இலங்கையில் காத்தான்குடி பத்ரியா ஜூம்மாப் பள்ளிவாயலில் முப்பெரும் அவ்லியாக்களின் கந்தூரி நாளை வெள்ளிக்கிழமை 03.09.2010 புனித ரமழான் 24ம் இரவு நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு அவ்லியாக்களின் பெயரில் கத்தமுல் குர்ஆன் நிகழ்ச்சியுடன் கந்தூரியும் நடைபெறவுள்ளது.
1. இந்தியாவின் ஹைதராபாத் மானிலத்தின் சம்சியாபாத்தில் வாழ்ந்து அங்கேயே அடக்கம் செய்யப்பட்டுள்ள அஷ் ஷேக் அப்துல் காதிர் சூபி ஹைதராபாதி நாயகம்.
2. இந்தியாவின் தமிழ் நாட்டின் காயல் பட்டணத்தில் பிறந்து அங்கேயும் இலங்கையிலும் வாழ்ந்து கொழும்பு குப்பியாவத்தையில் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் அஷ் ஷேக் அப்துர் காதிர் சூபி நாயகம்
3. இலங்கையில் காத்தான்குடியில் பிறந்து இந்தியாவில் கல்வி கற்று இலங்கையில் அட்டாளைச் சேனையில் சமாதி கொண்டிருக்கும் அஷ் ஷேக் அகமது மீரான் வெள்ளி ஆலிம் நாயகம் ஆகிய மூவருமாவர்.
இவர்களின் இந்த சிறப்பான தினத்தை கண்ணிப்படுத்தும் முகமாக அதி சங்கைக்குரிய சம்சுல் உலமா மௌலவி அல்ஹாஜ் அப்துர் ரஊப் மிஸ்பாஹி பஹ்ஜி அவர்கள் கடந்த காலத்தில் இப்புனிதமிகு வைபவத்தில் ஆற்றிய உரையை பிரசுரித்துள்ளோம்.