Friday, September 7

வெற்றிக்காக வாக்களிப்போம்!


பைசான் மதீனா. 

கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்காக 05.09.2012 நாளை இறுதித் தேர்தல் பிரச்சாத் தினம். காத்தான்குடியில் மஸ்ஜிது மன்பயில் ஹைறாத் பள்ளிவாயல் முன் வளவில் பெண்களுக்கான ஒரு விளக்கமளிக்கின்ற ஒன்றுகூடல் நிகழ்வு நடைபெறுகின்றது. அதில் சங்கைக்குரிய ஷெய்குநாயகம் அவர்கள் கலந்து சிறப்பிக்கின்றனர் என்ற செய்தி வந்தபோது அங்கே ஒரு பெரிய பொதுக்கூட்டத்தைப் போன்று மக்கள் வெள்ளமாக திரண்டு காணப்படுகின்றனர்.

சங்கைக்குரிய ஷெய்குநாயகம் அவர்கள் ஏற்கனவே தங்கள் மக்களின் விருப்பத்திற்கேற்ப ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பையும் அதில் போட்டியிடும் வேட்பாளர்களையும் ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.

அந்த வேண்டுகொளுக்கிணங்க சிப்லி பாறூக், அமீர் அலி மற்றும் அலி சாஹிர் மௌலானா ஆகிய மூன்று வேட்பாளர்களின் இலக்கங்களான இரண்டு, மூன்று, நான்கு ஆகிய விருப்பு இலக்கங்களுக்கும் வாக்களிக்க வேண்டும் என்ற அபிப்பிரயாயம் பரவலாக அவர்களின் முரீதீன்கள் முஹிப்பீன்களுக்கிடையில் காணப்படுகின்றது.

ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பை ஆதரித்து கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது அங்கு உரையாற்றிய சங்கைகுரிய மௌலவீ ஈழத்து கஸ்ஸான் இப்றாஹீம் நத்வீ அவர்கள் 

“ஷெய்கு நாயகம் அவர்கள் எதனை ஆதரிக்கச் சொன்னாலும் நாங்கள் அதனை ஆதரிப்போம் அதில் எந்த மாற்றுக்கருத்தும் எமது மக்கள் மத்தியில் கிடையாது. ஆனால் நாம் ஏன் அவர்களை ஆதரிக்க வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும் அப்போதுதான் எமது ஆதரவு பலமானதாக இருக்கும்” என்று கூறி அதற்கான காரணங்களை விளக்கமாக மக்கள் மத்தியில் சொல்லிக் கொண்டு சென்றார்கள். அவை அனைத்தையும் விரிவாக இங்கு எழுத முடியாமையால் அந்த பிரதான விடயங்களை இங்கு தருகின்றேன். 

ஒன்று எமது ஷெய்கு நாயகம் அவர்கள் அவர்களை கண்ணியப்படுத்துவதும் அவர்களின் பாதுகாப்பும் எமக்கு முக்கியமானது அத்துடன் அவர்களின் விருப்பத்திற்கு நாம் கட்டுப்பட்டே ஆகவேண்டும் அது தௌஹீத் வாதிகளாகிய எங்களின் கடமை அத்துடன் இந்த முடிவானது ஷெய்குநாயகம் அவர்களின் தனிப்பட்ட முடிவல்ல. எமது சூபித்துவத்தை பின்பற்றுகின்ற அனேகமான பொது மக்களின் முடிவு அதனையே தனது முடிவாகவும் ஷெய்கு நாயகம் அறிவித்தார்கள் என்று கூறியதுடன். 


எமது சமூகத்தின் தற்போதைய நிலை- எமது சமூகத்தில் வசிக்கின்ற மக்கள் பொருளாதார ரீதியில் நலிவுற்றவர்களாகவும் அவர்கள் வசிக்கின்ற பகுதிகள் அடிப்படை வசதிகள் அற்றதாகவும் காணப்படுகின்றது அவற்றை நாம் அபிவிருத்தி செய்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையாவது செய்து கொடுக்க வேண்டுமாயின் நாம் ஆளும் தரப்பை ஆதரிக்க வேண்டும் என்று கூறினார்கள். 

