு நிறுத்துமாறும் வைத்தியர்கள் ஆலோசனை கூறினர்.
இதற்கான காரணம் தொடர்ந்து ஷெய்குனா அவர்கள் நடக்கும்போதோ அல்லது தூரப்பிரயாணங்கள், எழுத்து வேலைகள் செய்யும்போதோ குறித்த நரம்பில் ஏற்பதும் இரத்த அழுத்தம் காரணமாக அவர்களின் காலில் அதிக வலி ஏற்படும் என்பதனாலாகும்.
வைத்தியர்களின் ஆலோசனைக்கிணங்க தொடர்நது கட்டிலில் ஓய்வு பெற்ற ஷெய்குனா அவர்கள் தொடராக மாத்திரைகள் உட்கொண்டநிலையில் 17 நாட்களின் பின்னர் மீண்டும் வைத்திய பரிசோதனைக்கு 12.07.2011 அன்று உட்படுத்தப்பட்டார்கள்.
இப்பரிசோதனையின்போது சங்கைகுரிய ஷெய்கனா அவர்களுக்கு பாதிக்கப்பட்டிருந்த நரம்பு தற்போது சுமார் 80% குணமடைந்து விட்டதாகவும் இன்னும் சில நாட்களில் ஷெய்குனா அவர்கள் நடக்க முடியும் எனவும் வைத்தியர்கள் கூறியுள்ளனர்.
எனவே ஷெய்குனா அவர்கள் தற்போது நலமாக இருக்கின்றார்கள் என்ற செய்தியை அகமியம் இணையத்தளம் அன்னாரின் சீடர்களுக்கும் மற்றும் ஆத்மீக சகோதர, சகோதரிகளுக்கு தெரிவித்துக் கொள்கின்றது.
அன்னாரின் நீண்ட ஆயுளுக்காகவும் அவர்களின் தேக ஆரோக்கியத்திற்காகவும் பிராத்திக்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.
கண்மனி நாயகம் (ஸல்) அவர்களின் மீது தீராத அன்பைக் கொண்ட சங்கைக்குரிய பூசரீ (றஹ்) அவர்கள் புனித புர்தா ஷரீபினை யாத்து கோர்வை செய்த காலத்தில் பக்கவாதத்தினால் பீடிக்கப்பட்டார்கள் என்பதும் பின்னர் மீண்டும் அதிலிருந்து மீட்சி பெற்றார்கள் என்பதும் வரலாறு எமக்கு உணர்த்தும் உண்மையாகும்.
நன்றி
தகவல் - பைசான் மதீனா