Wednesday, July 20

25வது ஹாஜாஜீ மகா கந்தூரிக் கொடியேற்றம்.

ஏழைகளின் தோழர், இந்திய அரசர், கரீபே நவாஸ், ஸாஹிபுல் ஜமால், ஹழ்ரத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தி (றழி) அவர்களினதும் அன்னாரின் அருந்தவப் புதழ்வர் ஸாஹிபுல் ஜலால் ஹழ்ரத் ஹாஜா பக்றுத்தீன் ஷிஷ்தி (றழி) அவர்களினதும் 25 வது வருட ஹாஜாஜீ மஹா கந்தூரிக்கான புனித திருக்கொடியேற்றம் இலங்கையில் காத்தான்குடி பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் இன்று மாலை 5.00 மணியளவில் ஆரம்பமானது.

புனித கொடியேற்றத்துக்காக விசேட அதிதிகளாக அதிசங்கைக்குரிய ஞானபிதா ​ஷெய்குத் தர்பிய்யஹ் மௌலவீ அல்ஹாஜ் அப்துர் ரஊப் மிஸ்பாஹி பஹ்ஜீ அவர்களும் மற்றும் சங்கைக்குரிய முபாறக் மௌலானா ஷிஷ்தி அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.

இந்நிகழ்வு தொடர்பான புகைப்படங்கள் எமக்கு உடனே கிடைத்துள்ளன. அவைகளைக் காண உள்ளே செல்லவும்.
அத்துடன் கவிஞர் எம்.ஏ.சி றபாய்தீனின் விசேட கவிதையும் பிரசுரிக்கப்பட்டுள்ளது

அந்நிகழ்வை ஆரம்பித்து வைக்குமுகமாக அல்ஹாஜ் மௌலவீ எம்.சீ.கே.முஹம்மது பஹ்ஜி அவர்கள் பாத்திஹா ஓத ஷெய்குனா மிஸ்பாஹி ஞானபிதா அவர்கள் நீண்டநேர துஆப்பிராத்தனை செய்ய அதனைத் தொடர்ந்து வருகை தந்த செய்யிதுஸ் ஸதாத் முபாறக் மௌலானா ஷிஷ்தி அவர்கள் புனித திருக்கொடியை பக்திப்பரவசத்துடன் பாவாமார்களின் தப் ஓசை முழங்க பக்தர்களின் கண்களில் கண்ணீர் வடிந்தோட விண்னைநோக்கி அண்ணல் ஹாஜா நாயகமவர்களின் திருக்கொடிகள் ஏற்றப்பட்டன.

















































அஜ்மீர் ஹாஜா அருள்மிகு ரோஜா.
இறையருள் பெற்ற ஹாஜா
இதயத்தில் மலர்ந்த ரோஜா
குறைக் கொள்கை குபுர் தன்னை
குவலயத்தல் ஒழித்த ராஜா
இறை மார்க்கம் இஸ்லாம் தன்னில்
எல்லோரையும் அழைத்த ஹாஜா
நிறை நபீ சென்ற வழியில்
நேராய் நின்ற ஹாஜா

இறை வணக்கம் செய்த ஹாஜா
இறைவனில் லயித்த ஹாஜா
மறைவேதம் குர்ஆன் தன்னை
மனதினில் வைத்த ஹாஜா
பொறுமையின் பொக்கிஷம் ஹாஜா
பெருமானார் பேரரே ஹாஜா
அருளுக்கும் அன்புக்கும் ஹாஜா
அவனது அடிமையே ஹாஜா

ஏழைக்கு இரங்குகின்ற ஹாஜா
எல்லோரையும் அனைபவரே ஹாஜா
நாளை மறுமை தன்னில்
நபீகளோடு இருப்பவர் ஹாஜா
பாலை மனங்கள் தன்னில்
பசுமையை நிறைத்தவர் ஹாஜா
கோழைத்தனத்தை ஒழித்து
கோனுக்காய் வாழ்தவர் ஹாஜா.

எம்.ஏ.சி றபாய்தீன்.

இந்தப் புகைப்படங்கைளை எமக்கு மின்னஞ்சல் மூலம் உடன் அனுப்பிவைத்த எமது அன்புக்குரிய அன்பருக்கும் கவிதையை யாத்து எமக்கு நேற்று அனுப்பிவைத்த கவிஞருக்கும் நமது நன்றிகள்

 
Design by Ahamiyam themes | Hosted by Fizmad - Ahamiyam,UK | Ahamiyam followship,UK