அடுத்தது எமது நிறுவனங்கள் எமது பள்ளிவாயலும் அதனுடன் இணைந்து செயற்படும் ஒன்பது நிறுவனங்களின் வளர்ச்சி அதன் செயற்பாடுகள் என்பற்றிக்காகவும் ஆளும் கூட்டமைப்பை நாம் ஆதரிக்க வேண்டும் என்று விளக்கமாக விடயங்களை கூறினார்கள். 

அதன்பின் உரையாற்றிய மௌலவீ கே.ஆர்.எம் ஸஹ்லான் றப்பானீ பீ.பீ.ஏ அவர்கள் இக்காலகட்டத்தில் எமது மக்களை திசைதிருப்புவற்காக எதிர் கட்சிகாரர் செய்கின்ற சதிகளைப்பற்றி விளக்கி வைத்தார்கள். 

அதனை தொடர்ந்து உரையாற்றிய சங்கைக்குரிய ஷெய்குநாயகம் அவர்கள் தனது உரையில் 

“நாங்கள் மௌலவீமார்கள் இஸ்லாத்தைப் பற்றி அறிந்தவர்கள் அதிகம் அரசியல் தெரியாதவர்கள். அரசியில் பேசுவதற்கு இங்கே அரசியல்வாதிகளான பிரதி அமைச்சர் தாஜுல் மில்லத் ஹிஸ்புழ்ழாஹ் சேர், சிப்லி பாறூக், நமது பிரதி நகர முதல்வர் அல்ஹாஜ் ஜெஸீம் போன்றவர்கள் இருக்கின்றார்கள். 

நாம் தேர்தலில் வாக்களிப்பதற்கு முன்னர் ஒற்றுமையாக இருக்க வேண்டும் அல்லாஹ் குர்ஆனிலே ஒன்றுமைப் பற்றிக்கூறும் போது ஒற்றுமை எனும் கயிற்றை பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் என்றுதான் கூறிப்பிடுகின்றான். 

வஹ்தஸிமு பி ஹப்லில்லாஹீ  வலாததபர்ரகூ

இவ்வசனத்தில் வஹ்தஸிமூ என்ற சொல் இறுக்கமாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் என்பதைக் குறிக்கின்றது அப்படியாயின் நீங்கள் ஒற்றுமையனும் கயிற்றை இலேசாகப் பி டித்தால் அதிலிருந்து வழுகி விடுவீர்கள் என்று அர்த்தம் எனவே அனைவரும் மிகவும் இறுக்கமான உறவுகளுடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.


நாங்கள் வெத்திலைச் சின்னத்திற்கு வாக்களிப்பது வாஜிபு ஏன் எந்த அடிப்படையில் அப்படிச் சொல்வீர்கள் என்று நீங்கள் கேட்கலாம்? அதற்கு காரணம் மனிதன் ஒரு உதவி செய்தால் அதற்கு நன்றி சொல்வது எமக்கு வாஜிபு கடமை என்று கூறி அதனை மிகவும் ஆழமாக விளக்கினார்கள். 

அத்துடன் மேலும் உரையாற்றிய ஷெய்குநாயகம் அவர்கள் “எனக்கு ஜனாதிபதி அவர்கள் காத்தான்குடிக்கு வந்தபோது பிரதி அமைச்சர் அவர்களின் அலுவலகத்தில் வைத்து நடத்தப்பட்ட விருந்தில் நானும் ஜனாதிபதி அவர்களுடன் அமர்ந்து சாப்பிடும் வாய்புக் கிடைத்தது. அதி மேதகு ஜனாதிபதி அவர்களுடன் அமர்ந்து ஒன்றாக சாப்பிடும் சந்தர்ப்பம் ஹிஸ்புல்லாஹ் சேர் அவர்களுக்குக் கூட கிடைக்கவில்லை. பாதுகாப்புக் காரணங்களுக்காக பத்துப்பேருக்கு மட்டுமே அந்தச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.


அந்தச் சந்தர்ப்பத்தின்போது நான் ஜனாதிபதி அவர்களின் முகத்தைப் பார்த்தேன்- பல பெரியார்களும் ஞானிகளும் ஒருவருடைய முகத்தைப்பார்த்து அவர்களை எடை போடக்கூடியவர்களாக இருந்தார்கள். நம்மில் கூட சிலர் ஒருவருடைய முகத்தைப் பார்த்தால் அவரின் குணத்தைக் கூறி விடுவார்கள். 

அந்த அடிப்படையில் ஜனாதிபதி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது நான் அவரின் முகத்தை கூர்ந்து கவனித்தேன். அதில் எனது மனம் சந்தோசப் பட்டது அவர் மிகவும் நல்லவர். அவரின் முகம் மிகவும் பிரகாசமானதாக இருந்தது என்று குறிப்பிட்டார்கள். 

ஆகவே, சிலர் சொல்வதைப் போன்று இலங்கையின் மேதகு ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் இனவாதிகள் அல்லது கரடு முரடானவர்கள் அல்ல அவர்கள் மிகவும் நல்லவர்கள் ஆகவே நாம் அவர்களை ஆதரிக்கத் தீர்மானித்தோம் என்று கூறியதுடன் இன்னோரென்ன பல விடயங்களையும் மக்களுக்கு விளங்கப்படுத்தி தனது உரையினை நிறைவு செய்தார்கள். 


அதற்குப் பின் பேசிய கிழக்கு மகாண அபிவிருத்திக்குழுத் தலைவரும், சிறுவர் அபிவிருத்தி மகளீர் விவகாரப் பிரதி அமைச்சருமான தாஜூல் மில்லத் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் தனது உரையில் 

“நாம் எமது காலத்தின் முன் ஏற்படுத்தப்பட்ட மார்க்கப் பிரச்சினையை இந்த ஊரில் இல்லாதொழித்து அதனை மிகவும் சுமூகமாகவும் கௌரவமாகவும் தீர்த்து வைத்தோம். அதே போல் எமது நாட்டை எமது அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் மீட்டெடுத்தார்கள். யுத்தகாலத்தில் எல்லைப் புறங்களில் வாழும் மக்களாகிய நீங்கள் எவ்வளவு பிரச்சினைகளை எதிர் நோக்கினீர்கள் இன்று நிம்மதியாக வாழ்கின்றீர்கள். 


யுத்தத்தின் பின்னால் நமது நாட்டில் அதி மேதகு ஜனாதிபதி அவர்கள் அதன் உற்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்து கொண்டிருக்கின்றார்கள். தற்போது சகல வீதிகளும் பாலம்களும் பல கோடி ரூபாய்கள் செலவில் புணரமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற. இது ஒரு வகையான அபிவிருத்தி இது முடிவுற்றதும். 

இங்கு வாழும் மக்களின் வருவானத்தை அதிகரிப்பற்கான பாரிய திட்டங்கள் முன்னெடுக்கப்படும் நாமும் எமது அமைச்சினூடாக இப்பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்கையை மேன்படுத்தும் திட்டம் ஒன்றை செயற்படுத்த உள்ளோம். அதனை ஒரு என்.ஜி.ஓ ஊடாகத்தான் செய்ய முடியும் அதற்காக உங்களின் பகுதியில் செயற்படும் அஷ்ஷூப்பான் அமைப்பையே நாம் தெரிவு செய்ய உள்ளோம். 

நான் பேச்சை ஆரம்பிக்கும்போது சங்கைக்குரிய ஷெய்குநாயகம் என இவர்களைக் குறிப்பிட்டேன் அவர்கள் எனக்கு ஷெய்குதான் காரணம் நான் பாடசாலையில் கல்வி கற்கும்போது எனக்கு பாடசாலையில் இஸ்லாம் பாடத்தை இவர்கள்தான் படிபித்தார்கள் என்றும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார். 

அத்துடன் அடுத்து எமது பிரதேசத்தில் நடைபெறவிருக்கும் பல அபிவிருத்தித் திட்டங்களை விரிவாக விளக்கியதுடன் பேச்சை நிறைவு செய்தார் பிரதி அமைச்சர் அவர்கள். 

அதனை தொடர்நது ஸலவாத்துடன் அரசியல் ஒன்றுகூடல் இனிதே நிறைவு பெற்றது.


அல்ஹம்துலில்லாஹ் 
-----------------------------------------------
அன்புடன் 
பைசான் மதீனா

 
Design by Ahamiyam themes | Hosted by Fizmad - Ahamiyam,UK | Ahamiyam followship,UK